பெருந்தோட்டத்துறைக்கு கியூ.ஆர் உரவிநியோகம் வெற்றியளித்துள்ளது
-
Editor
-
April 22, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
இலங்கையின் பெருந்தோட்டத்துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கியூ.ஆர் குறியீட்டு முறைமை ஊடான உர விநியோகம் பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கியூ.ஆர் குறியீட்டு முறையின் கீழ் உரங்களைப் பெறுவதற்காக 226,511 விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 31 வரை சிறு மற்றும் நடுத்தர அளவிலான தேயிலை விவசாயிகள் 187,759 பேருக்கு 21,117.7 மெட்ரிக் டொன் மானிய உரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாங்கம் மூலம் 50 …
Continue Reading
அரசாங்கம்புமுன்கூட்டியேதயாராகவேண்டும்; பொருளாதாரநிபுணர்தனநாத்பெர்னாண்டோ
மத்திய கிழக்கு போரானது தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது மேலும் தீவிரமடைந்து அடுத்த 3 மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு முகம் கொடுக்கும் வகையில், அரசாங்கம் இப்போதிருந்தே புத்திசாலித்தனமாக முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் 06-04-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நிலவும் மத்திய கிழக்கு போர்ச் …
Continue Reading
டிஜிட்டல் சேவைகளுக்கான 18 வீத வற் வரி ஜூலை வரை மீண்டும் ஒத்திவைப்பு
வெளிநாட்டு நிறுவனங்களால் இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத வற் வரியை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. வற் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உத்தியோகபூர்வ திருத்தங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எழுப்பியுள்ள கரிசனைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மின்-வணிகம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், இணையப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் மற்றும் நிதிநுட்பம் போன்ற சேவைகள் இந்த வரி வலைக்குள் …
Continue Reading
‘’தேசியகியூ.ஆர்கொடுப்பனவுஊக்குவிப்புத்திட்டம்” இன்றுஆரம்பம்
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “தேசிய கியூ.ஆர் கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபா வரையிலான அனைத்து ‘லங்கா கியூ.ஆர்.’ கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணத்தை முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் …
Continue Reading
தடையின்றி உர விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன
சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரத்தினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அரசாங்கத்தின் தலையீட்டுடன் புதிய ஒதுக்கீட்டு முறை (கியூ.ஆர்) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சந்தையில் நிலவும் உர விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்குத் தேவையான உரத்தினை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை சிறுபோக நெற்செய்கைக்கு மொத்தம் 80,000 தொன் யூரியா உரம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை மேலதிக யூரியா உர இருப்புகளை இறக்குமதி செய்வதற்கு …
Continue Reading
மத்திய கிழக்கு போர் நீடித்தால் இலங்கைக்கு கடும் பாதிப்பு; பேராசிரியர் டியூடர் வீரசிங்க
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்தால், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்புடைய நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு தேவையையோ அல்லது விருப்பத்தையோ வெளிப்படுத்தவில்லை என்றும், இதன் காரணமாக ஆசிய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினால் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டு தற்போது 36 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போதைய மற்றும் எதிர்கால நிலைமைகள் குறித்துக் …
Continue Reading
உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடிக்குள் இலங்கை சிக்கும்; சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர்
2022 ஆம் ஆண்டு முகங்கொடுத்த தீவிர பொருளாதார நெருக்கடியின் பின்னர், வெளியக அதிர்ச்சிகளைக் கையாள்வதற்கான இலங்கையின் இயலுமை பலவீனமான நிலையிலேயே உள்ளது. இத்தகைய பின்னணியில் மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்ந்து நீடித்தால், அது நாட்டின் பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைப்பதுடன், நாட்டை உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச்செலவு நெருக்கடிக்குள் தள்ளும் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிலைய ஆய்வாளர் கலாநிதி ரஜினி கமகே எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல்களால் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ரஜினி கமகேவினால் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வறிக்கையில் …
Continue Reading
மிக வலுவான நிலையில் இலங்கையின் செயற்பாடுகள்; சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் பாராட்டு
விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் கீழ் இலங்கையின் செயற்பாடுகள் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், நிலையான மறுசீரமைப்புக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான ஐந்தாம் மற்றும் ஆறாம் கட்ட மீளாய்வுகளை மேற்கொள்வதற்காக நாட்டுக்கு வருகைதந்திருக்கும் எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் 02-04-2026 அன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோருடன் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். இச்சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி சார்ந்த …
Continue Reading
அழுத்தங்களைஎதிர்கொள்வதில் மிகப் பலவீனமான நிலையில் இலங்கை; பொருளியலாளர் தலால் ரஃபி
மத்திய கிழக்கு மோதல்களின் விளைவாக தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியிலிருந்து இலங்கை குறைந்த கையிருப்புடன் மீண்டாலும், எதிர்வருங்காலங்களில் ஏற்படக்கூடிய உள்ளக மற்றும் வெளியக அழுத்தங்களை எதிர்கொள்வதில் நாடு மிகப் பலவீனமாகவே இருக்கும் என பிரபல பொருளியலாளர் தலால் ரஃபி கரிசனை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்துவரும் மோதல்களின் விளைவாக இலங்கையும் பல்வேறு வழிகளில் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்திருக்கும் பின்னணியில், இம்மோதல்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார நிலைவரம் மற்றும் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் தலால் ரஃபி, …
Continue Reading
போர் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் குறித்துநாணயநிதியப்பிரதிநிதிகளிடம்ஜனாதிபதிஎடுத்துரைப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களுக்கு மத்தியில்இ எரிபொருள் விலை மற்றும் வலுசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியப்பிரதிநிதிகள் குழுவினரிடம் எடுத்துரைத்தார். இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் 02-04-2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் …
Continue Reading