சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் நேற்று (ஏப். 09) சான்றுரைப்படுத்தினார். சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (அறவீடு) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் 2026.04.07ஆம் திகதி இடம்பெற்றதுடன், இரண்டாவது மதிப்பீடு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக 2022ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டம் திருத்தப்படுவதுடன், இந்த வரி விதிப்பிற்கான பதிவிற்குத் தேவைப்படும் விற்பனைவரவு வரம்பைக் குறைப்பதும், மோட்டார் வாகனங்கள் தொடர்பான …

Continue Reading

இலங்கை அஞ்சல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்

இலங்கை அஞ்சல் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டது. இங்கு 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன், 2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தபால் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 2021-2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் மூன்று வருட அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் …

Continue Reading

தனி்ப்பட்ட தகவல்களை திருடும் மோசடி பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு; டிஜிட்டல் பொருளாதார அமைச்சு 

ஆட்பதிவு  திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தை ஒத்த எண்களைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான போலியான அழைப்புகள் அல்லது செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின்  துரித தொலைபேசி இலக்கத்தை ( 115226126) ஒத்த +94115226126 மற்றும் +0115226126 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், வாட்ஸ்அப் செய்திகள் ஊடாகவும் இனந்தெரியாத தரப்பினர் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் ஆட் பதிவு திணைக்களத்தின் அதிகாரிகள் எவரும் மேற்கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அழைப்புகளை  மேற்கொள்வதில்லை. இவ்வாறான இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளின் போது உங்களது அடையாள தேசிய அடையாள அட்டை விபரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்த்துக் கொள்ளவும். அண்மையகாலமாக இடம்பெறும் இவ்வாறான மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம். அவ்வாறான சந்தேகத்திற்கிடமான அழைப்புகள்  ஏதும் கிடைக்கப்பெறும்பட்சத்தில்  உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  04-08-06. விசாரணைகள் தீவிரமடையும் போது கம்மன்பில பதற்றம்; அமைச்சர் விஜித ஹேரத் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் முறைப்படி பலப்படுத்தி முன்னெடுத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில போன்றவர்கள் தேவையற்ற முறையில் பதற்றமடைகின்றனர். இது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பதில் அமைச்சரவை …

Continue Reading

இலங்கையின் முதலாவது பாலின சமத்துவ மதிப்பீடு அறிக்கை வெளியீடு

பாலின சமத்துவம் தொடர்பில் ஆதாரபூர்வமான கொள்கை உருவாக்கம் மற்றும் மூலோபாய முதலீடுகளுக்குப் பங்களிப்புச் செய்யக்கூடியவகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘நாடு அடிப்படையிலான பாலின சமத்துவ மதிப்பீடு’ எனும் விரிவான பகுப்பாய்வு அறிக்கை ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கிறிஸ்டின் அரப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கிறிஸ்டின் அரப் கடந்த மார்ச் மாதம் 25 – 26 ஆம் திகதி வரை இலங்கைக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது தொழிலாளர் …

Continue Reading

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று பிற்பகல் (07) பாராளுமன்றத்தில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்தும், வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் போதும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போதும் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய …

Continue Reading

புத்தாண்டுகாலஇணையவழிமோசடிகள்குறித்துப்பொதுமக்களுக்குபொலிஸார்எச்சரிக்கை

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டுப் பரிசில்கள் மற்றும் சலுகைகள் வழங்குவதாகத் தெரிவித்துச் சமூக வலைத்தளங்களின் ஊடாகப் பகிரப்படும் விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகளை அனுகுவதன்  மூலம் மோசடிக்காரர்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, பணத்தைச் சூறையாடும் வாய்ப்புள்ளதால்  எனவே, பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில், பொதுமக்கள் பொருட்கொள்வனவு மற்றும் கட்டணங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காக இணையத்தளங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இணையவழி ஊடாக நிதி மோசடி மற்றும் தரவுத் தகவல்  திருட்டில் ஈடுபடும்  மோசடிகாரர்கள், பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் மக்களின் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் அபாயம் காணப்படுவதாக  பொலிஸாரால் அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் உடனடி பண இலாபத்தை எதிர்பார்க்கும் நோக்கில், சில குழுவினர் இவ்வாறான மோசடி வலைகளில் சிக்கிக்கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது. அண்மைக்காலமாக இவ்வாறான மோசடிகள் குறித்துப் பொலிஸ் நிலையங்கள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளும் அதிகரித்துள்ளன.  சமூகவளைத்தங்களில் பகிரப்படும் விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள், புத்தாண்டு சலுகைகள், அன்பளிப்புகள், போலியான வர்த்தக இணையத்தளங்கள் மற்றும் வங்கி இணையத்தளங்கள் ஆகியவற்றின் ஊடாக மோசடிக்காரர்கள் பொதுமக்களின் தகவல்களை நுணுக்கமான முறையில் திருடுகின்றனர்.  அதற்கும் மேலதிகமாக, தற்போது வங்கிச் செயலிகளைப்  புதுப்பிக்குமாறு கோரும் போலியான செய்திகள், போலியான  கிவ்.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யத் தூண்டுதல், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி ஊடான மோசடிகள்  மற்றும் அழைப்பாளர் அடையாளத்தை மாற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உத்திகளைக் கையாண்டு இவ்வாறான குழுக்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றன. அதுமாத்திரமின்றி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் உருவப்படங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் முன்னெடுக்கப்படலாம். இதன் ஊடாகத் தனிப்பட்ட தரவுகளைத் திருடி, இலக்கு வைக்கப்பட்ட மோசடித் தாக்குதல்கள் மற்றும் அடையாளத் திருட்டுகளை  முகந்தெரியாத குழுவினர் மேற்கொள்கின்றனர். ஆகையால்  இணையவழி ஊடாகப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போது மிகவும் அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். 

