வர்த்தகஅழுத்தங்களைஎதிர்கொள்ளபிராந்தியஒத்துழைப்பைவிரிவுபடுத்துங்கள்;ஆசியஅபிவிருத்திவங்கி
- Editor
- April 18, 2025
- பொருளாதாரம்
- பொருளாதாரம்
- 0 Comments
இலங்கையின் இவ்வாண்டு பொருளாதாரம் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்யும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது.
அதேவேளை அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்வை வரிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான சிரேஷ்ட பொருளியலாளர் லிலியா அலெக்சன்யன், ‘அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்வைகளுக்கு விலக்களிக்கப்படக்கூடும். அல்லது பேச்சுவார்த்தைகள் ஊடாக அவ்வரி அறவீட்டு வீதத்தைக் குறைத்துக்கொள்ளமுடியும். அதன்மூலம் சகலரும் குறைந்தளவிலான தாக்கங்களுக்கே முகங்கொடுக்கநேரும்’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று இலங்கையின் நிதியியல் மற்றும் நாணயக்கொள்கை முகாமைத்துவம் சிறப்பானதாகக் காணப்படுவதாகவும், அதனூடாக வெளியகக்கடன் பெறுமதி மற்றும் பணவீக்கம் என்பன குறைவடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காஃபுமி கடொனோ, இந்த அடைவுகளுக்கு மத்தியிலும், இலங்கையின் மீட்சி இன்னமும் நலிவான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ‘தற்போது பெருமளவுக்குப் பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நீண்டகால அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கு தற்போதைய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியமாகும். அதுமாத்திரமன்றி உலகளாவிய வர்த்தக அழுத்தங்கள் உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கு பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்திக்கொள்வது இன்றியமையாததாகும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

