ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்இலங்கை குறித்து இணையனுசரணை நாடுகள் விசனம்
நிலைமாறுகால நீதி, இனவாதத்தை முடிவுக்குக்கொண்டுவரல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி முக்கிய வாக்குறுதிகளை வழங்கியிருப்பினும், இவ்விடயங்களில் எட்டப்பட்டிருக்கும் ஆக்கபூர்வமான பெறுபேறுகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதாக பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடரில் சுட்டிக்காட்டியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித …
Continue Reading
நிகழ்நிலை பாதுகாப்பும் மனித உரிமைகளும் சமாந்தரமாக முன்னோக்கி பயணிக்க வேண்டும்; கனடா வலியுறுத்து
-
Editor
-
February 27, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
நிகழ்நிலை பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் ஆகிய இரண்டும் சமாந்தரமாக முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் என குறிப்பிட்ட கனடிய உயர்ஸ்தானிகரகத்தின் இரண்டாம்நிலை செயலாளர் பற்ரிக் பிக்கரிங்,இலங்கையில் பாதுகாப்பான டிஜிட்டல் இடைவெளி மற்றும் ஜனநாயக கோட்பாடுகளை மேம்படுத்துவதற்கான முழுமையான ஒத்துiழைப்பை வழங்குவதற்கு கனடா தயாராகவிருப்பதாக உறுதியளித்தார். கனேடிய உயர்ஸ்தானிகரகத்தில் நிதிப்பங்களிப்பின் கீழ் பெக்ட்ரம் அமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள ‘ இணைய வெளியீடுகளுக்கு பாதகம் விளைவிக்கும் சட்டங்களால் ஏற்படும் தீங்கான தாக்கங்கரள குறைப்பதற்கான கொள்கை பரிந்துரை அறிக்கை’யின் வெளியீட்டு நிகழ்வு 25-02-2026 அன்று கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா …
Continue Reading
அவசரகாலசட்டஒழுங்குவிதிகளுக்குஎதிரான அடிப்படைஉரிமைமனுக்கள்உயர்நீதிமன்றமத்தால்நிராகரிப்பு
-
Editor
-
February 27, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
‘தித்வா சூறாவளி அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்றம் 26-02-2026 அன்று உத்தரவிட்டது. நீண்ட நேரக் கருத்தாய்வுகளுக்குப் பின்னர், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளை சவாலுக்கு உட்படுத்தி, சட்டத்தரணி ஆதம் லெப்பை ஆசாத் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே திருத்தத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த ஒழுங்குவிதிகள் வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும், இந்த விதிகளின் கீழ் பொலிஸாரினால் எவ்வித கைதுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க விதித்த அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் சட்டவிரோதமானவை என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்ட அதே சட்டவிரோத அம்சங்களே தற்போதைய ஒழுங்கு விதிகளிலும் உள்வாங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்ட பிரதம நீதியரசர், இந்த ஒழுங்குவிதிகள் அனர்த்த காலத்திலேயே விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன என வினவினார். அதற்குப் பதிலளித்த சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, இந்த ஒழுங்குவிதிகள் மூலம் தனிநபர்களைக் கைது செய்வதற்கு பாதுகாப்புப் படையினருக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கும் மட்டுப்படுத்தப்படாத அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தான நிலைமையாகும் எனக் குறிப்பிட்டார். மற்றொரு மனுதாரரான சட்டத்தரணி ஆதம் லெப்பை சார்பில் முன்னிலையான சட்டத்தரணி திஷ்ய வேரகொட, இந்த விதிகளின் கீழ் எவரும் கைது செய்யப்படவில்லை என சட்டமா அதிபர் கூறுகிறார். ஆனால், ‘அனித்தா’ பத்திரிகை இச்சட்டத்தின் கீழ் 57 சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்துவதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துமாறு பிரதி அமைச்சர் ஊடகங்கள் வாயிலாகக் கோரியுள்ளார். இது பாரிய அச்சுறுத்தலாகும் என்றார். இதன்போது மன்றில் மீண்டும் விளக்கமளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, தித்வா சூறாவளியினால் நாட்டுக்கு 13.3 டிரில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் எனத் தெரியாத இக்கட்டான நிலையிலேயே ஜனாதிபதி இதனைப் பிறப்பித்தார். இதில் அடிப்படை உரிமை மீறல்கள் ஏதும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். அதற்கமைய மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் அமர்வு, இந்த மனுக்களின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை மேலோட்டமாக கூட உறுதிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டு, மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்வதாக நேற்றைய தினம் அறிவித்தது.
