கொழும்பு மாநகர மேயருடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு 

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராகப் பொறுப்பேற்றுள்ள விராய் கெலி பல்தாசரை, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது, கொழும்பு நகரத்திற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்ய மேயர் விராய் கெலி பல்தாசர் கொண்டுள்ள உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் பாராட்டினார்.

இச்சந்திப்பில் கொழும்பு மாநகர சபை பிரதி மேயர், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், மற்றும் மாநகர செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.  உயர்ஸ்தானிகருடன் முதல் செயலாளர் (அரசியல்) டொம் சோபர் மற்றும் அரசியல் ஆலோசகர் இன்சாப் பக்கீர் மார்க்கர் ஆகியோரும் உடனிருந்தனர்.

Leave A Comment