நாட்டின்  கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தமை மிகப்பெரும் மரியாதை; எரான் விக்கிரமரத்ன

நாட்டின் கிரிக்கெட் முன்னேற்றத்தை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு மிகப்பெரிய மரியாதையாகும். ஜனாதிபதி அநுர மற்றும் அமைச்சரின் அழைப்பை அடுத்து விரிவான கலந்துரையாடல்களின் பின்னர், இந்தப் பொறுப்பை ஏற்க நான் சம்மதித்தேன். இப்பதவியை  நான் மிகுந்த பொறுப்புடன் ஏற்றுக்கொள்கின்றேன் என்று சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிறைவேற்றுக் குழுவின் தலைவரான எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். அவர் நேற்று முன்தினம் பதவியை ஏற்றுக்கொண்டதையடுத்து விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் …

Continue Reading

ஞானசார தேரருக்கு எதிராக  குற்றப்பத்திரிகை கையளிப்பு 

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட கருத்து ஒன்றின் மூலம் இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக  குற்றச்சாட்டப்பட்டு , பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய, பிரதிவாதியான ஞானசார தேரர் 30-04-2026 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார். இதனைத் தொடர்ந்து, பிரதிவாதியின் விரல் ரேகை அடையாளங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சீ. ராகல, சந்தேகநபரான ஞானசார  தேரரை 5 …

Continue Reading

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சு அதிகாரி மர்மான முறையில் மரணம்

நிதியமைச்சின் கீழ் உள்ள வெளிநாட்டு வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றிய ரங்க ராஜபக்ஷ மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வைத்து அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 30-04-2026 அன்று குறித்த உதவிப் பணிப்பாளர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் குறிப்பிட்டார். அவர் தனது நரம்புகளை வெட்டிக்கொண்டு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக உதவி பொலிஸ் …

Continue Reading

அரச நிதிக்குழுவில் திறைசேரி செயலாளரிடம் 4 மணிநேரம் விசாரணை

திறைசேரியால் அவுஸ்ரேலிய கடன் வழங்குநர் நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி விவகாரம் தொடர்பான முழுமையான அறிக்கையை ஒருமாத காலத்துக்குள் குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெருமவுக்கு அறிவுறுத்தியுள்ளார். 2015 நவம்பர் முதல் 2026 வரையான காலப்பகுதியில் செலுத்தப்பட்ட 10 கடன் கொடுப்பனவுகளின் மொத்த தொகையே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் குழுவின் முன்னிலையில் குறிப்பிட்டார். இந்த மோசடி குறித்து தேசிய …

Continue Reading

தேரவாத பிக்கு கதிகாவைக்கு விரைவில் சட்ட அங்கீகாரம் வழங்கி பௌத்த விகாரைகள் மற்றும் அறநிலையங்கள் தொடர்பிலான சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊடக அறிவித்தல் 2026.04.28 தேரவாத பிக்கு கதிகாவைக்கு விரைவில் சட்ட அங்கீகாரம் வழங்கி பௌத்த விகாரைகள் மற்றும் அறநிலையங்கள் தொடர்பிலான சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோதமான முறையில் நச்சுத்தன்மையுடைய போதை பொருட்களை இலங்கைக்கு எடுத்து வந்துக்கொண்டிருந்த 20 பேரை கொண்ட பௌத்தப்பிக்கு குழுவினரை கைது  செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறோம். இலங்கை அரசின் அத்திவாரமாக கருதப்படும் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் கோட்பாடுகளை மேம்படுத்திய அதி வணக்கத்துக்குரிய பௌத்த பிக்குகளின் பிம்பத்தை போர்வையாக பயன்படுத்தி இவ்வாறான சட்டவிரோத …

Continue Reading

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடன் கலந்துரையாடல்

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடனான கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் உயர்கல்வி, சமய மற்றும் கலாசார மையங்கள், இயலாமையுடைய நபர்களுக்கான அணுகல் வசதிகளைக் கொண்ட வீடுகள், தொழில்முயற்சிக்கான கடன் வசதிகள் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சின் …

Continue Reading

145 வீடுகளைஇந்தியதுணைஜனாதிபதிநிகழ்நிலைஊடாககையளிப்பு

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 03ஆம் கட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட 145 வீடுகளை இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஸ்ணன் நிகழ்நிலை முறைமை ஊடாக கையளித்து வைத்தார். இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் சி.பி இராதாகிருஸ்ணன் இலங்கையில் உள்ள இந்தியவர்கள் வரவேற்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டார். பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் 19-04-2026 அன்று நடைபெற்ற நிகழ்வில் துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயம் மற்றும் வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலய அறங்காவலர்கள் மற்றும் இந்திய வம்சாவளி அமைப்புக்களின் பிரதிநிதிகளால் மேள, …

Continue Reading

இந்திய துணை ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியப் பேரவை மகஜர் கையளிப்பு

‘ஏக்கிய ராஜ்ய’ அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதை  நிறுத்துவதற்கும், தமிழ் மக்கள் விரும்பும் தாயம், தேசியம், சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வை சாத்தியமாக்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியாவால் அழுத்தம் பிரயோகிக்க முடியும் என்று தமிழ்த் தேசியப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனை 19-04-2026 அன்று கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சந்தித்தபோது அச்சந்திப்பில்  தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் …

Continue Reading

நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். 01. பப்புவா நியூ கினியா சுதந்திர நாட்டின் உயர்ஸ்தானிகராக வின்சென்ட் சுமேல் (Vincent Sumale) (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்). 02. சோமாலிய பெடரல் குடியரசின் தூதுவராக அப்துல்லாஹி முகமது ஒடோவா (Abdullahi Mohammed Odowa) (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்). 03. லக்சம்பர்க் நாட்டு தூதுவராக கிறிஸ்டியன் பீவர் (Christian Biever) (புதுடில்லியை தளமாகக் …

Continue Reading

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா.  12கோரிக்கைகளை  முன்வைத்து  மகஜர்

இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடத்தில் மகஜரொன்றைக் கைளித்துள்ளார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் 19-04-2026 அன்று  இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும், மலையக தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின்போதே மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று, கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளுக்கு எனது மரியாதைக்குரிய வாழ்த்துகளையும் ஆழ்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். …

Continue Reading