இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமருடன் யுனிசெப் அதிகாரிகள் கலந்துரையாடல்
-
Editor
-
June 26, 2026
-
சமகாலம்
-
0 Comments
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தல், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் யுனிசெப் அதிகாரிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி நஜாத் மால்லா எம்’ஜித் மற்றும் யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்தித்த போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்தல், சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பது மற்றும் அவற்றுக்கு …
Continue Reading
ஒன்லைன் முதலீட்டு மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை
நாற்பது வருடங்களுக்கு மேலாக அரச மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளை வகித்து, ஓய்வுபெற்ற 70 வயதுடைய தொழில்முறை பொறியியலாளர் ஒருவர், வட்ஸ்அப் ஊடாக நடத்தப்பட்ட போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி சுமார் 90 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தனது வாழ்நாள் சேமிப்பை இழந்துள்ளார். பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதால் கொழும்பிலுள்ள தனியார் முதியோர் இல்லமொன்றில் தங்கி வாழ்ந்து வந்த இவருக்கு, சொந்தமாக வீடொன்றும், 1 கோடி ரூபாவுக்கும் அதிகமான வங்கி வைப்புகளும் இருந்துள்ளன. இணைய வங்கிச் சேவைகள் மற்றும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்களை நன்கு பயன்படுத்தத் …
Continue Reading
2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரம்; இரண்டு அறிக்கைகள் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிப்பு
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்த இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்து குழுவின் இறுதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. …
Continue Reading
ஊடக மறுசீரமைப்புகளுக்கு செல்வதற்கு முன் தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்யவும்.
இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் தொடர்பிலான சட்ட மூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன், ஊடக துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், இலங்கை அரசு, ஊடக மறுசீரமைப்புகளுக்கு செல்வதற்கு முன் தேசிய ஊடகக் கொள்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறது. சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் உத்தரவின்படி 2026.06.05 ஆம் திகதிய வர்த்தமானி ஊடாக அறிவித்திருக்கும் இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனம் …
Continue Reading
எல் நினோ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு, அதிகாரிகள் குழு நியமனம்
உலகளாவிய ரீதியில் ஏற்படும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் பாரதூரமான தாக்கங்களுக்கு முகங்கொடுப்பதற்காக, விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. காலநிலை மாற்றங்களுக்கு இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நாடாக இலங்கை காணப்படுவதால், எல் நினோ நிலைமை காரணமாக நாட்டில் மழைவீழ்ச்சியில் மாற்றங்கள், அதிக வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த இடர்கள் அதிகரித்துள்ளன. விஞ்ஞானபூர்வமான எதிர்வுகூறல்களின்படி, இவ்வருட இறுதி தொடக்கம் தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படக்கூடிய இந்த எல் நினோ …
Continue Reading
இலங்கை – அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாறிவரும் நவீன போர்முறைமைகள் குறித்து கலந்துரையாடல்
-
Editor
-
June 25, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
அமெரிக்க – பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்புத்துறை தலைவர்கள், மூலோபாய சிந்தனையாளர்களுடன் நவீன போர்முறைமைகள் மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்தியப் பாதுகாப்புசார் சவால்கள் என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடியுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க – பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் நேற்றைய தினம் இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்புத்துறை தலைவர்கள், மூலோபாய சிந்தனையாளர்களுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறிப்பாக மாறிவரும் நவீன போர்முறைமைகள், இந்தோ – …
Continue Reading
இலங்கை நடுநிலையான கொள்கையை பேணும்; அமைச்சர் விஜித்த
இலங்கை நடுநிலையானதும் சர்வதேச ரீதியில் இணக்கமானதுமான வெளிவிவகாரக் கொள்கைளைப் பேணுவதில் உறுதியாக இருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூரிடம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூருக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு 22-06-2026அன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. …
Continue Reading
கடற்படைக்கு செயற்கைக்கோள் தொடர்பாடல் கட்டமைப்பினை வழங்கும் அமெரிக்கா
உலகின் மிகப் பரபரப்பான சில கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் கடல்சார் இணைப்பைப் பலப்படுத்தும் வகையில் ‘ஃப்ளீற் ப்ரோட்பான்ட்’ செயற்கைக்கோள் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்க வழங்குமென கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த எஸ்.எல்.என்.எஸ் கஜபாகு கப்பில் வைத்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் 22-06-2026அன்று அறிவித்தார். நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூரை பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர மற்றும் கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் …
Continue Reading
அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட 10 ஹெலிகொப்டர்கள் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பு
-
Editor
-
June 24, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சி திறனை மேம்படுத்துவதற்கும், விமான செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட TH-57 ‘சீ ரேஞ்சர்’ (Sea Ranger) ரக 10 பல்பயன்பாட்டு ஹெலிகொப்டர்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் ரத்மலானை விமானப்படை தளத்தில் நடைபெற்றது. ரத்மலானை விமானப்படை தளத்திற்கு 23-06-2026 அன்று வருகை தந்த ஜனாதிபதிக்கு, விமானப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹெலிகொப்டர்களை பார்வையிடுவதிலும் ஜனாதிபதி இணைந்து …
Continue Reading
குழந்தைகளைப்பாதுகாப்பதுதேசியமுன்னுரிமையாகும்; பிரதமர்கலாநிதிஹரிணிஅமரசூரிய
-
Editor
-
June 24, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்லஇ மாறாக அது எமது பரந்த அபிவிருத்திஇ நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரு தேசிய முன்னுரிமையாகும் என்று பிரதமர் ஹரணி அமரசூரிய தெரிவித்தார். ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வளர்வதையும், வன்முறையற்ற சூழலில் வாழ்வதையும் உறுதி செய்வதற்காக, உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துதல், முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் துரித நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ‘குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெற்காசிய அமைச்சர்கள் மாநாடு’ (EVAC) ஜூன் 23 ஆம் திகதி கொழும்பில் …
Continue Reading