கைத்தறி நெசவு அழிந்து வரும் துறை அல்ல; பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க

கைத்தறி நெசவு அழிந்து வரும் துறை அல்ல. எதிர்காலத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி தொழிலாக மாறக்கூடிய துறையாகும் என்று  பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். இலங்கையின் கைத்தறி நெசவு துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை , தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு, மற்றும் மொரட்டுவைப் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த “The Art of Weaving” பணிமனை மற்றும் ஆடை அலங்காரக் காட்சி நேற்று  தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதியமைச்சர் Chathuranga Abeysinghe அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு …

Continue Reading

அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தல் தொடர்பில் கனேடிய வர்த்தக சம்மேளனம் ஆராய்வு

கனேடிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அபிவிருத்தியில் பெண்கள் – பொருளாதார ரீதியிலான வலுவூட்டல் மற்றும் சிறிய, நடுத்தரளவிலான நிறுவனங்களின் நிலைபேறான தன்மை’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் கடந்த வாரம் கொழும்பில் உள்ள கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் இல்லத்தில் நடைபெற்றது. இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு இலங்கை, இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் துறை தலைவர்கள், அபிவிருத்திப் பங்காளிகள், தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைக்கும் வகையிலேயே இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு …

Continue Reading

இந்தியப் பெருங்கடலின் முதன்மை துறைமுக மையமாக கொழும்பை மாற்றுவதே அரசின் இலக்கு – அமைச்சர் அநுர கருணாதிலக

கொழும்பு துறைமுகத்தை இந்தியப் பெருங்கடலின் உலகத்தரம் வாய்ந்த முதன்மை மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இலங்கையின் கடல்சார் உறவுகளை மேம்படுத்துவதற்கும், பிரான்ஸ் முதலீட்டாளர்களை நாட்டிற்குள் ஈர்ப்பதற்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் அநுர கருணாதிலக தலைமையில் அமைச்சக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் உலகின் மூன்றாவது பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான ‘CMA CGM’ இன் முதன்மை பிரதித் தலைவரும், …

Continue Reading

சதாரண டீசலுக்க 100ரூபா மானியம் வழங்குகின்றோம்; பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் தெரிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது சாதாரண டீசல் ஒரு லீற்றருக்கு 100 ரூபா மானியம் வழங்கி வருவதாக அதன் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இதேவேளை, லங்கா ஐஓசி, மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூடுதலான மானியங்களை வழங்குகின்றது. உலக சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், அது கூட்டுத்தாபனம் வழங்கி வரும் மானிய நட்டத்தை ஈடுசெய்யவே பயன்படுத்தப்படுமே தவிர, நுகர்வோருக்கு உடனடியாக விலை குறைப்பை வழங்க முடியாது. அத்துடன், கடந்த ஜனவரி மாதம் …

Continue Reading

போலி நிறுவனங்கள் மூலம் டொலர்  கடத்தப்படுவதைத் தடுக்க அவசர நடவடிக்கை

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட போலி நிறுவனங்கள் மூலமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு டொலர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து அவசர மற்றும் கடுமையான கட்டுப்பாட்டு நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. சுமார் 85 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாரிய வெளிநாட்டு நாணய மாற்று மோசடியொன்று அண்மையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி பெயர்களை மாற்றிக்கொண்டு, சுமார் ஆறு மாதங்கள் மட்டுமே இயங்கிவிட்டு, பின்னர் மறைந்துவிடும் 105 உள்ளுர் நிறுவனங்களைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பொன்றே இந்த மோசடியின் பின்னால் இருப்பது விசாரணைகளில் …

Continue Reading

கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம்  நீடிக்கப்படுவது குறித்து தீர்மானமில்லை; பிரதி அமைச்சர் ரத்ன கமகே

கடற்றொழிலாளர்களுக்கான  மானியக்காலத்தை மேலும் நீடிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சோ அல்லது அரசாங்கமோ இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை என்று கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நெருக்கடி நிலைமையினால் பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான மூன்று மாத காலப்பகுதிக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கடற்றொழிலார்களுக்கான எரிபொருள் மானியத் திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அதுகுறித்து வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு …

Continue Reading

பொருளாதார சீர்திருத்தங்களை மீளாய்வு செய்ய நாணய நிதியக்குழு 24இல் இலங்கை வருகை

இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான உத்தியோகபூர்வ அதிகாரிகள் மட்ட விஜயமொன்றை மேற்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜியோர்ஜியு தலைமையிலான விசேட குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்த விஜயத்தின் போது, நாட்டின் சமீபத்திய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் சீர்திருத்த திட்டங்களின் தற்போதைய நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக அரசாங்க அதிகாரிகள் மற்றும் பல்வேறு சிவில் சமூகப் பங்குதாரர்களுடன் குறித்த  குழுவினர் …

Continue Reading

எரிபொருளின் விலைகள்  உடனடியாகக் குறையாது; அமைச்சர் அனுர

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைந்தாலும் உள்நாட்டில் எரிபொருள் விலைகள் உடனடியாகக் குறைக்கப்பட மாட்டாதென எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் 60 நாட்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளன. இருந்த போதிலும் உலக சந்தையின் புதிய விலை மாற்றங்கள், இலங்கை போன்ற நாடுகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் புதிய கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும் போதே சாதகமாக …

Continue Reading

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படும் கடனுதவியை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நடப்பு ஆண்டில் கொள்கை சார்ந்த கடன் வசதிகளின் கீழ் பெறப்படும் நிதியுதவியை மேலும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது. கடந்த மார்ச் 16 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இந்த ஆண்டில் 380 மில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்ள ஏற்கனவே ஒப்புதலளிக்கப்பட்டிருந்தது. இதில் 100 மில்லியன் டொலர்கள், நாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை …

Continue Reading

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் உத்தியோகப்பூர்வமாக அறிமுகம்

இலங்கையின் பொருளாதாரத்தை உலகளாவிய ரீதியில் பன்முகப்படுத்தி வலுப்படுத்தும் நோக்கில், 2026 – 2030 காலப்பகுதிக்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஏற்றுமதி வருமானமாக ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். கொழும்பில் 16-06-2026 நடைபெற்ற தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் 2026 – 2030 உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதாரத்தை …

Continue Reading