அனோஜனின் மன்னிப்பு கோர ஆளும்,எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் குழு விரைவில் சவூதி பயணம்
-
Editor
-
September 28, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேன்முறையீட்டுக் கடிதம் ஒன்றை சவூதி அரேபிய மன்னரிடம் சமர்ப்பிக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று விரைவில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த மேன்முறையீடு மனிதநேய அடிப்படையில் முன்வைக்கப்படவுள்ளது. இதனிடையே,சிவராசா சார்பாக மேன்முறையீடு ஒன்றைத் தாக்கல் செய்வதற்காக வெளிவிவகார அமைச்சு சவூதி அரேபியாவிலுள்ள சட்ட நிறுவனம் ஒன்றுடன் தொடர்புகொண்டுள்ளது. இந்த மேன்முறையீடு எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் …
Continue Reading
அனோஜனுக்கு கருணை மன்னிப்பு கோரி சவூதி மன்னருக்கு முஸ்லிம் எம்.பிக்கள் கடிதம்
-
Editor
-
September 28, 2026
-
அரசியல்
-
அரசியல்
-
0 Comments
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான சிவரசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு கோரி, சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத்துக்கு இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், பிரதி அமைச்சர்களான முனீர் முளப்பர் மற்றும் அர்கம் இல்யாஸ் உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையொப்பமிட்டுள்ளனர். அனோஜன் …
Continue Reading
வெடுக்குநாறிமலைக்கு புத்தர் சிலை வந்தமையால் பதற்றம்
-
Editor
-
September 28, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டதை அடுத்து பதற்றமான நிலைமை ஏற்பட்டது. புரட்டாதிச் சனிக்கிழமையை முன்னிட்டு, 26-09-2026 அன்று வெடுக்குநாறி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக காலை முதலே ஒன்றுகூட ஆரம்பித்தனர். ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, அவர்களின் பெயர் மற்றும் விவரங்களை முழுமையாகப் பதிந்த பின்னரே பொலிஸாரால் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உள்ளே சென்றபோது அங்கு பௌத்ததேரர் தலைமையில் வருகை …
Continue Reading
திலீபனின் 39ஆவது நினைவேந்தல் வட,கிழக்கில் முன்னெடுப்பு
-
Editor
-
September 28, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை இன்னுயிரென மதித்து ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 26-09-2026 அன்று வட,கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, அரசியல்வாதிகள், சமயத்தலைவர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், இளைஞர் யுவதிகள், மாணவர்கள் என்று பலரும் பங்கேற்றிருந்தனர். நல்லூர் யாழ்.நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான …
Continue Reading
ரில்வின் குழுவினர் அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திப்பர்
-
Editor
-
September 28, 2026
-
அரசியல், தமிழ் Header
-
அரசியல்
-
0 Comments
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவொன்று நேற்று புதுடில்லி நோக்கி பயணமாகியுள்ள நிலையில் அக்குழுவினர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் புதுடில்லியில் தங்கியுள்ள இக்குழுவினர் மேற்படி சந்திப்புக்கு மேலதிகமாக பா.ஜ.கவின் தேசியப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்களைச் சந்திக்கவுள்ளனர். அத்துடன், பா.ஜ.க. தலைமையகத்தில் பல்வேறு பா.ஜ.கவின் அணியினரையும் தலைவர்களையும் சந்திப்பதுடன், இந்திய பாராளுமன்றம் …
Continue Reading
உலக சுற்றுலா தினம் -2026 – ‘சுற்றுலாத்துறையை மறுவடிவமைக்க டிஜிட்டல் செயல்திட்டமும் செயற்கை நுண்ணறிவும்’
-
Editor
-
September 28, 2026
-
விவரணங்கள்
-
விவரணங்கள்
-
0 Comments
கலாநிதி திருமதி சுபாஜினி உதயராசாசிரேஷ்ட விரிவுரையாளர்புவியியற்றுறை, யாழ்.பல்கலைக்கழகம் உலகில் சுற்றுலா ஒரு பயன்மிகு தொழிலாக விளங்குகின்றது. ஒரு நாட்டின் கண்ணுக்குத் தெரியாத ஏற்றுமதிப் பொருள் தான் சுற்றுலா. சுற்றுலா மூலம் ஒரு நாடு பல்வேறு வழிகளில் பயன் பெறுகிறது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலாவில் நாட்டின் பொருளாதாரமும் உண்டு என்பதை விபரிக்கும் நோக்கிலும் உலக சுற்றுலாதினம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொனிப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் உலக சுற்றுலா அமைப்பு 2026ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுலா தினத் தொனிப்பொருளாக ‘சுற்றுலாத்துறையை …
Continue Reading
புதிய நாணய நிதிய ஒப்பந்தம் நாட்டுக்குத் தேவை;சஜித் பிரேமதாச
-
Editor
-
September 28, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
நாட்டின் வறுமையை ஒழித்து, ஏற்றுமதியை மேம்படுத்தி, விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 220 இலட்சம் மக்களுக்கும் நிவாரணம் வழங்கக்கூடிய புதிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் நாட்டுக்குத் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 26-09-2026 அன்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அதன் சுமை கோடிக்கணக்கான …
Continue Reading
ஊழல் எதிர்ப்புச்சட்டத்தின் உத்தேச திருத்தங்கள் முன்னைய அடைவுகளை பலவீனப்படுத்திவிடக்கூடாது; நாணய நிதியம்
-
Editor
-
September 28, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
அண்மைய ஆண்டுகளில் ஊழல் ஒழிப்பு தொடர்பான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களில் இலங்கை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை அடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ, இருப்பினும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்த யோசனைகளால் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நாடு அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் பலவீனமடைந்துவிடாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 7 ஆம் கட்ட மீளாய்வு மற்றும் உறுப்புரை 4 தொடர்பான இவ்வாண்டுக்கான கலந்தாய்வு என்பன நாட்டுக்கு வருகைதந்திருந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளினால் …
Continue Reading
எரிபொருள் நிவாரணத்துக்காக எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்கு 4100 கோடி ரூபா ஒதுக்கீடு; ஜனாதிபதி அநுர
-
Editor
-
September 28, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
உலக சந்தையில் எரிபொருள் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகின்ற நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பை ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் மீது சுமத்தபோவதில்லை. எரிபொருள் நிவாரணத்துக்காக எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்கு 4100 கோடி ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கம்பஹாவில் 28-09-2026 அன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பொருளாதார முன்னேற்றத்தின் உச்சபயனை நாட்டு மக்களுக்கு முழுமையாக வழங்குவேன். 5000 ரூபா பகிர்ந்தளித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் கலாசாரத்தை …
Continue Reading
NMSJ urges lawmakers to avoid conflict of interest in proposed 22A
-
Editor
-
September 27, 2026
-
Uncategorized
-
Political
-
0 Comments
The National Movement for Social Justice (NMSJ) has urged lawmakers to carefully reconsider the proposed extension of the terms of judges of the Supreme Court and Court of Appeal under the 22nd Amendment to the Constitution, warning that the reform could place the Supreme Court in a position where it has to hear a case concerning the tenure of its …
Continue Reading