Continue Reading

இலங்கையில் அரசியல் உரிமைகள், சிவில் சுதந்திரம்குறிப்பிடத்தக்க முன்னேற்றம்  ; ‘ப்ரீடம் ஹவுஸ்’ அறிக்கையில் தெரிவிப்பு

உலக அளவில் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து 20ஆவது ஆண்டாகச் சரிவைச் சந்தித்து வரும் நிலையிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கையில் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக ‘ப்ரீடம் ஹவுஸ்’  (Freedom House)    அமைப்பின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ப்ரீடம் ஹவுஸ் அமைப்பு, தனது ‘உலகில் சுதந்திரம் 2026’ என்ற வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை தனது புள்ளிகளில் 5 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் …

Continue Reading

21 முஸ்லிம் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கூட்டாக விடுத்துள்ள வேண்டுகோள்

கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயத் தகனக்கொள்கை தொடர்பில் சுயாதீனமானதும், நம்பகமானதுமான விசாரணைகளை நடாத்தி, பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும், இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் 21 முஸ்லிம் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு முற்றிலும் விரோதமாக கொவிட் – 19 பெருந்தொற்றினால் மரணித்தோரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யும் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 31) ஆறு ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், அக்கொள்கை அமுலாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதுடன் …

Continue Reading

அரச வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாடு முதலாவது தேசிய வழிகாட்டல் வெளியீடு

அரச வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாட்டை முறைப்படுத்தும் நோக்கில், இலங்கையின் முதலாவது தேசிய வழிகாட்டிக் கையேடு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் அண்மையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் முடிவாக இந்த வழிகாட்டல் கையேடு தொகுக்கப்பட்டுள்ளது.  இதனை நடைமுறைப்படுத்த , சுகாதாரப் பணியாளர்களுக்கான விசேட பயிற்சித் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 100 நிபுணர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் ஊடாக மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலுள்ள ஏனைய பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன. நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரச வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாட்டிற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெருமளவு நிதியைச் செலவிடுகிறது.  ஆகையால் இவ்வாறான முறையான வழிகாட்டல்கள் மூலம் தேவையற்ற விரயங்களைக் குறைத்து, நோயாளர்களுக்குத் தரமான சிகிச்சையை வழங்க முடியும்.  மேலும், திஸ்ஸமஹாராம, அவிசாவளை, உடுகம மற்றும் கேகாலை ஆகிய வைத்தியசாலைகளில் தற்போது ஒட்சிசன் உற்பத்தி அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. மேற்படி பிரிவுகளின் மூலம் அவ்வைத்தியசாலைகளுக்கு அவசியமான ஒட்சிசன்  தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடிவதுடன், மேலதிக ஒட்சிசனை ஏனைய வைத்தியசாலைகளுக்கும் வழங்கக் கூடியதாக உள்ளது. அத்தோடு இந்த வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் சுகாதாரத் துறையினரின் நிபுணத்துவத்தை மேம்படுத்த உதவும் என்றார்.

Continue Reading

ஒத்துழைப்பைவலுப்படுத்தல்குறித்துமொஸ்கோவில்உயர்மட்டசந்திப்பு

ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புக்களை நடாத்தியுள்ளார். அதற்கமைய ரஷ்யாவின் சர்வதேச விவகாரங்களுக்கான குழுவின் முதல் துணைத்தலைவர் ஆன்ட்ரே டெனிஸோவை சந்தித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இருநாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற ஒத்துழைப்பு, போக்குவரத்து இணைப்பு மற்றும் பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தல் என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதேபோன்று இருநாட்டு நாடாளுமன்ற உறவுகளை வலுப்படுத்துவதுடன் நட்புறவுக்குழுக்களை நிறுவும் நோக்கில் யுனைடெட் …

Continue Reading