வடக்கில் நிலவும் வறுமை, சமூகப்-பொருளாதார சவால்கள்; அமைச்சர் சந்திரசேகர் நோர்வே பிரதிநிதிகளுக்கு விளக்கம்
-
Editor
-
March 7, 2026
-
சமகாலம்
-
அரசியல்
-
0 Comments
வட மாகாண அபிவிருத்திப் பணிகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவது தொடர்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நோர்வே நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் மோட்ஸ்ஃபெல்ட் கிராவிக் (Hon. Andreas Motzfeldt Kravik) ஆகியோருக்கிடையில் விசேட இருதரப்பு கலந்துரையாடல் 04-03-2026 அன்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 15 வருடங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் மக்கள் …
Continue Reading
வடக்கில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களை பலப்படுத்த900.49 மில்லியன்ரூபா ஒதுக்கீடு
-
Editor
-
March 7, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
வடக்கு மாகாணத்தில் அண்மை காலங்களில் 14,235 மாடுகள் மற்றும் எருமைகள் உயிரிழந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்காக 900.49 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமென கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 05-03-2026அன்று நடைபெற்ற அமர்வில் 27/ 2இன் கீழ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களால் வடக்கு மாகாணத்தில் 14, …
Continue Reading
மீனவர்கள்கடல்எல்லையைதாண்டி செல்லவேண்டாம்; அமைச்சர் சந்திரசேகர் அறிவுரை
-
Editor
-
March 7, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கையின் கடல் எல்லை மற்றும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எமது மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.இந்த பிரச்சினைகள் முடியும் வரையில் எமது கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களிடம் கேட்டுக்கொள்கிறோன கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவுறுத்தினார். பாராளுமன்றத்தில் 05-03-2026அன்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கையின் கடல் எல்லை மற்றும் …
Continue Reading
இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கிலான மூன்றாவது கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக நிறைவு
இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் கருத்துக்களை அறிந்துகொள்ளும் கலந்துரையாடல் நிகழ்வின் மூன்றாவது அமர்வு அண்மையில் (பெப். 27) மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் குறித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் …
Continue Reading
‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி கூடியது
இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்குங்கள் – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய “Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர், நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் நிரந்தரமாக நிவாரணங்களை வழங்குதல், அத்தியாவசிய உட்கட்டமைப்பு …
Continue Reading
மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தி ஈராணிய மாலுமிகள் தொடர்பிலான அரசின் முடிவுக்கு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பாராட்டுக்கள்
இலங்கையை அண்மித்த கடலில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலில் காயமடைந்தவர்களை காப்பாற்றி, சிகிச்சை வழங்குவதற்கும், ஈரானுக்கு சொந்தமான மற்றுமொரு கப்பலில் இருந்த மாலுமிகள் உள்ளிட்ட அனைவரையும் இலங்கைக்கு அழைத்து தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கையை பெரிதும் பாராட்டும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம், இது தொடர்பில் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு பாராட்டை தெரிவிக்கிறது. ஒரு நாடாக மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்திய நாகரீகமான இராஜதந்திர நடவடிக்கையை நாம் வெளிப்படுத்தியுள்ளோம். அதேபோன்று சர்வதேச ரீதியாக ஏற்படும் எந்த ஒரு மோதலுக்கும் இலங்கை …
Continue Reading
தேசியஏற்றுமதிவழிவரைபடம்தனியார்துறையிடம்கையளிப்பு
இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் தேசிய ஏற்றுமதி வழி வரைபடம் தலைமை நிர்வாக அதிகாரிகளின் மாநாடு 04-03-2026 அன்று ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், நாட்டின் முன்னணி தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது, 2025ஆம் ஆண்டின் ஏற்றுமதி முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த காலப்பகுதிக்கான மூலோபாய இலக்குகள் குறித்து பொதுவான இணக்கப்பாடும் எட்டப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி உரையாற்றுகையில், உள்நாட்டுத் தொழில்துறைகளை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் முக்கிய முதலீட்டாளர் என்ற ரீதியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. குறிப்பாக, தொழில்பேட்டைகளை நவீனமயமாக்கல், எரிசக்தி விநியோகத்தை சீர்செய்தல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதன் மூலம் தொழில்முனைவோருக்குச் சாதகமான வணிகச் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மைப் பணியாகும். அரசு மற்றும் தனியார் துறைகளின் கூட்டுப் பங்களிப்பின் ஊடாக மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இந்த இலக்கை நோக்கி இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார். இந்நிகழ்வில் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading
முன்மொழிவுகளை கருத்திற்கொள்ளுங்கள்; சர்வதேச மன்னிப்புச்சபை
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்திற்கொள்ளுமாறும், புதிய வரைவு இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு ஏற்றவாறு அமைவதை உறுதிப்படுத்துமாறும் சர்வதேச மன்னிப்புச்சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் காலப்பகுதி கடந்த சனிககிழமையுடன் (28) …
Continue Reading
யுத்தத்தைஒருபோதும்அங்கீகரிக்கமுடியாது; அரசாங்கம்
யார் போரைத் தொடங்கினாலும் அதன் இறுதிப் பலி அப்பாவி மக்களே. மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள யுத்த நிலைமை உலகப் பொருளாதாரத்தையும் பிராந்திய ஸ்திரத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ள அரசாங்கம், குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்துடன் நேரடியாகப் பிணைந்துள்ள இப்பிராந்தியத்தின் அமைதிக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ப்பதற்றம் குறித்த விசேட ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து …
Continue Reading
சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்ப புதிய சட்டம் அமையவேண்டியது கட்டாயம்; ஐரோப்பிய ஒன்றியம்
பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் என்பதுடன், இவ்விடயத்தில் ஐ.நா விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகள் விசேடமாகக் கவனத்திற்கொள்ளப்படவேண்டு மென ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஜெனிவாவில் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் …
Continue Reading