புலம்பெயர்தொழிலாளர்உரிமைகளைப்பாதுகாக்கும்குழுவின்தலைவராகபிரசாத்காரியவசம்தெரிவு
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசம் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் 42 ஆவது கூட்டத்தின்போதே இத்தெரிவு இடம்பெற்றது. இத்தெரிவை அடுத்துக் கருத்துரைத்த பிரசாத் காரியவசம், தன்னை ஏகமனதாகத் தெரிவுசெய்தமைக்காக குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதேபோhன்று சமகாலத்தில் மனித உரிமைகள் முகங்கொடுத்துவரும் சவால்கள் மற்றும் வளக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இக்குழுவின் எதிர்காலப் பணிகளில் ஒரு …
Continue Reading
சுரேஷ் சலேவின் மனைவி ஜனாதிபதி அநுரகுமாரவிடம் எழுத்துமூல கோரிக்கை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எனது கணவரான சுரேஷ் சலே சில நாட்களுக்குப் பிறகு ஒரு மாலை வேளையில் அதிகாரிகள் குழுவினர் அவரது அறைக்குள் நுழைந்து, பிற அதிகாரிகள் மற்றும் கைதிகளின் முன்னிலையில் அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி,விலங்கிட்டு, மனிதாபிமானமற்ற மற்றும் அநாகரீகமான நடத்தைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.இது முற்றிலும் கடும் மனித உரிமை மீறலாகும். எனது கணவரின் உடல் மற்றும் உளவியல் நிலை வேகமாக மோசமடைந்து வருவது தெளிவாகிறது. அவரது உயிருக்கு இப்போது கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், அதற்கு அவரது …
Continue Reading
நாட்டை மீட்டெடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றினைய வேண்டும்; வணவாசி ராகுல தேரர்
-
Editor
-
June 1, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
எதிர்க்கட்சி என்ற பெயரில் மக்களை அரசியல் ரீதியாகப் பிரித்து வைத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிராகச் செயற்படுவதை விடுத்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து நாட்டுக்கு பொருத்தமான ஒரு முறையான வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தேசிய நாமல் உயன வனப்பூங்காவின் பாதுகாவலர் ராகுல தேரர் வலியுறுத்தியுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பாக 31-05-2026 அன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், அரசாங்கத்தின் அதிகாரிகள் அல்லது அமைச்சர்களின் அனுபவமின்மை காரணமாக சில சந்தர்ப்பங்களில் சரியான தீர்மானங்களை எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். இத்தகைய சவாலான தருணத்தில், அதிகாரிகள் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத சூழலும் உருவாகலாம். எனவே, இவ்வாறான சவால்களை முறியடிக்க, அரசாங்கம் அனைத்துத் தரப்பினருடனும் விரிவாகக் கலந்துரையாடி, நாட்டுக்கு பொருத்தமான ஒரு முறையான வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது எனது அவசரமான வேண்டுகோளாகும். எதிர்க்கட்சி என்ற பெயரில் மக்களை அரசியல் ரீதியாகப் பிரித்து வைத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிராகச் செயற்படுவதை விடுத்து, அந்தத் தரப்பிலும் அனுபவம் வாய்ந்த, நேர்மையான மற்றும் தூய்மையான அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதை உணர வேண்டும். எனவே, கட்சி பேதங்களையும், இன, மத வேறுபாடுகளையும் மறந்து, ஜனாதிபதிக்கும் தற்போதைய அமைச்சரவைக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தற்போதுள்ள அரசியல் சூழலில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் போட்டியிடுவதை விட, நாட்டைப் பாதுகாக்க வேண்டியதே முதன்மையான கடமையாகும். ஏனெனில், தற்போதைய பொருளாதார வீழ்ச்சி மற்றும் நாடு சென்று கொண்டிருக்கும் பாதையைக் கருத்திற்கொள்கையில், எந்தவொரு தனி அரசாங்கத்தாலும் அல்லது தனிப்பட்ட தலைவராலும் மாத்திரம் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது இயலாத காரியமாக மாறியுள்ளது. வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாம் நாட்டை மீட்டெடுக்கத் தவறினால், அடுத்ததாக ஆட்சிக்கு வரும் எந்தவொரு தலைவராலும் இழந்த காலத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு நாடு அதலபாதாளத்திற்குச் சென்றுவிடும். உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் எமது நாட்டுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது உண்மைதான். இருப்பினும், எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற அன்றாடப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு, இந்த உலக நெருக்கடிகள் பற்றியோ அல்லது பிற காரணங்கள் பற்றியோ கவலை இல்லை. மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கான தீர்வுகளை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். எனவே, மக்களின் மனப்பாங்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களும் தியாகத்துடன் அரசாங்கத்திற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்கி, நாட்டை கட்டியெழுப்புவதற்குத் தேவையான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றார்.
