சகல நாடுகளுடனும் நட்புறவு, ஆனால், இந்தியாவுக்கு  முதன்மையான இடம்

கலாநிதி ஜெகான் பெரேரா

இந்தி பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் இருந்த மூன்று நாட்களும் (ஏப்ரில் 4 — 6) அவரை வரவேற்று கௌரவிப்பதற்கு அரசாங்கம் அதன் சக்திக்கு உட்பட்ட சகல நடவடிக்கைகளையும் எடுத்தது. இலங்கை விருந்தோம்பலுக்கு பெயர்போனது. அரசாங்கம் அதன் விருந்தோம்பல் பற்றிய எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் விஞ்சிவிட்டது. விமான நிலையத்தில் ஆறு அமைச்சர்களுடன் சிறுவர்களும் பிரதமர் மோடியை வரவேற்றார்கள். பிரதமரை புகழ்ந்துரைக்கும் வாசகங்கள் கொண்ட மிகப்பெரிய பதாதை ஒன்றும் அங்கு காணப்பட்டது.

பிரதமர் மோடியின் நட்புறவையும் ஒத்துழைப்பையும் பாராட்டி ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க அவருக்கு நாட்டின் அதியுயர்  ” “ஸ்ரீலங்கா மித்ர விபூஷண” விருதை வழங்கினார். மூன்று வருடங்களுக்கு முன்னர் பொருளாதார அனர்த்தத்தில் இருந்து இலங்கையை பாதுகாத்ததில் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் வகித்த பாத்திரத்துக்காக அவருக்கு பெரும் கொளரவம் கொடுப்பது தகும். அந்த பாத்திரம் வெறுமனே மனிதாபிமானம் அல்ல ; பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கையின் ஒரு மைல்கல்லாக இருக்கும் ” அயலகத்துக்கு முதலிடம் ” என்ற ஒரு கோட்பாட்டில் வேரூன்றிய பிராந்திய தலைமைத்துவத்தின் கூர்மதியுடனான ஒரு  வெளிப்பாடாகும்.

தெற்காசியாவில் உறுதிப்பாட்டை ஏற்படுத்தும் நாடு என்ற வகையில் இந்தியாவுக்கு ஒரு முக்கியமான பாத்திரம் இருக்கிறது. அதுவும் குறிப்பாக, பிராந்தியத்தின் அயல்நாடுகள் பொருளாதார அல்லது அரசியல் நெருக்குதலின் கீழ் தடுமாறும்போது உதவுவதில் அந்த பாத்திரம் மிகவும் முக்கியமானது. அது விடயத்தில் இந்தியா அதன் முழு ஆற்றலையும் இன்னமும்  வெளிப்படுத்தவில்லை. பாகிஸ்தானுடனும் பங்களாதேஷுடனும் இந்தியாவின் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், இலங்கை விடயத்தில் இந்தியா உண்மையில் அருச்செயல் செய்திருக்கிறது.  இந்த நேரத்தில் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு அப்பால் அடையாளபூர்வமான கனதியைக் கொண்டிருக்கிறது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடியே என்று ஜனாதிபதி திசாநாயக்க தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இலங்கைக்கு முதலில் விஜயம் செய்ததன் மூலமாக அவர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர்களுக்கு சர்வதேச முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறார். மோடி அவ்வாறு செய்தது ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு  இந்தியாவின் அங்கீகாரத்தை குறிப்பால் தெரியப்படுத்தியிருக்கிறார்.

பாரம்பரியமான அரசியல் உயர்வர்க்கப் பின்புலத்தைக் கொண்டிராத ஒரு தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு அந்த அங்கீகாரம் விசேடமான பெறுமதியுடையதாகும். பாரம்பரியமான ஆளும் வர்க்கத்துக்கு வெளியில் இருந்து அரசியலுக்கு தானும் மோடியும் வந்தவர்கள் என்பதால் இருவருக்கும் பொதுவான அரசியல் மூலமுதல் இருக்கிறது என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதன் மூலமாக ஒரு பரந்தளவிலான தத்துவார்த்த ஒத்தியல்வை குறிக்கும் பாலம் ஒன்றை தனக்கும் மோடிக்கும் இடையில் ஜனாதிபதி அமைத்திருகிறார்.

பெட்டிக்குள் இருந்த ” ஸ்ரீலங்கா மித்ர விபூஷண ” பதக்கத்தை பிரதமர் மோடிக்கு முதலில் காண்பித்து பிறகு அதை வெளியில் எடுத்து அவரின் கழுத்தில் அணிவித்த போது ஜனாதிபதி திசாநாயக்கவிடம் இருக்கும் மனிதநேய உணர்வு வெளிப்பட்டது. இரு தலைவர்களும் தங்களது கைகளை இறுகப்பற்றி ஒன்றாக உயர்த்திப்பிடித்தபோது அவர்கள் தங்களுக்கு இடையிலான தோழமையையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தினார்கள். அது நீண்டகால அனுபவம் கொண்ட ஒரு மூத்த தலைவருக்கும் தேசிய தலைமைத்துவத்துக்கான பயணத்தை அண்மையில் ஆரம்பித்த ஒரு இளம் தலைவருக்கும் இடையிலான தோழமைச் செய்தியைக் கூறியது.

