வியட்நாம் இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

(நமது நிருபர்) வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட ஐந்து  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் ஆகியோர் முன்னிலையில் 08-05-2026 அன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வியட்நாம் – இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுற்றுலாத் துறை, பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பு, மதம், சிவில், வர்த்தகம், போக்குவரத்து …

Continue Reading

இலங்கை – வியட்நாம் இடையில்  வர்த்தக, முதலீடு சுற்றுலா ஒத்துழைப்பு மன்றம்

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை – வியட்நாம் வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு மன்றம்’ 08-05-2026 அன்று  கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. வியட்நாம் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மன்றம், வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாமின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு …

Continue Reading

வன்முறைமற்றும்துன்புறுத்தல்சமவாயத்தைஏற்றுக்கொண்டதுஇலங்கை

2019 ஆம் ஆண்டு 190 ஆம் இலக்க வன்முறை மற்றும் துன்புறுத்தல் சமவாயத்தை ஏற்றுக்கொள்வதற்கான ஆவணம் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தசநாயக்கவினால் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எஃப்.ஹுங்போவிடம் கடந்த புதன்கிழமை (16) கையளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்கு கருத்துரைத்த நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தசநாயக்க, ‘வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பது தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190 ஆம் இலக்க சமவாயத்தை இலங்கை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ எனத் தெரிவித்தார். ‘பாலின …

Continue Reading

இலங்கையில் இரு அபிவிருத்தித் திட்டங்களுக்கென 2.6 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியது ஜப்பான்

இலங்கையில் நலிவடைந்த மற்றும் இலகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் சமூகங்களின் காலநிலைசார் மீண்டெழும் திறனை ஊக்குவிப்பதற்கும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்குமான இரண்டு புதிய திட்டங்களை அறிவித்திருக்கும் ஜப்பானிய அரசாங்கம், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கென அதன் மேலதிக வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக  2.6 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தப் புதிய திட்டங்கள், இயற்கை அனர்த்தங்களிலிருந்து நிலையான மீட்சி மற்றும் நாடளாவிய ரீதியில் சகலரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி என்பவற்றுக்குக் கணிசமான பங்களிப்பை …

Continue Reading

நாட்டின் எரிபொருள் இறக்குமதி செலவு கணிசமாக உயரக்கூடும்; இலங்கை மத்திய வங்கி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற நிலை காரணமாக, எதிர்வரும் காலத்தில் நாட்டின் எரிபொருள் செலவு உயர்ந்த மட்டத்திலேயே காணப்படுமென இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. எரிபொருள் இறக்குமதிச் செலவானது இலங்கையின் மொத்த இறக்குமதிச் செலவில் பெரும் பங்கைக் கொண்டுள்ளதுடன், கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக மொத்த இறக்குமதியில் சுமார் 20சதவீதம் அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2025 ஆம் …

Continue Reading

இலங்கை மின்சார சபைக்கு  38.7 பில்லியன் ரூபா நட்டம்

மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட 2025 வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை மின்சார சபையின் மொத்த நட்டம் 38.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரி மாதத்திலும் மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக 20 சதவீதத்தால்   மேலும் குறைக்கப்பட்டன.  2025 முதல் காலாண்டில் நிலவிய வறட்சியான …

Continue Reading

அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானங்களே எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்கும்; கலாநிதி நிஷான் டி மெல்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்று தசாப்தகாலமாக நிலையற்றதாகக் காணப்படுவதற்கு நிர்வாக சீர்கேடுகளே பிரதான காரணமாகும். எனவே நாடு முன்னேறவேண்டுமாயின், அரசாங்கம் குறுங்கால நெருக்கடி முகாமைத்துவத்திலிருந்து விலகி, நீண்டகாலத் திட்டமிடலில் கவனம் செலுத்தவேண்டும். தற்போதைய தீர்க்கமான கட்டத்தில் மேற்கொள்ளப்படும் சரியான தீர்மானங்களே எதிர்வரும் தசாப்தத்தில் நாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் என ‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.   தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு மீட்சி சார்ந்த கதையாடல்களுக்கு அப்பால், ஒரு முறையான அபிவிருத்தித் திட்டமிடல் அவசியம் …

Continue Reading

இலங்கையில் வரி வருமானம் 17.7 வீதம் அதிகரிப்பு; உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 606,002 மில்லியன் ரூபா (606 பில்லியன்) வரி வருமானத்தை ஈட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 17.7 சதவீத வளர்ச்சியாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம்  குறிப்பிட்டுள்ளது.  உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, 2026 ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையான காலப்பகுதியிலேயே இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. பிரதான வரி வகைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற அதிகப்படியான பங்களிப்பே இந்த வளர்ச்சிக்கு …

Continue Reading

நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான 3 சட்டமூலங்களையும் வாபஸ் பெறுங்கள்; மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

நிதி கொடுக்கல் வாங்கல்கள் சார்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மூன்று சட்டமூலங்களையும் அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன் நிறைவேற்றதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் வகையில் இச்சட்டமூலங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை வாய்ந்த பரந்துபட்ட கலந்தாலோசனைகளை முன்னெடுக்கவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளது. இதுகுறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அரசாங்கத்தினால் கடந்த வியாழக்கிழமை (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்) சட்டமூலம், 2006 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை …

Continue Reading

மட்டக்களப்பில்இரண்டுஇலட்சம்குடும்பங்களுக்குஉதவிதேவை

மட்டக்களப்பு மாவட்டத்தில்  40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். குறைந்தது இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு இந்த உதவி தேவைப்படுகின்றது. ஆனால் வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும வழங்கப்படுகின்றது. ஏனையோரின் நிலை என்ன? அவர்கள் முன்வைத்த மேன்முறையீடுகளுக்கு என்ன நடந்தது? என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்  கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் 10-04-2026 நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை  27 / 2 இன் கீழ்  கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் …

Continue Reading