சவேந்திர, ஜெகத், வசந்த, கருணாஅம்மான்ஆகியோருக்குபிரித்தானியாதடை
- Editor
- March 28, 2025
- அரசியல், தமிழ் Header
- அரசியல்
- 0 Comments
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது நடந்த கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான படைகளின் முன்னாள் தளபதிகள் மற்றும்; தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதி ஆகியோர் மீது பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது.
பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானியும், இராணுவத்தின் முன்னாள் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெகத் ஜெயசூரிய மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயகத்தின் இராணுவத்தளபதியும் பின்னர் அவ்வியகத்துக்கு எதிராக இலங்கை இராணுவத்தின் சார்பாகச் செயற்படும் துணை இராணுவப் படையான ‘கருணா குழு’வை வழிநடத்தியவருமான ‘கருணா அம்மான்’ என்று அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீதே பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது.
இதுகுறித்து பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளர் டேவிட் லம்மி விடுத்துள்ள அறிவிப்பில்,
இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. இதில் நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை ஆகியவை உள்ளடங்குகின்றன.
உள்நாட்டுப்போரின் போது செய்யப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்புக்கூறலைக் கோருவதும், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் கலாசாரத்தைத் தடுக்கும் நோக்கத்தில் மேற்படி நபர்கள் மீது தடைகளின் விதிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் தேசிய ஒற்றுமைக்கான உறுதிப்பாடுகளை வரவேற்பதோடு மனித உரிமைகள் தொடர்பாக அந்த அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு பிரித்தானியா உறுதிபூண்டுள்ளது.
அந்த வகையில் குறித்த நபர்களுக்கு எதிராக பயணத் தடைகள், சொத்து முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கையின் உள்நாட்டுப்போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தற்போதும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மீறல்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாக தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி அநுரகுமாரவும் அரவது அரசாங்கமும் உறுதியளித்துள்ளது. அந்த முடிவானது கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்கிறது.
அந்த வகையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தி அவற்றை மேம்படுத்துவதற்காக இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் எதிர்பார்ப்புடன் உள்ளது.
பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச்செயலர் கத்தரின் வெஸ்ட் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, பிரதமர், வெளியுறவு அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கில் உள்ள அரசியல் தலைவர்களுடன் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான ஆழமான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
அந்த வகையில் நாட்டின் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கு, கடந்த கால தவறுகளை ஏற்றுக்கொள்வதும் பொறுப்புக்கூறுவதும் அவசியமாகும். அந்த அடிப்படையில் பிரித்தானியாவால் நான்கு நபர்களை மையப்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்ட தடைகள் பட்டியல் அமைந்திருக்கின்றது. இந்த அறிவிப்பை ஆதரிப்பதன் ஊடாக இலங்கையின் அனைத்து சமூகங்களும் வளர்ச்சியைக் காண்டு செழிப்பாக முடியும். அது எமது விருப்பமாகும்.
மனித உரிமைகள் மேம்பாடுகள், பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட புதிய அரசாங்கத்தின் பரந்த சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் அதனுடன் இணைந்து ஆக்கபூர்வமாக பணியாற்றுவதற்கு பிரித்தானியா உறுதிபூண்டுள்ளது.
அதேநேரம், எமது நாட்டின் மாற்றத்திற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது எமது தேசிய பாதுகாப்பிற்கு நன்மையாகும் என்பதையும் பிரித்தானியா இங்கிலாந்து அங்கீகரிக்கிறது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான கனடா, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியாவை உள்ளடக்கிய முக்கிய குழுவில் பிரித்தானியாவும் இணைந்துள்ளதோடு இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான சர்வதேச முயற்சிகளை நீண்ட காலமாக வழிநடத்தி வருகின்றமை முக்கியமானதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் விசேட குறிப்புக்களாக, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் இராணுவத் தளபதி, கருணா அம்மான் என்றழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் பின்னர் இலங்கை இராணுவத்தின் சார்பாகப் பணியாற்றிய துணை இராணுவக் குழுவான கருணா குழுவை உருவாக்கி வழிநடத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதித் திட்டத்தின் மூலம் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத்தை இங்கிலாந்து ஆதரித்துள்ளதோடு இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் உறுப்பினராக கடன் மறுசீரமைப்பையும் nஇலங்கையின் உள்நாட்டு வருமானத்துறைக்கு தொழில்நுட்ப உதவிகளையும் பிரித்தானியா வழங்கியுள்ளது.
பிரித்தானியா மற்றும் இலங்கை வலுவான கலாசார, பொருளாதார, உறவுகளைக் கொண்டுள்ளதோடு மக்களுடனான உறவுகளையும் பகிர்ந்து கொள்கின்றன, இதில் கல்வி வசதிகள் முக்கியமானவை. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தகுதிகளை வழங்குவதற்காக பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில மொழிப் பயிற்சியளித்தல், நாடு கடந்த கற்கைகளுக்கு உதவுதல் மூலம் இலங்கையில் கல்வித்துறையை விரிவுபடுத்தியுள்ளது

