ஈரான்- இலங்கை நீண்டகால நட்புறவை  வலுப்படுத்துவதற்குத் நடவடிக்கை; அமைச்சர் வைத்தியர் நளிந்த

ஈரான் மற்றும் இலங்கைக்கிடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவை எதிர்வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள் முன்னெடுக்கப்படுமென சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  ஈரானின் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஈரானின் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வு சமீபத்தில் கொழும்பு ஐ.டி.சி ரத்னதீபா ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில்,  ஈரானின் தேசிய தினம் கொண்டாடப்படும் இந்நாளில், ஈரான் அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காக …

Continue Reading

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குங்கள்; முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் இலங்கைத் தமிழர்களை சட்டவிரோத குடியேறிகளாக கருதக்கூடாது. இதை மத்திய அரசு உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் பிரதமர் மோடிக்கு  எழுதியுள்ளார். இதுதொடர்பாக கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது, கடந்த 1983ஆம் ஆண்டு முதல், இலங்கையில் ஏற்பட்ட இனமோதல்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த மண்ணில் இருந்து வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு தங்குமிடம், வாழ்வாதார உதவி, கல்வி, மருத்துவ வசதிகளை தமிழகம் தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழகத்தில் தற்போது 89ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் …

Continue Reading

பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவைவழங்கும்; அநுரகுமாரவிடத்தில் பிரித்தானியதுணைப்பிரதமர்தெரிவிப்பு

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் பணிகள், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான வேலைத்திட்டத்திற்கு  ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்றும் துணைப் பிரதமர் டேவிட் லம்மி  உறுதியளித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் (David Lammy)  இடையிலான சந்திப்பு 17-02-2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளிக்குப் பின்னர் நாடு மீண்டெழுந்து வரும் வேளையில், இலங்கைக்கு …

Continue Reading

மண்சரிவுக்குஉள்ளானஉடபலாத்தபகுதிக்கு கிறிஸ்டலினாஜோர்ஜிவாகண்காணிப்புவிஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின்  முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தித்வா சூறாவளி காரணமாக மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு  17-02-2026 அன்று  கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான மாவதுர பிரதேசத்தில், ஏராளமான வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகி 28 பேர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய ஜோர்ஜிவா, அவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்தார். அனர்த்தத்தின் போது, அரசாங்கம் மேற்கொண்ட விரைவான  நடவடிக்கைகளையும், மக்கள் …

Continue Reading

வட, கிழக்கில்வீடமைப்பிற்கானநிதியுதவி 20 இலட்சமாகஅதிகரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த நிலைமைகளால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த திட்டத்துக்காக வழங்கப்பட்ட 15 இலட்சம் ரூபா நிதி உதவியை, 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 17-02-2026 அன்று  இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய அமைச்சர், வடக்கு, கிழக்கில் …

Continue Reading

நாட்டை வந்தடைந்தார் நாணய  நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 16-02-2026 அன்று  நாட்டை வந்தடைந்த சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுடன் பரந்துபட்ட சந்திப்புக்களை நடாத்தவுள்ளார். 2022 ஆம் ஆண்டு தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியின் பின்னரான மீட்சி மற்றும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியை அடுத்து உருவாகியிருக்கும் சவால்கள் என இலங்கை மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் பின்னணியிலேயே நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, …

Continue Reading

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க , இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான பிரபாத் சந்திரகீர்த்தி , அரச சேவையில் 26 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவையில் 2000 பெப்ரவரி 15 ஆம் திகதி இணைந்த அவர், 2010 இல் நிர்வாக சேவையின் தரம் I இற்கு தரம் உயர்த்தப்பட்டார். 2019 இல் …

Continue Reading

அரசாங்கத்தின் மீதான நேர்மறை எண்ணம் அங்கீகாரத்துடன் அதிகரிப்பு ; வெரிட்டே ரிசர்ச் ஆய்வில் தகவல்

வெரிட்டே ரிசர்ச் அமைப்பின் சமீபத்திய கலப் முறையிலான ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பில், 2026 பெப்ரவரி தொடக்கத்தில் அரசாங்கத்தின் மீதான அங்கீகார விகிதம் 65 சதவீதமாக பதிவாகியுள்ளது.  குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ±3 சதவீத புள்ளி பிழை வரம்புடன், இந்த அங்கீகார விகிதம் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த 62 சதவீதத்திலிருந்து புள்ளிவிவர ரீதியாக நிலையானதாக உள்ளது. இதன் கள ஆய்வு பங்காளராக வன்கார்ட் சர்வே நிறுவனம் செயற்பட்டது.  அரசாங்கத்தின் மீதான அதிருப்தி விகிதம் குறைவாக உள்ளதுடன், 2025 பெப்ரவரியில் இருந்த முன்னைய கருத்துக்கணிப்பில் …

Continue Reading

சட்டத்தரணிகள்இன்றுபணிப்புறக்கணிப்பு; இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் 

நாட்டில் தற்போது காணப்படும் படுகொலை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கிறோம். சகல சட்டத்தரணிகள் சமூகத்தினரும் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். உறுதிப்படுத்தாத விடயங்களை உண்மை என்று பொலிஸார் குறிப்பிடுவதை மறுப்பதுடன், கடும் அதிருப்தியையும் வெளியிடுகிறோமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். தலங்கம அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் …

Continue Reading

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியாது;  தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணைவு

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு, அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து உண்மையான பாதுகாப்பை ஒருபோதும் உறுதிசெய்யமுடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய …

Continue Reading