ஊழியர்சேமலாபநிதி, ஊழியர்நம்பிக்கைநிதிஎன்பவற்றைஒரேகட்டமைப்பின்கீழ்கொண்டுவரபுதியகுழு
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் அனைத்து செயற்பாடுகளையும் ஒரு ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. தொழிலாளர் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கம், முதலாளிகள் மற்றும் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘முத்தரப்பு சபை’ ஒன்றின் மூலம் இந்த இரு நிதியங்களையும் ஒரே பொதுவான நிர்வாகத்தின் கீழ் இயக்குவதே இதன் நோக்கமாகும். 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஊழியர் …
Continue Reading
பொருளாதார மீட்சிக்கு ஏற்றுமதியே நீண்டகால தீர்வு; மத்திய வங்கி ஆளுநர்
இலங்கை பொருளாதாரம் தற்போது படிப்படியாக மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தை எட்டியுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் மூலம் தற்போதைய சூழலில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும், நீண்டகால பொருளாதார நிலையானத் தன்மைக்கு இவை மட்டும் போதுமானதல்ல என்பதால், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளிலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்க வலுவான ஏற்றுமதித் துறை அவசியமாகியுள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி.நந்த லால் வீரசிங்க தெரிவித்தார். கொழும்பில் 17-06-2026அன்று நடைபெற்ற தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் 2026 …
Continue Reading
உலக சந்தையை இலக்காகக் கொண்ட தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம்; அமைச்சர் அனில் ஜயந்த
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை, தற்போது 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக அரசாங்கம் மேற்கொண்ட மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை நடவடிக்கைகள் 2025 இல் 5 சதவீத வளர்ச்சியை எட்ட உதவியுள்ள நிலையில், இந்த நீண்டகால பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஏற்றுமதித் துறையின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது தொழில் அமைச்சர் மற்றும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த …
Continue Reading
அச்சுறுத்தல் நிலையில் இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை; சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை இன்னமும் அச்சுறுத்தல் நிலையிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ, அண்மையில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிரதான காரணம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் மோதல்களும், அதன்விளைவாக உலக சந்தையில் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புமேயாகும் என்றும், அதனை சீரமைப்பதற்கு இலங்கை அதிகாரிகளால் பொருத்தமான தற்காலிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு …
Continue Reading
தங்கப்பிணைமற்றும்மோட்டார்வாகனகடன்வசதிகளுக்கானஉச்சவரம்புஇறுக்கம்
இலங்கையில் மோட்டார் வாகனக்கடன் மற்றும் தங்கப்பிணை என்பவற்றுக்கான கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்பட்டிருப்பது கடன்வழங்குனர்களின், குறிப்பாக நிதி நிறுவனங்களின் இடர் அச்சுறுத்தலைக் குறைக்கும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் தங்கத்தால் பிணையுறுதி அளிக்கப்பட்ட கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பு 70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பு 10 சதவீதத்தினால் இறுக்கமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச கடன் தரப்படுத்தல் …
Continue Reading
மே மாதத்தில் பணவீக்கம் 5.5 சதவீதமாக உயர்வு
-
Editor
-
June 3, 2026
-
பொருளாதாரம்
-
0 Comments
மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் தீவிரமடைந்த மோதல்களை அடுத்து உள்நாட்டுப் பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பணவீக்கம் மே மாதத்தில் 5.5 சதவீதமாக உயர்வடைந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஏப்ரல் மாதம் 2.8 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் மே மாதத்தில் 0.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்த போதிலும், ஏப்ரலில் 6.8 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் மே மாதம் 7.8 சதவீதமாக உயர்வடைந்தது. அதேவேளை கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மாதாந்த அடிப்படையில் நோக்குகையில் மேமாதம் 0.9 சதவீத அதிகரிப்பொன்றைப் பதிவுசெய்தது. …
Continue Reading
எரிபொருள்விலையைஅதிகரிக்காவிடின்முழுகட்டமைப்பும்பாதிக்கப்படும்; வலுசக்திஅமைச்சு
எரிபொருள் விநியோகக் கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை அமுல்படுத்தப்பட்டுள்ளன.தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்காவிடின் முழு எரிபொருள் விநியோக கட்டமைப்பும் பாதிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார். இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 01-06-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமையினால் எரிபொருள் விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தின் போது சுத்திரகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகத்தின்போது அரசாங்கத்தாலும் ஒரு தொகை நிதி செலவழிக்கப்படுகிறது. …
Continue Reading
ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்தமை குறித்து மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்
சுமார் ஒரு வாரகாலமாக நீடித்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது சந்தையில் நிலவிய ஊகங்கள் மற்றும் அநாவசிய அச்சத்தின் காரணமாக உருவான ‘மிகைக் கேள்வியினால்’ ஏற்பட்டது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் ரூபாவின் பெறுமதியில் நிலவிய தளம்பல் நிலை சீரமைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் 26-05-2026அன்று கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் …
Continue Reading
8.75 சதவீதமாக உயர்த்தப்பட்டது ஓரிரவுக் கொள்கை வீதம்; பணவீக்கம் 5.4 சதவீதமாக உயர்வு
அண்மையகால உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு, பொருளாதார சமநிலையைப் பேணும் வகையில் கேள்வி, நிரம்பலைக் கட்டுப்படுத்துவதற்காக ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 8.75 சதவீதமாக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இருப்பினும் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமான மத்திய கிழக்கு மோதல்களின் விளைவாகத் தற்போது நாடு இருக்கும் நிலையானது, கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது காணப்பட்ட நிலையைவிடப் பன்மடங்கு முன்னேற்றகரமானதாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை …
Continue Reading
சீனாவின் உதவிகளுடன் மாதாந்தம் சுமார் 200 மில்லியன் ரூபா வரை மின்சார சபைக்கு சேமிக்க கூடிய மின்கல மின்சக்தி களஞ்சிய கட்டமைப்பு
சீனாவின் தொழிநுட்ப உதவிகளுடன் நாட்டில் மின்சாரத்தை விநியோகிக்கும் 16 துணை மின்நிலையங்களுக்காக 160 மெகா வோல்ட் முதல் 640 மெகா வோல்ட் கொள்ளளவு கொண்ட மின்கல மின்சக்தி களஞ்சிய கட்டமைப்பு காலி மற்றும் மாத்தறை ஆகிய மின் விநியோக துணை மின்நிலையங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்று துறைமுக மற்றும் சிவில் சேவை அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில், இலங்கையின் மின்சக்தித் துறையில் புதியதொரு அத்தியாயத்தைக் குறித்து நாட்டின் 1 ஆவது வர்த்தக ரீதியான மின்கல களஞ்சியக் கட்டமைப்பு அண்மையில் கொழும்பு …
Continue Reading