மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

Continue Reading

ஜனாதிபதிக்கும் இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்

இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த ஊழியர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும், அதுவரை, அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் செயல்பட்டு, எதிர்பார்க்கும் நோக்கங்களை அடைவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்கள் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த ஊழியர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனங்களுக்குள் உறுதிப்படுத்தப்படுவதையும், நிறுவனங்களின் கீழ் …

Continue Reading

ஐக்கிய அரபு அமீரக வாழ் இலங்கையர்களின் விபரங்களைச் சேகரிக்கும் விசேட திட்டம் இடைநிறுத்தம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இலங்கை பிரஜைகளுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதற்கும் அவர்களுக்குத் தேவையான நலன்புரிச் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் அவசியமான தகவல்களைச் சேகரிக்கும் விசேட செயற்திட்டமொன்றை அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக 03-09-2026  அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் நிமித்தமும் ஏனைய தேவைகளுக்காகவும் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பான துல்லியமான தரவுகளைத் திரட்டுவதற்கு தூதரகம் தற்போது முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதன் மூலம் அமீரகத்தில் வாழும் இலங்கையர்களுடன் மிகவும் நெருக்கமான மற்றும் பாதுகாப்பான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றோம் இந்த விபரங்களைச் சேகரிப்பதற்கென இணையதளம் ஊடாக வழங்கப்பட்டிருந்த விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பு தற்போது ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து இலங்கை பிரஜைகள் எவரும் குழப்பமடையத் தேவையில்லை. தொழில்நுட்பக் கோளாறுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டவுடன் தரவுகளைப் பதிவு செய்வதற்கான புதிய இணைய இணைப்பு மிக விரைவில் தூதரகத்தின் உத்தியோகபூர்வ ஊடகப் பக்கங்களில் மீண்டும் வெளியிடப்படும். ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிகத் தாமதங்களுக்காக வருந்துவதாகவும் இக்காலப்பகுதியில் பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. அமீரகத்தில் உள்ள இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவசர காலங்களில் அவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை தடையின்றி வழங்கவும் இவ்வாறான தரவு சேகரிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இலங்கை மின்சார சபை கலைப்பு; 25 மின்சாரசபை தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவியரீதியில்பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டு, அதன் பணிகள் ஆறு தனித்தனி அரசுடைமை நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில்,  ஊழியர்களின் எதிர்காலத் தொழில் பாதுகாப்பு குறித்து எவ்விதத் தெளிவும் வழங்கப்படவில்லை என தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை ஊழியர்கள் 09-03-2026அன்று  முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். 1969ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு, 56 ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்த இலங்கை மின்சார சபை, மார்ச் 8ஆம் திகதி நள்ளிரவுடன் உத்தியோகபூர்வமாகச் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது. 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புதிய மின்சாரச் சட்டத்தின்படி, மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் கட்டமைப்புச் செயல்பாடுகள் எனப் பிரிக்கப்பட்டு, ஆறு புதிய நிறுவனங்கள் பொறுப்புகளை ஏற்றுள்ளன. இந்தத் திடிர் மாற்றத்தினால் ஊழியர்களின் எதிர்காலத் தொழில் பாதுகாப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தங்கள் குறித்து எவ்விதத் தெளிவும் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள மின்சார சபை சுயாதீன தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 25 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.  இந்த மறுசீரமைப்பு மூலம் மின்சாரக் கட்டணம் மேலும் உயரும் அபாயம் உள்ளதாகவும், ஊழியர்களின் தன்னார்வ ஓய்வுத் திட்டம் காரணமாகப் போதிய பணியாளர்கள் இன்றி எதிர்காலத்தில் மின் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இது குறித்து 09-03-2026அன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மின்சார சபை சுயாதீன தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பிரபாத் பிரியந்த குறிப்பிடுகையில், மின்சார சபையின் ‘மரணச் சடங்கு’ நடைபெற்ற இந்நாளில், ஊழியர்களுக்கு எவ்வித ஆக்கபூர்வமான பதிலையோ அல்லது முறையான கூட்டு ஒப்பந்தத்தையோ அரசாங்கம் வழங்கவில்லை. மார்ச் 10ஆம் திகதி புதிய நிறுவனங்களில் இணைவதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவை ஆங்கில மொழியில் மாத்திரமே உள்ளதாகவும், ஊழியர்களின் சம்பளம், பணிபுரியும் இடம் மற்றும் வேலைப்பளு குறித்து அதில் எவ்விதத் தெளிவும் இல்லை. நேற்றைய தினம் (9) பிற்பகல் 3 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பணிப்பகிஷ்கரிப்பின் போது, மின் விநியோகக் கட்டமைப்புப் பராமரிப்புப் பணிகள் மற்றும் திருத்த வேலைகளில் இருந்து ஊழியர்கள் முற்றாக விலகியுள்ளனர். எனினும், மனிதாபிமான அடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைகள் மற்றும் இராணுவத் தலைமையகம் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். எமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான எழுத்துப்பூர்வமான பதிலை வழங்கத் தவறினால், 24 மணித்தியாலங்களுக்குப் பின்னர் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகளில் இருந்தும் ஊழியர்கள் விலக நேரிடும். இந்த மறுசீரமைப்பிற்கு எதிராக மின்சார பொறியியலாளர் சங்கம், தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட மின்சார சபையின் 25 பிரதான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரே நிலைப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. மின்சார சபையை ஆறு துண்டுகளாகப் பிரிப்பதன் மூலம் நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும்  இதன் இறுதிப் பாதிப்பு மின்சாரக் கட்டண உயர்வாக நுகர்வோர் மீதே சுமத்தப்படும். தன்னார்வ ஓய்வுத் திட்டத்தின்  கீழ் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் விலகியுள்ள நிலையில், எஞ்சியுள்ள ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தும் ‘கூட்டு ஒப்பந்தம்’  தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருகிறது.  இது அரசாங்கத்தை முடக்குவதற்கான  முயற்சி அல்ல, மாறாக ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும். 