Continue Reading
பௌத்தத்தை பேணிப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது; கருஜயசூரிய
பெளத்த சமூகத்திற்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்திய பல சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் பொது சமூகத்திலும் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் பௌத்த சமயத்தை பேணிப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தன் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நமது மகத்தான பாரம்பரியத்தைப் பற்றிச்சிந்தித்து, நமது தேசிய உரிமைக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து …
Continue Reading
மக்களாணையை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்துவது வரவேற்கத்தக்கது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களின் இறையாண்மைக்கு எதிராக கட்சி மாறும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியை இரத்து செய்வதற்கான புதிய சட்ட வரைவை முன்மொழிவதற்கான உத்தேசம் வரவேற்கத்தக்க சீர்திருத்தம் என்பது சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாடாகும். 2013-ஆம் ஆண்டு முதல், எமது அமைப்பின் ஸ்தாபகத் தலைவரான, மறைந்த வணக்கத்திற்குரிய மதுளுவாவே சோபித நாயக்க தேரர், தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்த சட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்த வடிவமைக்க …
Continue Reading
எமது அதிகாரங்கள் எவருக்கும் பகிரப்படவில்லை; தேர்தல்கள் ஆணைக்குழு
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் எவருக்கும் பகிரப்படவில்லை. மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஒவ்வொரு தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடாகும். ஆணைக்குழுவால் பொறுப்பேற்க முடியாது. மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றம் தீர்வளித்ததன் பின்னர் அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த போவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்ட கருத்துக்கு அரசியல் தரப்பினரும், …
Continue Reading
இந்தியாவின் தலையீடுகள் எமக்கு பெரும் பலத்தையும் தைரியத்தையும் தருகிறது; ஆனந்த விஜயபால
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களின் நேரடித் தலையீடுகள் எமக்கு பெரும் பலத்தையும் தைரியத்தையும் தருகின்றன. இலங்கை காவல்துறையின் பல்வேறு விடயங்களில் அவர் காட்டும் அக்கறையை நாம் பாராட்டுகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் பாவனைக்கு தேவையான 134 கெப் ரக வாகனங்களை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன் 25-25-05-2026அன்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், ஜனாதிபதியுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை பொலிஸ் பாவனைக்காக இந்திய அரசாங்கம் வழங்கிய இந்த 134 கெப் ரக வாகனங்களின் அன்பளிப்புக்காக, இந்திய அரசாங்கத்துக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியா மற்றும் இலங்கை நீண்டகாலமாக நேரடி நட்பு ரீதியான உறவுகளைப் பேணி வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக, இலங்கை காவல்துறையின் மேம்பாட்டுக்காகவும், பயிற்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்கவும் இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக உதவி வழங்கி வருகின்றது. இந்த வாகனங்களை வழங்குவதன் மூலம், இலங்கை மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு எமது காவல்துறைக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. குறிப்பாக, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களின் நேரடித் தலையீடுகள் எமக்கு பெரும் பலத்தையும் தைரியத்தையும் தருகின்றன. இலங்கை காவல்துறையின் பல்வேறு விடயங்களில் அவர் காட்டும் அக்கறையை நாம் பாராட்டுகிறோம். இது ஒரு நீண்டகால கூட்டுப் பயணத்தின் வெளிப்பாடாகும் என்றார்.
Continue Reading
அநுர – மோடி தொலைநோக்கு பார்வைகள் எமக்கு வழிகாட்டுகின்றன; சந்தோஷ் ஜா
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன. அந்த வழிகாட்டல்களுக்கு அமைய, எமது அனைத்துக் கொள்கைகளும் மக்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைகின்றன என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் பாவனைக்கு தேவையான 134 கெப் ரக வாகனங்களை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன்25-05-2026அன்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், ஜனாதிபதியுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, ஜனவரி 2025 இல் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்ததையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக, இரு தரப்பினரும் மிக நெருக்கமாகவும், கூட்டுப் பொறுப்புடனும் செயற்பட்டதன் விளைவாக, ஆரம்பத்தில் 80 வாகனங்களை வழங்குவதற்குத் தீர்மானித்திருந்த போதிலும், தற்போது அதனை 134 வாகனங்களாக அதிகரித்து வழங்க முடிந்துள்ளமை எமது சிறந்த ஒத்துழைப்பிற்குச் சான்றாகும். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் வெறும் அரசியல் ரீதியானவை மட்டுமல்ல, அவை வரலாற்று ரீதியான மக்கள் பிணைப்பைக் கொண்டவை. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன. அந்த வழிகாட்டல்களுக்கு அமைய, எமது அனைத்துக் கொள்கைகளும் மக்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைகின்றன. அரசாங்கங்கள் என்ற ரீதியில் மக்கள் நலன்சார் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் முன்னெடுக்கும் தூய்மையான நிர்வாகம் மற்றும் நாட்டுக்கான வேலைத்திட்டங்களுக்கு அமைவாக, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குத் தேவையான இந்த உதவிகளை வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்த கெப் ரக வாகனங்கள் உள்ளூர் மட்டத்திலும், சமூக மட்டத்திலும் காவல் சேவையை வலுப்படுத்த உதவும். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால நட்புறவும், மக்களின் பிணைப்பும் எதிர்காலத்தில் மேலும் பலமடையும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கை உண்டு என்றார்.
Continue Reading
இலங்கைக்கு விரைவில் 900 மில்லியன் டொலர் கிடைக்கும்; அரசாங்கம் நம்பிக்கை
-
Editor
-
May 20, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
உலக யுத்த நிலைமை உள்ளிட்ட வெளிப்புறக் காரணிகளாலேயே நாட்டின் பொருளாதாரத்தில் தற்காலிக ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. எனினும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஊடாக விரைவில் சுமார் 900 மில்லியன் டொலர் நாட்டுக்குள் வரவுள்ளதால், இந்த நிலைமையை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்ய முடியும் என பதில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு 19-05-2026 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் …
Continue Reading
பிரிவினைவாதத்திற்கு எனது ஆட்சியில் இடமில்லை; ஜனாதிபதி அநுரகுமார
எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாதிருப்பதே எனது அரசாங்கத்தின் இலக்காகும். இரத்த வெள்ளத்தினாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ நாட்டை கட்டியெழுப்ப முடியாது, அமைதியால் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 19-05-2026 அன்று 15ஆவது தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமக்காக அன்றி ஏனையோருக்காகவும் …
Continue Reading