Continue Reading
கருத்துச்சுதந்திரம் பற்றிய நாமலின் கருத்து; சர்வதேச மன்னிப்புச்சபை விமர்சனம்
-
Editor
-
February 26, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் ஆற்றவிருந்த உரைகள் இரத்துச்செய்யப்பட்டமையை கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீதான முடக்கம் என்ற ரீதியில் வர்ணித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கருத்தை விமர்சித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன, ராஜபக்ஷாக்களினால் கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் என எவரும் இல்லாதிருந்தால் இந்த வாதம் செல்லுபடியாகியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய புகழ்பெற்ற இரு பல்கலைக்கழகங்களின் மாணவ சங்கங்களில் உரையாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவ்வழைப்பு தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சிவில் …
Continue Reading
விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்; பேராயர் இல்லம்
-
Editor
-
February 26, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளை இதனுடன் தொடர்புபடுத்தி சமூகத்தை தவறாக வழிநடத்த சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். விசாரணைகளைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகவே அமையும் என கொழும்பு பேராயர் இல்ல ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் 26-02-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், …
Continue Reading
இலங்கை – ஜப்பான் இடையிலான உறவு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது அமைச்சர் நளிந்த
-
Editor
-
February 26, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு, கலாசாரம், கல்வி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த ஒத்துழைப்பு நிலவி வருகிறது. அதற்கமைய அண்மையில் ஜனாதிபதி மேற்கொண்ட ஜப்பான் விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதோடு, ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஜப்பான் பேரரசர் நருஹித்தோவின் 66 ஆவது பிறந்த தினம் மற்றும் ஜப்பானின் தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற விசேட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக ஜப்பான் பேரரசருக்கு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர், அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற பிரதமர் சானே தகா இச்சி மற்றும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த நிகழ்வின் ஊடாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையும் ஜப்பானும் பொதுவான விழுமியங்கள் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் நீண்டகால நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன. இரு நாடுகளிலும் தற்போது நிலவும் பலமான அரசியல் தலைமைத்துவம், ஆக்கபூர்வமான அரசியல் கலாசாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலையான அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஜப்பான் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை நாம் பெரிதும் மதிக்கிறோம். குறிப்பாக, அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது ஜப்பான் அனுப்பிய அவசர மருத்துவக் குழுக்களின் சேவையும், வழங்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் ஜப்பானின் தாராள மனப்பான்மைக்கும் தளராத நட்பிற்கும் சான்றாகும். அண்மையில் ஜனாதிபதி மேற்கொண்ட ஜப்பான் விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதோடு, ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. 1972 ஆம் ஆண்டு ‘நொரிடேக்’ கூட்டாண்மையுடன் ஆரம்பமான ஜப்பானிய முதலீடுகள், இன்று 70 க்கும் மேற்பட்ட பாரிய முதலீட்டுத் திட்டங்களாக விரிவடைந்துள்ளன. இலங்கைக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை வழங்கும் நாடுகளில் ஜப்பான் முதன்மை வகிக்கிறது. பாதுகாப்பு மற்றும் கல்வித் துறைகளிலும் இந்த உறவு பலமாக உள்ளது என்றார். இதேவேளை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா மற்றும் தூதரக அதிகாரிகள் இரு நாட்டு உறவுகளைப் புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்ல காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது எனவும் இந்நிகழ்வின் போது தெரிவித்தார்.
Continue Reading
போர்த்துக்கல் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வருகை
-
Editor
-
February 25, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
போர்த்துக்கல் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பவுலோ ரேஞ்சல், சிரேஷ்ட அதிகாரிகள் நால்வரை கொண்ட தூதுக்குழுவுடன் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்தார். அமைச்சர், துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவையின் விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அமைச்சர் மற்றும் அவருடன் வந்திருந்த பிரதிநிதிகள் குழுவை வரவேற்கும் நிகழ்வு, கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட அதிதிகள் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு உள்ளிட்ட இலங்கை …
Continue Reading
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்
-
Editor
-
February 20, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் (17) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நாட்டின் இளைஞர்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் கொள்கை மற்றும் எண்ணக்கரு ரீதியான விடயங்களை ஒன்றியத்தின் ஊடாக விருத்தி செய்து அவற்றை அரச துறையிலுள்ள பொறிமுறைகள் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் ஒன்றியத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டியதன் தேவையை ஒன்றியத்தின் தலைவர் …
Continue Reading
மீளாய்வின் பின்னரே கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; அமைச்சர் லால்காந்த உறுதி
-
Editor
-
February 19, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
கிவுல் ஓயாத்திட்டம் மீளாய்வு செய்தபின்னரே நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதோடு தமிழர் தரப்பு கரிசனைகளை எழுத்துமூலமாக சமர்ப்பிக்குமாறும் கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் 17-02-2026 அன்று கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, வடக்கு மாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரின் பங்கேற்புடன் கிவுல் ஓயா நீர்ப்பாசன குடியேற்றத் திட்டம் தொடர்பான விசேட …
Continue Reading
ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்
-
Editor
-
February 18, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், சர்வதேச சட்டத்துக்கு முழுவதும் ஏற்புடைய விதத்திலும் அமையவில்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் எழுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கூட்டாகத் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளை இப்புதிய வரைவு எவ்வாறு சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என்பது பற்றியும், இவ்வரைவு குறித்த பொதுக்கலந்துரையாடல் செயன்முறை சகலரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் அமைவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள …
Continue Reading