இந்திய விரோதக் கோட்பாட்டை ஒரு பிரதான அம்சமாகக் கொண்டிருந்த ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி.) முதலாவது  ஆயுதக்கிளர்ச்சி 54 வருடங்களுக்கு முன்னர் தொடக்கிய தினமான ஏப்ரில் 5  ஆம் திகதி பிரதமர் மோடிக்கு ஜே.வி.பி.யின் இன்றைய தலைவரான ஜனாதிபதி திசாநாயக்க விருதை வழஙகிக் கௌரவித்தது கவனிக்கத்தக்கது. ( பிறகு 1987 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. முன்னெடுத்த ஆயுதக்கிளர்ச்சியும் இந்திய விரோத கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது)  அவ்வாறு அந்த விருதை வழங்கியதன் மூலமாக திசாநாயக்க தன்னை அரசியல் வேர்களுக்கு அப்பால் சென்று தேசிய மட்டத்தில் இருந்து சர்வதேச மட்டத்துக்கு உயருகின்ற உண்மையான ஒரு இலங்கைத் தலைவராக  தன்னை நிரூபித்தார்.

நம்பிக்கையை கண்டறிதல்

இந்திய பிரதமரின் விஜயத்தின்போது கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட ஏழு உடன்படிக்கைகளில் ஆறு உடன்படிக்கைகள் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பானவை. அவை புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்திட்டங்கள் மற்றும்்டிஜிட்டல் ஆட்சிமுறைத்தளம் தொடக்கம் பெருந்தோட்டத் துறையில் உட்கட்டமைப்பு முதலீடுகள் வரையானவை. இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்தல், 5000 மதத்தலங்களுக்கு சூரியசக்தி மூலமான மின்சாரத்தை வழங்குதல் தொடர்பான உடன்படிக்கைகள் அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அடையாள அரசியல் உணர்வுகளுடன் அபிவிருத்தி உதவியை கலப்பவையாக அமையும்

இந்த இரு செயற்திட்டங்களும் அபிவிருத்தி இராஜதந்திரத்தை மூலோபாய நோக்கங்களுக்கு பயன்படுத்தும் இந்தியாவின் திட்டங்களுக்கு இசைவானவையாகும். கடனில் தங்கியிருக்கும் போக்கை அதிகரிப்பதாக அடிக்கடி  விமர்சிக்கப்படும்  உதவி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பிலான சீனாவின் அணுகுமுறைகளைப் போலன்றி இந்தியாவின் இந்த இந்த வகையான திட்டங்கள் கூட்டுப்பங்காண்மை, கலாசார நெருக்கம் மற்றும் நீண்டகால அடிப்படையில் ஆற்றல் மேம்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்துபவையாக இருக்கின்றன.

ஏழாவது உடன்படிக்கை இரு நாடுகளுக்குமே நீண்டகால அக்கறையாக இருந்துவரும் பாதுகாப்பு மற்றும் தேசிய பந்தோபஸ்துடன் தொடர்புடையது.  ஏனைய ஆறு உடன்படிக்கைகளின் சாராம்சங்களும்  பிரதமர் மோடியின் விஜயத்தின்போது வெளியிடப்பட்ட போதிலும்,  இந்த ஏழாவது உடன்படிக்கை உட்பட எந்தவொரு உடன்படிக்கையும் இரு அரசாங்கங்களின் மட்டத்துக்கு வெளியே கலந்தாலோசிக்கப்படவில்லை.

பொருளாதார உடன்படிக்கைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பொதுவெளியில் அக்கறைக்குரியவையாக இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக, டிஜிட்டல் திட்டம் ஊடாக இலங்கை குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை இந்தியா பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் பற்றிய அக்கறையைக் கூறலாம். ஆனால், பாதுகாப்பு உடன்படிக்கை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. இரு நாடுகளின் தேவைகளையும் பாதுகாப்பு உடன்படிக்கை எந்தளவுக்கு நிறைவேற்றும் என்பதைப் பொறுத்து அது பரஸ்பரம் பயன்தரக்கூடிய மாற்றம் குறித்து இடம்பெறக்கூடிய பேச்சுவார்த்தைகளுக்கு அத்திபாரமாக அமையக்கூடிய நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவும்.

