உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்த இந்திய விமானப்படை தளபதி
இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங், மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார். அவர் 19-05-2026 அன்று பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், விமானப்படைத் தலைமையகத்திற்கு வந்தடைந்த அவரை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர். தொடர்ந்து, இரு நாடுகளின் விமானப்படைத் தளபதிகளுக்கு இடையே உத்தியோகப்பூர்வ சந்திப்பு நடைபெற்றது. பின்னர் அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரையும் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு …
Continue Reading
மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்
-
Editor
-
May 18, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கையின் சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் வயது மூப்பு காரணமாக 17-05-2026 அன்று காலமானார். இத்தகவலை அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கை அரசியல், இனப்பிரச்சினை, புவிசார் அரசியல் மற்றும் தமிழ் சினிமா குறித்து பல தசாப்தங்களாக ஆழமான, காத்திரமான அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்த அவர், சர்வதேச அளவில் பரந்த வாசகர் வட்டத்தைக் கொண்டவராவார். தனது தனித்துவமான எழுத்துக்களின் மூலம் உலகளாவிய ரீதியில் அவர் புகழ்பெற்றிருந்தார். அவர் ‘தி ஐலண்ட்’ (The Island), ‘டெய்லி மிரர்’ (Daily Mirror), ‘டெய்லி எஃப்.டி’ (Daily FT) உள்ளிட்ட முன்னணி ஆங்கில நாளிதழ்களில் நீண்டகாலமாக ஊடகவியாலராக பணியாற்றி வந்ததோடு, தனது பிரத்தியேக அரசியல் இணையத்தளத்தினூடாகவும் (dbsjeyaraj.com) உலக நடப்புகள் மற்றும் அரசியல் நிலவரங்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்தார். அன்னாரின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் குறித்த விபரங்கள் குடும்பத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continue Reading
12 மாதகாலத்தில் 89 மத அடிப்படையிலான மீறல்கள்
இலங்கையில் கடந்த 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப்பகுதியில் மத அடையாளத்தின் அடிப்படையில் 89 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், தரவுகளின் பிரகாரம் கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்தவர்களே இக்காலப்பகுதியில் அதிகம் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் பதிவான மத சுதந்திர மீறல்கள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் ‘இணைப்பாதைகளில் உரிமைகள் : இலங்கையில் இடம்பெற்ற மத …
Continue Reading
‘என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும்’ … முதல்வராகப் பதவியேற்ற விஜய்யின் முதல் உரை
முதல்வராகப் பதவியேற்ற விஜய்யின் முதல் உரையில் அவர் பேசியதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்றிருந்த ஒரு சாதாரணமான உதவி இயக்குநருக்குப் பிறந்த ஒரு பிள்ளையாக, எனக்கும் வாழ்க்கையில் வறுமையில் என்னவென்பது தெரியும், பசி என்றால் என்னவென்பதும் தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. உங்களை மாதிரிதான், உங்கள் குடும்பத்தில் ஒருவன் மாதிரிதான், உங்கள் பிள்ளை மாதிரிதான், உங்கள் அண்ணன் – தம்பி மாதிரிதான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான், …
Continue Reading
மூன்று வாக்குறுதிகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய்
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரான சி.ஜோசப் விஜய் மூன்று வாக்குறுதிகளில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் கையெழுத்திட்டுள்ளார். அவையாவன, 1) வீடுகளுக்கு 200 அலகு மின்சார பாவனை இலவசம்… ( 500 அலகு மின்சாரத்தை மாதந்தோறும் பாவிக்கும் குடும்பம்..) 2) பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் சிங்கப்பெண் அதிரடி படை அமைப்பு.. 3) போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் போதைப் பொருள் களைப்பு படை உருவாக்கம்.
Continue Reading
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார் சி ஜோசப் விஜய்
தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரான சி ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிறைவடைந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் உருவெடுத்த நிலையில் ஏனைய சிறிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அக்கட்சியின் தலைவரான சி.ஜோசப் விஜய் பதவியேற்றார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதலமைச்சராக பதவி பிரமாணமும், இரகசிய …
Continue Reading
பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை
இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை 08-05-2026 அன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு வியட்நாம் ஜனாதிபதியை மிகவும் அமோகமாக வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காகத் தனது நன்றியைத் தெரிவித்தார். இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 56 …
Continue Reading
இராஜதந்திர உறவை ‘விரிவான கூட்டாண்மை’ மட்டத்திற்கு உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பு; ஜனாதிபதி டோ லாம்
இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான 55 ஆண்டுகால இராஜதந்திர உறவை ஒரு ‘விரிவான கூட்டாண்மை’ மட்டத்திற்கு உயர்த்துவதற்கு இரு நாடுகளும் தீர்மானித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பரிமாற்றத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை நோக்கி விரைவாகக் கொண்டு செல்ல இணக்கம் காணப்பட்டுள்ளது என்று வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் தெரிவித்தார். வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் பொதுச்செயலாளருமான டோ லாமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் …
Continue Reading
வியட்நாம் மக்களின் இதயங்களில் இலங்கைக்கு தனித்துவமான இடம் உண்டு; இலங்கைப் பாராளுமன்றத்தில் வியட்நாம் ஜனாதிபதி
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் 08-05-2026 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றினார். இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியை, இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி டோ லாம், விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதுடன், இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். 11 ஆண்டுகளுக்குப் …
Continue Reading
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட நான்கு புதிய உறுப்பினர்களும் சபாநாயகர் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டனர்
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் நால்வரும் நேற்று (மே 04) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டனர். முன்னாள் கணக்காய்வாளர் தலைமையதிபதி காமினி விஜேசிங்க, முன்னாள் பிரதிக் கணக்காய்வாளர் தலைமையதிபதி ஜீ.தேவஞானன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ மற்றும் அரசாங்க சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ரத்ன தேசப்பிரிய ஆகியோர் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இவ்வாறு இரகசியத் தன்மையைப் பேணுவதற்கான சத்தியத்தியம் செய்துகொண்டனர். 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க …
Continue Reading