கொவிட்டின் புதிய பிறழ் வால் இலங்கைக்கு அபாயமில்லை; சுகாதார அமைச்சு அறிவிப்பு

இந்தியாவில் பரவி வரும் கொவிட்-19 புதிய பிறழ்வு இலங்கையில் பரவக்கூடிய அபாயமில்லை ஆகையால் பொதுமக்கள் இதுகுறித்து வீண் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருந்த விசேட  அறிக்கையில் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜசிங்க மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தரவுகளுக்கமைய நாட்டில் கொவிட்- 19 புதிய பிறல்வு பரவக்கூடிய அபாயம் ஏதும் இல்லை. ஆகையால் புதிய கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கடந்த சில வாரங்களாக ஆசிய நாடுகளில் கொவிட் – 19 வைரஸின் புதிய பிறழ்வுகள் வெகுவாக பரவிவருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமூகத்தில் வைரஸ் தாக்கத்தை முகம் கொடுப்பதற்கு ஏதுவான சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றாமையே நோய்பரவலுக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் இதனை கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சு தேசிய அளவில் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.  நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் கொவிட்- 19 மாதிரி பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த கண்காணிப்புக்கமைய நாட்டில் தற்போது கொவிட்- 19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இலங்கையில் பரவக்கூடிய தொற்று நோய்களை முன்கூட்டியே அடையாளம் அடையாளம் காண தேவையான ஆய்வக பரிசோதனைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுவாச நோயான இன்ஃப்ளூவென்ஸா போல அவ்வப்போது கொவிட்- 19 வைரஸ் தொற்றும் அதிகரிக்களாம்.

நாட்டில் தற்போது நோய்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் முதியவர்கள், பலவீனமானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் போன்றோர் நோய் பரவல் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவது அவசியம். அடிக்கடி கைகளை கழுவுதல், இருமல், தும்மல் உள்ளவர்கள் முககவசங்களை அணிதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார நடைமுறைகள் எந்நேரமும் பின்பற்ற வேண்டும் என்றார்.

Leave A Comment