குருந்தூர் உட்பட வடக்கு, கிழக்கிலுள்ள காணி பிரச்சினைகளுக்குஎமது ஆட்சியில் நிச்சயம் தீர்வு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
குருந்தூர் மலை விகாரை விவகாரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக முறையான தீர்வுகளை எதிர்பார்க்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 23-06-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகள் இனவாத நோக்கங்களுக்காக அல்லது இலாப நோக்கங்களுக்காக அரசியல் செல்வாக்கைப் …
Continue Reading
நிகழ்நிலை காப்புச் சட்டம் நீக்கும் சட்டமூலம் சமர்ப்பிப்பு
நிகழ்நிலை காப்புச் சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலத்தை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இரண்டாம் மதிப்பீட்டுக்காக சபையில் முன்வைத்தார். பாராளுமன்றம் 23-04-2026 அன்று கூடிய போது சபை முதல்வர் சட்டமூலத்தை இவ்வாறு முன்வைத்தார். 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்காக புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கமைய, ‘நிகழ்நிலை பாதுகாப்பு’ தொடர்பான (இரத்துச் செய்தல்) சட்டமூலம் 2025.04.18 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது. ‘இந்த சட்டம் 2025ஆம் …
Continue Reading
பாதுகாப்புத்துறைப் பங்காண்மை குறித்து இலங்கை – அமெரிக்கா விரிவாக ஆராய்வு
-
Editor
-
June 24, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
கடல்சார் மற்றும் வான்வழி ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவடைந்துவரும் பாதுகாப்புத்துறைப் பங்காண்மை குறித்து அமெரிக்க – பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க – பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடருக்கும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகரவுக்கும் இடையிலான சந்திப்பு 23-06-2026 அன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பேரனர்த்த …
Continue Reading
ஐ.நா சபையின் விசேட பிரதிநிதியுடன் அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு பல்வேறு துறைகள் சார்ந்த ஒருங்கிணைந்த மற்றும் பரந்துபட்ட அணுகுமுறையைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி நஜாட் மால்லா ஜித் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றாக ஒழித்தல் தொடர்பான தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி …
Continue Reading
ஆசிய – பசிபிக் விமான பாதுகாப்பு மாநாடு நீர் கொழும்பில் ஆரம்பம்
-
Editor
-
June 24, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
21ஆ வது ஆசிய – பசிபிக் ஒத்துழைப்பு வழிநடத்தல் குழு கூட்டமும் (CASP – AP), 14வது ஆசிய – பசிபிக் விமான பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மன்றமும் நீர்கொழும்பு ‘கோல்ட் சேண்ட்ஸ்’ ஹோட்டல் வளாகத்தில் 23-06-2026 அன்று கோலாகலமாக ஆரம்பமாகின. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சர்வதேச மாநாட்டின் ஆரம்ப விழாவில், பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக கலந்து கொண்டார். சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் …
Continue Reading
ஆசிய – பசிபிக் விமான பாதுகாப்பு மாநாடு நீர் கொழும்பில் ஆரம்பம்
-
Editor
-
June 24, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
21ஆ வது ஆசிய – பசிபிக் ஒத்துழைப்பு வழிநடத்தல் குழு கூட்டமும் (CASP – AP), 14வது ஆசிய – பசிபிக் விமான பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மன்றமும் நீர்கொழும்பு ‘கோல்ட் சேண்ட்ஸ்’ ஹோட்டல் வளாகத்தில் 23-06-2026 அன்று கோலாகலமாக ஆரம்பமாகின. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சர்வதேச மாநாட்டின் ஆரம்ப விழாவில், பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக கலந்து கொண்டார். சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் …
Continue Reading
அவசரகாலநிலை தொடர்ந்து நீடிக்கப்படுவது குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தீவிர கரிசனை
-
Editor
-
June 24, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலநிலைப் பிரடகனம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுவருவது குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், அதனை உடன் முடிவுக்குக்கொண்டுவந்து, மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் அவசரகாலநிலை தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டுவருவது குறித்து நாம் மிகுந்த கவலையடையும் அதேவேளை, அவசரகாலநிலையைத் தொடர்ந்து நீடிக்கவேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்துகிறோம். அத்தோடு அவசரகாலநிலையை நீடிப்பதை பாராளுமன்றம் நிராகரிப்பதுடன், அதற்குப் பதிலாக சமூகத்துக்கு மிக அவசியமானதும், …
Continue Reading
சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு
சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த வருட சிறு போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்புக்கள் இன்னும் சந்தைக்கு போதுமான அளவு விநியோகிக்கப்படாமை பிரச்சினையாக மாறியுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த கையிருப்புகளை சந்தைக்கு விநியோகிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்தும் கேட்டறிந்தார். அத்துடன், இந்த சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன் …
Continue Reading
நீதித்துறை சம்பந்தமாக சபாநாயகரிடத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை
நீதித்துறையில் நிலவும் வெற்றிடங்கள், வழக்குத் தாமதங்கள் மற்றும் அவற்றிற்குக் காரணமாக அமைந்துள்ள கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக்கருதி இந்த விவாதத்தை நடத்த வேண்டுமெனக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதம் 23-06-2026அன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. அதில் தற்போது நீதித்துறையில் நிலவும் வெற்றிடங்கள் காரணமாக, அந்த நிறுவனங்களின் பணிகளை வினைத்திறனாகவும், சுயாதீனமாகவும், …
Continue Reading
ஐ.நா.பிரதிநிதிகள் குழுவுடன் நீதியமைச்சர் சந்திப்பு
-
Editor
-
June 24, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று 22-06-2026அன்று நீதி அமைச்சில் இடம்பெற்றது. சிறுவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது சிறுவர்கள் காணொளித் தொழில்நுட்பம் ஊடாக சாட்சியமளிக்கும் வசதிகள், சிறுவர் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நீதிமன்றங்களில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளின் போது சிறுவர்களிடம் சாட்சியங்களைப் பெறும்போது காணொளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வசதி, குற்றவியல் நடைமுறைச் சட்டக் …
Continue Reading