பாதுகாப்புத்துறைப் பங்காண்மை குறித்து இலங்கை – அமெரிக்கா விரிவாக ஆராய்வு

கடல்சார் மற்றும் வான்வழி ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவடைந்துவரும் பாதுகாப்புத்துறைப் பங்காண்மை குறித்து அமெரிக்க – பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க – பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடருக்கும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகரவுக்கும் இடையிலான சந்திப்பு 23-06-2026 அன்று  நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பேரனர்த்த …

Continue Reading

ஐ.நா சபையின் விசேட பிரதிநிதியுடன் அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு பல்வேறு துறைகள் சார்ந்த ஒருங்கிணைந்த மற்றும் பரந்துபட்ட அணுகுமுறையைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி நஜாட் மால்லா ஜித் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றாக ஒழித்தல் தொடர்பான தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி …

Continue Reading

ஆசிய – பசிபிக் விமான பாதுகாப்பு மாநாடு நீர் கொழும்பில் ஆரம்பம்

21ஆ வது ஆசிய – பசிபிக் ஒத்துழைப்பு வழிநடத்தல் குழு கூட்டமும் (CASP – AP), 14வது ஆசிய – பசிபிக் விமான பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மன்றமும் நீர்கொழும்பு ‘கோல்ட் சேண்ட்ஸ்’ ஹோட்டல் வளாகத்தில் 23-06-2026 அன்று கோலாகலமாக ஆரம்பமாகின. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சர்வதேச மாநாட்டின் ஆரம்ப விழாவில், பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக கலந்து கொண்டார். சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் …

Continue Reading

ஆசிய – பசிபிக் விமான பாதுகாப்பு மாநாடு நீர் கொழும்பில் ஆரம்பம்

21ஆ வது ஆசிய – பசிபிக் ஒத்துழைப்பு வழிநடத்தல் குழு கூட்டமும் (CASP – AP), 14வது ஆசிய – பசிபிக் விமான பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மன்றமும் நீர்கொழும்பு ‘கோல்ட் சேண்ட்ஸ்’ ஹோட்டல் வளாகத்தில் 23-06-2026 அன்று கோலாகலமாக ஆரம்பமாகின. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சர்வதேச மாநாட்டின் ஆரம்ப விழாவில், பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக கலந்து கொண்டார். சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் …

Continue Reading

அவசரகாலநிலை தொடர்ந்து நீடிக்கப்படுவது குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தீவிர கரிசனை

‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலநிலைப் பிரடகனம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுவருவது குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், அதனை உடன் முடிவுக்குக்கொண்டுவந்து, மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் அவசரகாலநிலை தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டுவருவது குறித்து நாம் மிகுந்த கவலையடையும் அதேவேளை, அவசரகாலநிலையைத் தொடர்ந்து நீடிக்கவேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்துகிறோம். அத்தோடு அவசரகாலநிலையை நீடிப்பதை பாராளுமன்றம் நிராகரிப்பதுடன், அதற்குப் பதிலாக சமூகத்துக்கு மிக அவசியமானதும், …

Continue Reading

ஐ.நா.பிரதிநிதிகள் குழுவுடன் நீதியமைச்சர் சந்திப்பு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று 22-06-2026அன்று  நீதி அமைச்சில் இடம்பெற்றது. சிறுவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது சிறுவர்கள் காணொளித் தொழில்நுட்பம்  ஊடாக சாட்சியமளிக்கும் வசதிகள், சிறுவர் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நீதிமன்றங்களில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளின் போது சிறுவர்களிடம் சாட்சியங்களைப் பெறும்போது காணொளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வசதி, குற்றவியல் நடைமுறைச் சட்டக் …

Continue Reading

தேர்தல்களில் விரலில் மை வைக்கும் நடைமுறையை நீக்க அரசாங்கம் தீர்மானம்

தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக வாக்காளர்களின் விரல்களில் அழியாத பூச்சு (மை) இடும் சட்ட ரீதியான ஏற்பாடுகளை அனைத்து தேர்தல் சட்டங்களிலிருந்தும் முழுமையாக நீக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்துள்ள விசேட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் தேர்தல்களுக்கான சட்ட ஏற்பாடுகளின் கீழ், கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தப்பட்ட தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக சமூகமளிக்கும் வாக்காளர்கள் செல்லுபடியான அடையாள அட்டை மூலம் தத்தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் அழியாத பூச்சைப் பயன்படுத்தி பொருத்தமான விரலில் …

Continue Reading

பிராந்தியத்தின் அமைதிக்கு உச்சபட்ச ஆதரவை வழங்க தயார்; ஜனாதிபதி

மத்திய கிழக்கின்  நிலைமை அமைதியை நோக்கி நகரும் என நம்பிக்கை  தெரிவித்த ஜனாதிபதி பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூரிடம் உறுதியளித்தார். இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூர்   ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதி செயலகத்தில் …

Continue Reading

தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின்  பொதுச்செயலாளர் பிரதமருடன் சந்திப்பு

தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின்  பொதுச்செயலாளர் எம்.டி. கொலாம் சர்வார் 22-06-2026அன்று அலரி மாளிகையில்  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து விடைபெறும் வகையிலான மரியாதை நிமித்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர்   எம்.டி. கொலாம் சர்வாரை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் சார்க் அமைப்பின் நோக்கங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் பொதுச்செயலாளர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். கொழும்பில்  இன்று செவ்வாய்க்கிமை நடைபெறவிருக்கும் ‘சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு’ குறித்து இக்கலந்துரையாடலில் …

Continue Reading

அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின்   கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க-இலங்கை பாதுகாப்புப் பங்காண்மையின் வளர்ந்துவரும் பலத்தினைப் பிரதிபலிக்கும்  வகையில் அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின்   கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர்  22-06-2026அன்று  இலங்கையை வந்தடைந்தார்.   ஜெனரல் கெவின், கட்டளைத் தளபதியாக,  இப்பிராந்தியத்திலுள்ள அனைத்து அமெரிக்க விமானப்படை அதிகாரிகளையும், சொத்துக்களையும் ஜெனரல் ஷ்னைடர் மேற்பார்வை செய்கிறார். மூன்று  நாள் விஜயத்தின் போது  கட்டளைத் தளபதி  ஜெனரல் கெவின், பாதுகாப்பு அமைச்சு  மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் உட்பட, சிரேஷ்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறைத்  தரப்பினருடன்  சந்திப்புகளை …

Continue Reading