Continue Reading

ஏப்ரல் மாதத்தில்  மின்விநியோகத்தில்  பாதிப்பு ஏற்படாது; வலுசக்தி அமைச்சு

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில்  மின்விநியோகத்தில்  பாதிப்பு ஏற்படக்கூடும் என வெளியாகியுள்ள செய்தியை வலுசக்தி அமைச்சு முற்றாக மறுத்துள்ளது. நுரைச்சோலை  அனல்மின் உற்பத்தி நிலையத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட 36 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்கள் ஏற்கனவே தரையிறக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வலுவக்தி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நிலக்கரி விநியோகத்தில் ஏறபட்டுள்ள சிக்கல் நிலைமையால் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மின்விநியோகத்தில் பாதிப்பு …

Continue Reading

இலங்கையின் மனிதாபிமான உதவிக்கு ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு

ஈரானிய கப்பல் விவகாரத்தில் பல்தரப்பு உறவுகளுக்கான அதன் அர்ப்பணிப்பு, நடுநிலைமை மற்றும் அமைதிக்கான கடப்பாடு என்பவற்றுக்கு மதிப்பளித்து, ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச பிரகடனங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் மனிதாபிமான உதவி குறித்த நிலைப்பாட்டை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலில் கடந்த மாதம் 28 ஆம் திகதி ஈரானிய அதியுச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் மோதல்களின் நீட்சியாக, இந்தியக் கடற்படையால் கடந்த பெப்ரவரி 15 …

Continue Reading

இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் வாழும் எமது சகோதரிகளுக்கும் சிறுமிகளுக்கும், இந்த சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் வாழும் எமது சகோதரிகளுக்கும் சிறுமிகளுக்கும், இந்த சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய நாடுகள் சபையினால் இம்முறை சர்வதேச மகளிர் தினத்திற்கான உலகளாவிய கருப்பொருளாக, “Rights. Justice. Action. For ALL Women and Girls ” (அனைத்துப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் உரிமையும் நீதியும் கிடைப்பதற்கான செயற்பாடு) எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைச் சமூகத்தினதும் பொருளாதாரத்தினதும் உண்மையான உயிர்நாடியாக எமது பெண்களே விளங்குகின்றனர். குடும்பத்திலும் சமூகத்திலும் அவர்கள் ஆற்றும் பணி, இன்று ஒரு நாட்டின் …

Continue Reading

சர்வதேச மகளிர் தினச் செய்தி: சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

உலகெங்கிலும் உள்ள பெண்களைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக: உரிமைகள். நீதி. செயல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்ற இவ்வேளையில், நம் நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான பெண்களை ஒரு புதிய கோணத்தில் பார்ப்பதற்கான முயற்சியை நாம் மேற்கொள்வது அவசியமாகும். கடந்த காலங்களில், தகைமையும் ஆளுமையும் பெரும்பாலும் பால்நிலைசார் பங்குபாத்திரங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் ஒரு சமூகமாக நாம் இருந்தோம். எவ்வாறாயினும், வாய்ப்புகள் உருவாகும்போது பெண்ணாக இருப்பது ஒரு …

Continue Reading

ஈரானிய கப்பலுக்கு உதவும் தீர்மானத்துக்கு சர்வதேச மட்டத்தில் பெரும் வரவேற்பு

பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்த ஈரானிய கப்பலுக்கு உதவுவதற்கு இலங்கை மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் பாராட்டையும், வரவேற்பையும் வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள், இத்தீர்மானத்தின் ஊடாக இந்து சமுத்திரத்தின் உண்மையான காவலனாக இலங்கை மாறியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலில் கடந்த மாதம் 28 ஆம் திகதி ஈரானிய அதியுச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் மோதல்களின் நீட்சியாக, இந்தியக் கடற்படையால் கடந்த பெப்ரவரி 15 – 25 ஆம் திகதி …

Continue Reading

பிராந்திய நிலைவரங்கள் குறித்து இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் தற்போதைய பிராந்திய நிலைவரங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர். புதுடில்லியில் நடைபெற்ற ‘ரைசினா உரையாடல் – 2026’ (ரைசினா டயலொக்) இல் பங்கேற்பதற்காக இந்தியா சென்றிருக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளடங்கலாக ஏனைய நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடாத்திவருகிறார். அதற்கமைய இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நேற்று முன்தினம் (6) இடம்பெற்ற சிநேகபூர்வ …

Continue Reading