அரச சேவையை முறையாகப் பேணுவதற்காக நியமிக்கப்பட்ட குழு மூன்றாவது முறையாகக் கூடியது
அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நேற்று (01) நடைபெற்றது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காகக் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது. அதேபோன்று, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள், அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது மற்றும் …
Continue Reading
சட்டவிரோத பீடி இலை கடத்தலைத் தடுப்பது குறித்து பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடல்
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்படும் பீடி இலைகளால் அரசாங்கத்திற்கு ஏற்படும் வருமான இழப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேநேரம், பீடி கைத்தொழில் உள்ளவர்களைப் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு வலியுறுத்தியது. பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. பீடி உற்பத்திக்குப் பயன்படும் இலைகளை இறக்குமதி செய்வதற்கு வரி அறவிடப்படும் நிலையில், பெருந்தொகையான இலைகள் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் …
Continue Reading
நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களுடைய நியமனங்களுக்குபாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம்
பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களுடைய நியமனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது. கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (20) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.எஸ்.துய்யகொந்தா (ஓய்வு) அவர்களின் நியமனத்திற்கும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளராக எல்.மொஹமட் நவவி அவர்களின் நியமனத்திற்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக டபிள்யூ.எம்.டி.ரி.விக்ரமசிங்க அவர்களின் நியமனத்திற்கும், துறைமுகங்கள் …
Continue Reading
176,527 பேர்பல்கலைக்கழகஅனுமதிக்குவிண்ணப்பிக்கதகுதி
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 1,76,527 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். தித்வா புயல் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகத் தாமதமாகி நடைபெற்ற இத்தேர்வில், ஒட்டுமொத்தமாக 62.64 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், வழமை போன்றே இம்முறையும் பெரும்பாலான பாடப்பிரிவுகளில் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்று முன்னிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பிலுள்ள இலங்கை பரீட்சை திணைக்களத்தின் …
Continue Reading
இலங்கையின்கோரிக்கைமொஸ்கோவில்பரிசீலனையில்உள்ளது; பிரதிவெளிவிவகாரஅமைச்சர்
-
Editor
-
April 2, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதில் நேர்மறையான முடிவுகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம். எங்களது பிரதி அமைச்சர் மார்ஷாவினிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது மொஸ்கோவில் பரிசீலனையில் உள்ளன. கூடுதல் எண்ணெய் தேவைப்படும் ஒரே நாடு இலங்கை மட்டுமல்ல. எங்களிடம் உள்ள வளங்களைக் கொண்டு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமா என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரே ருடென் தெரிவித்தார். கொழும்பில் 01-04-2026அன்று ஊடகவியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் நடத்திய அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில் கேள்வி இலங்கைக்கு ரஷ்யா எரிபொருளை வழங்குமா? பதில் கடந்த வாரம் எங்களது எரிசக்தித் துறை துணை அமைச்சர் இங்கு (இலங்கை) மேற்கொண்ட பயணம், ஒரு நல்ல உடன்படிக்கைக்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இலங்கைக்கு எரிசக்தி வழங்குவதில் நேர்மறையான முடிவுகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம். எங்களது பிரதி அமைச்சர் மார்ஷாவினிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது மொஸ்கோவில் பரிசீலனையில் உள்ளன. கூடுதல் எண்ணெய் தேவைப்படும் ஒரே நாடு இலங்கை மட்டுமல்ல. எங்களிடம் உள்ள வளங்களைக் கொண்டு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமா என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம். ரஷ்யாவின் இயற்கை வளங்கள் அளவற்றவை அல்ல. எங்களது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் பெற பல நாடுகள் வரிசையில் நிற்கின்றன. எனினும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களை நாங்கள் முழுமையாக நிறைவேற்றுவோம். ரஷ்யாவின் வளங்களைப் பெற விரும்பும் அனைத்து நாடுகளுக்கும் அவற்றை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஆசிய நாடுகள் அனைவரிடமும் நாங்கள் கொண்டுள்ள நல்உறவில் இருந்து நாங்கள் மாறவில்லை. எங்கள் கொள்கை உறுதியானது; அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி வளங்களை வாங்குவதற்கான தடையை அமெரிக்கா இப்போது நீக்கியுள்ளது. ஆசியப் பிராந்திய நாடுகள் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஆசிய நாடுகளுடனான எங்களது உறவு உடனடி வணிகம் முறையில் அமையாமல், கச்சா எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி போன்ற எரிசக்தி துறைகளில் நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமையவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள ‘இரண்டாம் நிலைத் தடைகள்’ காரணமாக, ரஷ்யாவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்த