மத்தலவை பிராந்திய விமான போக்குவரத்து மத்திய நிலையமாக மாற்றுவதற்கு திட்டம்
இலங்கையின் மூலோபாய அமைவிடம் காரணமாக மத்தல சர்வதேச விமான நிலையத்தை பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்புடைய முதலீட்டு வாய்ப்புகளுக்காக கோரப்பட்டுள்ள விருப்பப் பிரகடனங்களுக்கான முன்மொழிவுக்கு முந்தைய சந்திப்பு மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், …
Continue Reading
அரசாங்கம் டொலரின்மதிப்பைவெற்றிகரமாகக்கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்துள்ளது;அமைச்சர்வசந்தசமரசிங்க
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரத்தை பாதுகாத்து மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் உள்நாட்டுச் சந்தையில் டொலரின் மதிப்பை அரசாங்கம் வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று வர்த்தக வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் …
Continue Reading
வாகனங்களுக்கான லீசிங் வசதி திடீரெனக் குறைப்பு;இறக்குமதியாளர்கள் சங்கம்
மத்திய வங்கியினால் வாகனங்களுக்கான லீசிங் வசதி திடீரென 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பது, முறையாக வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்துள்ள வர்த்தகர்களைப் பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார். அரசாங்கத்திற்குப் பாரிய வருமானத்தை ஈட்டித் தரும் இத்துறையை நம்பி சுமார் 30 முதல் 40 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் திடீர் சுற்றறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் அவசர …
Continue Reading
தங்கப் பிணையுறுதி மற்றும் மோட்டார் வாகன கடன் வசதிகளுக்கான உச்ச வரம்பு இறுக்கம்; இலங்கை மத்திய வங்கி
உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் தங்கத்தால் பிணையுறுதி அளிக்கப்பட்ட கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்சம் 70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பு 10 சதவீதத்தினால் இறுக்கமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இம்மாதம் 25-05-2026அன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தங்கத்தால் பிணையுறுதி அளிக்கப்பட்ட கொடுகடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பை அறிமுகப்படுத்துவதற்கும், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கொடுகடன் …
Continue Reading
40 நாடுகளுக்கு இலவச விசா; இலங்கை அறிவிப்பு
இலங்கையின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் 25-05-2026அன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கைக்கு அமைய கடந்த 2026 மார்ச் 30ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதி மற்றும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா , பஹ்ரைன், பெலாரஸ் ,பெல்ஜியம் ,கனடா ,சீனா, செக் குடியரசு, டென்மார்க் ,பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ,இந்தியா …
Continue Reading
இறக்குமதிசெய்யப்படும்வாகனங்களுக்குமூன்றுமாதங்களுக்கு 50 சதவீதமேலதிககட்டணம்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை மோட்டார் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் (Customs Import Duty) மீது தற்காலிகமாக 50 சதவீதம் மேலதிகக் கட்டணத்தை (Surcharge) விதிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள 2026.05.15 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, இப்புதிய வரி விதிப்பு முறை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், …
Continue Reading
வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது; அரசாங்கம்
சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகளால் டொலரின் பெறுமதிக்கு ஏற்படும் கூடுதல் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குத் தேவையான டொலர் இருப்புகளைப் பாதுகாப்பதற்காகவுமே தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதிக்கான தீர்வைக் கட்டணம் தற்காலிகமாக மூன்று மாத காலத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாழ்வாதாரத் தொழில் வாகனங்களுக்கு இந்த வரி அதிகரிப்பு எவ்வகையிலும் பொருந்தாது என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் …
Continue Reading
டிஜிட்டல்பொருளாதாரஇலக்குகளைஅடைவதற்குஆதரவு; நாதியாசயீத்
இலங்கையின் பரந்த டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில் எங்களது வங்கிப் பங்காளர்களுடன் இணைந்து இப்பயணத்தை தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம் என PayPal நிறுவனத்தின் சர்வதேச எல்லைகடந்த வர்த்தகத்திற்கான சிரேஷ்ட துணைத் தலைவரும், ஆசிய பசுபிக் பிராந்திய பொது முகாமையாளருமான நாதியா சயீத் தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் paypal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்தும் நிகழ்வு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. அங்கு விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் …
Continue Reading
இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பொறுப்பான பங்கினை வகிக்க மிகுந்த ஆர்வமாகவுள்ளோம்; நாத் பரமேஸ்வரன்
இணைக்கப்பட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். இது கடந்த சில மாதங்களாக அனைத்துப் பங்குதாரர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட ஒரு உண்மையான கூட்டாண்மையின் விளைவாகும். paypal நிறுவனத்தின் தரப்பிலிருந்து பார்க்கும்போது, இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்லவும், இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து, ஒரு பொறுப்பான பங்கினை வகிக்கவும் நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம் paypal நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான நிறுவன விவகார பணிப்பாளர் நாத் பரமேஸ்வரன் தெரிவித்தார். …
Continue Reading
பிரதமர் ஹரினி தலைமையில் ‘PayPal’ சேவை உத்தியோகபூர்வ அறிவிப்பு
டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதுவரை காலமும் இலங்கையர்களின் PayPal கணக்குகள் ‘பணம் அனுப்புவதற்கு மாத்திரம்’ வரையறுக்கப்பட்டிருந்ததுடன், இதன் மூலம் பயனாளிகள் வெளிநாடுகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்ய முடிந்த போதிலும், சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. இந்த வரையறை காரணமாக, இலங்கையின் சுயாதீன தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகங்கள் பெரும் தடைகளை …
Continue Reading