பெப்ரவரி 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அலுவல்களில் திருத்தம்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2473/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம் உள்ளடக்கப்பட்ட தீர்மானத்தை பெப்ரவரி 6ஆம் திகதி மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (பெப். 3) பி.ப 1.30 மணிக்குக் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கு அமைய அன்றையதினம் விவாதத்திற் எடுத்துக்கொள்ளவிருந்த தனியார் உறுப்பினர் பிரேரணைகள் மற்றும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை என்பவற்றை பிறிதொரு தினத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும், 2026.01.28ஆம் திகதிய 2473/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளையை பெப்ரவரி 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 5.30 மணிக்கு விவாதம் இன்றி அங்கீகரிப்பதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Leave A Comment