கடந்த காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நம்பிக்கைப் பற்றாக்குறை ஒன்று இருந்து வந்தது.விடுதலை புலிகளுடமும் மற்றைய தமிழ் தீவிரவாத இயக்கங்களுடனுமான போர்க்காலத்தில் நாடு எதிர்நோக்கிய இடர்பாடான பாதுகாப்பு நிலைவரத்தை இலங்கையர்கள் மனதில் வைத்திருக்கிறார்கள். நாட்டின் சில பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விடுதலை புலிகள் செய்த நிருவாகம் நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பெரும் ஆபத்தை தோற்றுவித்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் சம்மதம் இன்றி இலங்கையின் வான்பரப்பிற்கு இராணுவ விமானங்களை இந்தியா அனுப்பிய காலப்பகுதியாகவும் ( ஜூன் 1987 ) அது அமைந்தது. தனது அந்த செயலை ஒரு  மனிதாபிமான நடவடிக்கை என்று இந்தியா  நியாயப்படுத்திய போதிலும், பெருமளவில் இந்தியாவின் இராணுவத் தலையீட்டுக்கான சாத்தியம் குறத்து அச்சம் நிலவியது.அதை தொடர்ந்து அடுத்தமாதம்  கைச்சாத்திடப்பட்ட 1987 ஜூூல இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்துடன் ஒரு அமைதிகாக்கும் படையாக இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்படுவதற்கு வழவகுத்தது.

கட்டுப்பாடில்லாத நண்பர்கள்

இலங்கை இனநெருக்கடியில் இந்திய தலையீட்டின் வரலாறு இந்தியாவுக்கு ஒரு சரிசம எதிரிடையாக ( Coubterbalance ) செயற்பட வைப்பதற்கு ஏனைய பெரிய வல்லரசுகளை நோக்குவதற்கு இலங்கைக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. மிகவும் அண்மைய வருடங்களில் ஆராய்ச்சி என்ற பெயரில் இலங்கை கடற்பரப்புக்கு சீனாவில் இருந்து கடற்படைக் கப்பல்கள் வருகை தந்தது தொடர்பில் இந்தியா விசனத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறது.  சீனக்கப்பல்கள் செய்வதாகக் கூறப்படும் ஆராய்ச்சிகள் இந்தியவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடும் என்பது இந்தியாவின் விசனம்.  சீனாவுடனான இலங்கையின் ஊடாட்டங்கள் குறிப்பாக,  சிவில் — இராணுவ இரட்டை நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியங்களைக் கொண்டவையாக தோன்றும் அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் போன்றவை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கசப்புணர்வை ஏற்படுத்தின.

அதிகரித்துவரும் சீனாவின் உலகளாவிய செல்வாக்கையும்  மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் (Belt and Road Initiative ) ஊடாக செல்வாக்கை வெளிக்காட்டுவதற்கான சீனாவின் அபிலாசையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இலங்கையின் புவியியல் அமைவிடம் அதை இந்துசமுத்திரத்தில் ஒரு முக்கிய மையமாக்குகிறது. இந்தியாவும் இலங்கையும் தற்போது கைச்சாத்திட்டிருக்கும் பாதுகாப்பு உடன்படிக்கை கடந்த காலத்தின்  இந்த அச்சங்களையும் சந்தேகங்களையும் தணித்து விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் .

சகல நாடுகளுடனும் நட்புறவு என்பதே ஜனாதிபதி திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின்  நிலைப்பாடாகும்.” சகலருடனும் நட்புறவு, எவருடனும் பகைமை இல்லை ” என்ற கோட்பாடு ஒன்றும் புதியதல்ல, ஆனால், முக்கியமான வல்லரசு நாடுகளுக்கு இடையில் தீவிரமடைந்திருக்கும் உலகளாவிய போட்டாபோட்டிக்கு மத்தியில் இன்று இடர்பாடுகள் அதிகமானவையாக இருக்கின்றன. புவியியல் மற்றும் வரலாற்று அடிப்படையில்  இந்தியா எப்போதுமே இலங்கையின் முதலாவதும் மிகவும் முக்கியமானதுமான பங்காளியாக விளங்கும். 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டுச் செலாவணி தீர்ந்துபோனபோது சீனாவோ அல்லது மேற்குலக நாடுகளோ அல்ல, இந்தியாவே  அவசர பொருளாதார உதவியை வழங்குவதற்கு ஓடோடி வந்தது. அந்த ஆதரலு தொடர் கடனாகவும் நேரடி உதவியாகவும் 400 கோடி டொலர்களாக விரைவாகவும் குறைந்தபட்ச நிபந்தனையுடனும் வழங்கப்பட்டது. பிராந்திய நெருக்கத்தினால்  (சர்வதேச பல்தரப்பு

Leave A Comment