நாடுகள் தயங்குகின்றன. அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு இலக்காகிவிடுவோமோ என்ற அச்சத்தால், அந்த நாடுகளுடனான எங்களது எரிசக்தி ஒத்துழைப்பில் தற்காலிக சரிவு ஏற்பட்டது வருத்தத்திற்குரியது. இப்போது நிலைமை மாறியுள்ளது. மீண்டும் சொல்கிறேன், எந்தவொரு நாட்டினதும் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு என்பது அமெரிக்கா தனது கூட்டாளிகளுக்கு வழங்கும் ஒரு சிறிய ‘வாய்ப்பை பயன்படுத்துவதாக இல்லாமல், நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். கேள்வி: இலங்கையில் இரண்டு சிறிய அணுமின் நிலையங்களை அமைப்பது குறித்து பலமுறை பேசப்பட்டது. அமைச்சர்கள் கூட ரஷ்யா சென்று வந்தனர். ஆனால் அது ஏன் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை? பதில்: இலங்கையில் அணுசக்தி திறனை மேம்படுத்துவதில் ஆர்வம் இருப்பதை நான் அறிவேன். ஆனால் இந்தத் திட்டம் ஏன் இன்னும் தொடங்கவில்லை என்பதற்கான துல்லியமான காரணங்கள் எனக்குத் தெரியாது. எங்களிடம் மிதக்கும் சிறிய அணுமின் நிலையம் என்ற ஒரு தனித்துவமான தொழில்நுட்பம் உள்ளது. இது ஒரு மிகப்பெரிய கப்பலில் அமைக்கப்பட்ட மின் நிலையம். எந்த நாட்டுக்காவது மின்சாரம் தேவைப்பட்டால், இந்தக் கப்பல் அந்த நாட்டின் கரைக்கு அருகில் வந்து மின்சாரம் வழங்க முடியும். இத்தகைய தொழில்நுட்பம் ரஷ்யாவிடம் மட்டுமே உள்ளது. இலங்கை விரும்பினால் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்.” கேள்வி: ரஷ்யா எரிபொருளை டொலருக்கு வழங்குமா? அல்லது ருபிள் நாணயத்துக்கு வழங்குமா? பதில்: மற்ற நாடுகளுடனான எங்களது வர்த்தகம் டொலர் அல்லது யூரோ போன்ற முக்கிய நாணயங்களிலிருந்து விலகி, மிக வேகமாக தேசிய நாணயங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகளவில் டொலரின் ஆதிக்கம் குறைகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு உலக வர்த்தகத்தில் டொலரின் பங்கு சுமார் 67 வீதமாக இருந்தது. ஆனால் இப்போது அதன் பங்கு சுமார் 40 வீதமாக குறைந்துள்ளது.
Continue Reading
கனடிய உயர்ஸ்தானிகருடன் மனோகணேசன் சந்திப்பு
மலையக தமிழரின் அனைத்து பிரச்சினைகளையும், தொழிலாளர் பிரச்சினையாக சுருக்குவது முறையற்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கனடிய உயர்ஸ்தானிகரிடத்தில் எடுத்துரைத்துள்ளார். கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெல்லா மார்டினை, கனடா இல்லத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுகுழு சந்தித்து உரையாடியது. இதன்போது அரசியல் குழு உறுப்பினர்கள், பரணீதரன், பாரத் அருள்சாமி, ஆகியோரும் கலந்து கொண்ட இச்சந்திப்பு பற்றி கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததாவது; இறுதி கட்ட போர் காலத்தில், கொழும்பு தெருக்களில் திரிந்த வெள்ளை வேன் கடத்தல்களுக்கு எதிரான எனது …
Continue Reading
பெரியஅண்ணன்இந்தியாவிடமிருந்துகூடுதல்ஒத்துழைப்பைஎதிர்பார்க்கிறோம்; பாதுகாப்புசெயலர்
“எதிர்காலத்திலும், எமது அண்டை நாடு மற்றும் இலங்கையின் பெரிய அண்ணன் என்ற ரீதியில், பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை இந்திய அரசாங்கத்திடமிருந்து இன்னும் பல விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அதன் மூலம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்த தெரிவித்தார். கொழும்பில் 25-03-2026 அன்று நடைபெற்ற இந்திய – இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கில் பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்த, இரு …
Continue Reading
இலங்கையின்பாதுகாப்புத்தேவைகளில்இந்தியாநிலையானபங்காளியாகஇருக்கும்; இந்தியஉயர்ஸ்தானிகர்
இலங்கையும் இந்தியாவும் ஒரே புவியியல் அமைப்பைப் பகிர்ந்து கொள்வதுடன், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் ஆழமான வரலாற்று நலன்களைக் கொண்டுள்ளன. இலங்கையின் பாதுகாப்புத் தேவைகளுக்கு இந்தியா எப்போதும் ஒரு நம்பிக்கைக்குரிய மற்றும் நிலையான பங்காளியாக இருக்கும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். கொழும்பில் 25-03-2026 அன்று நடைபெற்ற “இலங்கை இந்திய பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் இதனை குறிப்பிட்டார். இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேலும் உரையாற்றுகையில் தற்போதைய உலகளாவிய ரீதியிலான போர்ச் சூழல்கள் மற்றும் கொந்தளிப்பான …
Continue Reading
அரசசேவையைசீராகமுன்னெடுப்பது குறித்து பிரதமர் ஹரிணி தலைமையில் ஆராய்வு
அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி 24-03-2026 அன்றுஅலுவலகத்தில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் தடையின்றி வழங்குவது குறித்தும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, சுகாதாரம், கல்வி, நீதி ஆகிய அமைச்சுகளின் சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இங்கு ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, திட்டமிட்டபடி …
Continue Reading
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு முதல் தடைவையாகக் கூடியது
தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் முதல் தடவையாக 2026.03.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த விசேட குழுவின் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கு, தித்வா புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது சம்பந்தப்பட்ட பொறுப்புள்ள நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைப் பற்றிய புரிதலைப் …
Continue Reading