மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்த புதிய தேசிய செயல் திட்டம்

இலங்கையில் நீண்டகாலமாக பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள மனித – யானை மோதல்களை முறையாகக் கட்டுப்படுத்துவதற்காக, புதிய தேசிய செயல் திட்டம் ஒன்றை வரைவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றாடல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கம், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் விரிவாக்கம் மற்றும் காடழிப்பு போன்ற காரணங்களால், காட்டு யானைகள் நடமாடும் பாரம்பரியப் பாதைகளும் அவற்றின் வாழிடங்களும் பெருமளவில் அழிந்துபோயுள்ளன. இதன் விளைவாகவே இந்த மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இலங்கையில் இந்த …

Continue Reading

பாதுகாப்பு பிரதியமைச்சருடன் சீன பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு 

இலங்கைக்கான சீன தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் ஃபூ சியாவோ, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் சுமூகமாக ஆராய்ந்தனர். இதன்போது, இலங்கை ஆயுதப் படைகளின் இராணுவப் பயிற்சி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். …

Continue Reading

இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா

அரசாங்கத்தின் அவசர கோரிக்கைக்கு இணங்க, இந்திய இராணுவத்தின் செயல்பாட்டு இருப்புகளிலிருந்து 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலங்கை இராணுவத்திற்கு இலவசமாக வழங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்து, அதனை வெற்றிகரமாக விநியோகித்துள்ளது. இராணுவத்திடம் காணப்பட்ட பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அவர்களின் செயல்பாட்டுத் தயார்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அவசரத் தேவையை ஒரே மாதத்திற்குள் பூர்த்தி செய்ய இந்திய அரசு உடன்பட்டிருந்தது. இதற்கமைய, ‘ஐ.என்.எஸ் சாரதா’ என்ற இந்திய கடற்படைக் கப்பல் மூலம் இப்பொருட்கள் விசேடமாக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுக் கையளிக்கப்பட்டன. …

Continue Reading

பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரிப்பு; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை 

இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் ‘சிறுவர் உழைப்பிற்கு எதிரான சர்வதேச தினத்தை’ முன்னிட்டு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர்  விடுத்துள்ள விசேட செய்தியிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இம்முறை இத்தினமானது ‘சிறுவர் உழைப்பற்ற நாடு, பிள்ளைகளுக்கு சிறந்த நாளை’ என்ற கருப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தேசிய சிறுவர் பாதுகாப்பு …

Continue Reading

இலங்கையின் குளிர்பதனச் சங்கிலி திறனை மேம்படுத்த ஜப்பான் உதவி

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா அவர்கள், மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர்  ரத்ன கமகே ஆகியோர் முன்னிலையில், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் முகமது நவ்ராஸ் நசாரிடம் ஆறு குளிரூட்டப்பட்ட டிரக் வண்டிகளை ஒப்படைத்தார். இந்த ஒப்படைப்பு, ஜப்பான் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் 200 மில்லியன் ஜப்பானிய யென் (ஏறத்தாழ 1.25 மில்லியன் அமெரிக்க டாலர்) மொத்த மதிப்புள்ள மானிய உதவித் திட்டமான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு …

Continue Reading

இலங்கை – ஜப்பான் நீடித்த நட்புறவின் அடையாளம் புதிய சசகாவா கலாசார நிலையம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

புதிய சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையமானது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நிலவி வரும் நீடித்த நட்புறவின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு 07, வார்ட் பிளேஸ், இலக்கம் 85 என்ற முகவரியில் சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலைய அறக்கட்டளையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழா 11-06-2026 அன்று நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றம், …

Continue Reading

அமெரிக்க பிரதிநிதிகள் குழு பாராளுமன்றில் சந்திப்பு

பாராளுமன்ற மேற்பார்வை மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்ட கொள்கை வகுத்தலை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஓரங்கமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றக்குழுக்களுக்கு ஒப்பீட்டளவிலான பகுப்பாய்வு ஆதரவை வழங்குவதற்காக ஒரு பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது குறித்து இலங்கைப் பாராளுமன்றம் ஆராய்ந்துவருவதாகவும், இதுகுறித்து அமெரிக்கப் பாராளுமன்றத்திலிருந்து பெறப்பட்ட அனுபவங்களை அந்நாட்டு பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகத்தின் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனநாயகப் பங்காண்மை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் 8 – 12 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ளனர். …

Continue Reading

ஐ.நா. அமைதிப்படைமற்றும் இராணுவத்தின்தளவாடப்பொருட்கள்கொழும்பைவந்தடைந்தன

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக, இந்திய இராணுவத்திடமிருந்து பெறப்பட்ட விசேட இராணுவத் தளவாடப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சார்தா கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள இப்பொருட்கள், எதிர்வரும் 16ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ நிகழ்வின் போது இலங்கை இராணுவத்திடம் முறைப்படி கையளிக்கப்படவுள்ளன. இந்தியக் கடற்படையின் சுகன்யா ரகத்தைச் சேர்ந்த, கரையோர ரோந்துப் பணிகளுக்கான சார்தா போர்க்கப்பல், இந்த உத்தியோகபூர்வ தளவாட இடமாற்றப் பணிக்காகவும், வழமையான செயல்பாட்டுப் …

Continue Reading

இயற்கையால் உத்வேகம் பெறுவோம் ‘இன்று உலக சுற்றுச்சூழல் தினம்’

கலாநிதி திருமதி சுபாஐpனி உதயராசா, சிரேஷ;ட விரிவுரையாளர், புவியியற்றுறை, யாழ்.பல்கலைக்கழகம் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும், மற்றும் சுற்றுப்புறச் சூழலை பேணவேண்டும் என்ற விழிப்புணர்வை உலக மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு தனிமனிதர்கள், தன்னார்வ நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் எல்லா மக்கள் சமூகங்கள் ஆகிய அனைவரும் உலக சுற்றுப்புறசூழலை பேணுவதற்கான முழுமையான செயற்பாட்டில் இறங்க வேண்டும் என்று இந்த நாள் அழைப்பு விடுக்கிறது. இப்போது இருக்கும் இணையம் மற்றும் …

Continue Reading

தித்வாவினால் பாதிக்கப்பட்ட 4000 குடும்பங்களுக்கு சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு நிதியுதவி

‘தித்வா’ சூறாவளியின் மிகமோசமான பாதிப்புக்களிலிருந்து இலங்கை தொடர்ந்து மீண்டுவரும் நிலையில், நாடளாவிய ரீதியில் 7 மாவட்டங்களைச்சேர்ந்த பாதிக்கப்பட்ட 4000  குடும்பங்களுக்கான நிதியுதவி சர்வதேச புலம்பெயர்வு அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக்கட்டமைப்பான அவசரகாலப் பதிலிறுப்பு நிதியம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் என்பவற்றின் ஆதரவுடனும், இலங்கை அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடனும் முன்னெடுக்கப்பட்ட இந்த நிதியுதவி வழங்கல் செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிதியுதவி வழங்கலுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. புத்தளம், பதுளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் 4000 க்கும் …

Continue Reading