மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்
-
Editor
-
September 3, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்காக குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
Continue Reading
தமது வழக்கை விசாரிக்கும் நிலைக்கு உயர் நீதிமன்றத்தை ஆளாக்காமல் இருப்பது சட்டமியற்றுபவர்களின் பொறுப்பு
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், நாட்டின் நற்பெயருக்கு பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும். தற்போது சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள உயர் நீதிமன்றங்களின் கௌரவ நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான நடவடிக்கை, மிகுந்த கவனத்துடன்கூடிய பரிசீலனையுடனும், பல தரப்பினரிடையேயான ஆழமான ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாடாகும். இதன்போது, எந்தவொரு சூழ்நிலையிலும் தமது சொந்த வழக்கை விசாரிக்கும் நிலைக்கு உயர் நீதிமன்றத்தை ஆளாக்காமல் இருப்பது அனைத்து தரப்பினரினதும் பொறுப்பாகும். …
Continue Reading
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசியலமைப்புத்திருத்தத்திற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு
நீதித்துறை நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான பரந்த வேலைத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவினருடனும் கலந்துரையாடிச் செயல்படுத்துவதே பொருத்தமானது. மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் சுதந்திரம் குறித்து சந்தேகங்களை எழுப்பக்கூடிய அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை இந்தச் சந்தர்ப்பத்தில் மேற்கொள்வததைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்கள ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு மகாநாயக்க தேரர்கள் தங்களது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு …
Continue Reading
நிலக்கண்ணி வெடி அகற்றும் பணி 90 சதவீதம் நிறைவு; அமைச்சர் சுசில் ரணசிங்க
இலங்கையில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் தற்போது 90 சதவீதமளவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார் கொழும்பில் 10-08-2026 அன்று இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எஞ்சியுள்ள 10 சதவீத நிலக்கண்ணி வெடி அகற்றும் பகுதிகள், சுமார் 20.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், அவை மிகவும் சிக்கலான காடுகள் மற்றும் கடலோரப் பகுதிகள் அமைந்துள்ள பிரதேசங்களாகும். இத்தகைய சவால்கள் …
Continue Reading
தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்குப் புனர்வாழ்வு
தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்குப் புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாகவும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் தமக்கு இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர். நாட்டில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் …
Continue Reading
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் திட்டம் வெற்றியடைந்துள்ளது; ரோசமண்ட் பைக்
இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் 90 சதவீதமளவில் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 20.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மிகவும் சிக்கலான மற்றும் கடினமான பகுதியாகும். அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாகக் கண்ணிவெடிகள் அற்ற நாடாக அறிவிக்க எதிர்பார்க்கப்படுகிறது என உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையும் கண்ணிவெடி அகற்றும் சர்வதேச தூதுவருமான ரோசமண்ட் பைக் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார். உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையும் கண்ணிவெடி அகற்றும் சர்வதேச தூதுவருமான ரோசமண்ட் பைக் 10-08-2026 அன்று அமைச்சின் காரியாலயத்தில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் …
Continue Reading
ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், தற்போது அமலில் உள்ள சட்டத்தை பலவீனப்படுத்தாத வகையில் அமைய வேண்டும்
ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்கள், நாட்டில் ஊழலுக்கு எதிராக உருவாகியுள்ள பொதுமக்களின் நிலைப்பாட்டிற்கு முரணானவையாக இருப்பதோடு, ஊழலை எதிர்க்கும் வகையில் நாடாக நாம் உறுதிப்படுத்தியுள்ள சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாகவும் கருதப்படலாம். இவ்விடயம் தொடர்பாக சமூகத்தின் முழுமையான கவனத்தையும் நாம் ஈர்க்க விரும்புகின்றோம். ஏனெனில், 2023 ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு சட்டம் இயற்றப்படுவதற்காக பங்களித்த தரப்புகளில் ஒன்றாக நாம் இருந்தோம். அச்சட்டம் அப்போது சமூகத்தின் அனைத்து தரப்பினரின் வலியுறுத்தல்களையும் மதித்து நிறைவேற்றப்பட்டது. எனவே, அதன் அடிப்படை நோக்கங்களுக்கு புறம்பாகச் செயல்படாதிருப்பது நாட்டின் …
Continue Reading
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்வருங்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 05-08-2026 அன்று நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது …
Continue Reading
பிரதமர் ஹரணியுடன் இந்திய வெளியுறவு செயலாளர் விரிவாக கலந்துரையாடல்
இலங்கை – இந்திய நாடுகளின் முன்னுரிமைக்குரிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுபடுத்துவுதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட 05-08-2026 அன்று நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அலரிமாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான வலுவானதும், மக்களை மையப்படுத்தியதுமான மிகநெருங்கிய நல்லுறவை இருதரப்பினரும் மீளுறுதிப்படுத்தினர். அத்தோடு இருநாடுகளினதும் முன்னுரிமைக்குரிய துறைகளில் பரஸ்பர …
Continue Reading
ஜனாதிபதி அநுரவுடன் இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு
-
Editor
-
August 6, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்குப் பங்களிக்கும் வகையில் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 05-08-2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான …
Continue Reading