கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு மூன்றாவது தடவையாகக் கூடியது

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில்  2026.02.11ஆம் திகதி மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது.  இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட உள்ளிட்ட சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவிற்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் ஆதாரங்கள் பெறப்பட்டன. துறைமுகங்கள் மற்றும் …

Continue Reading

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம்

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (பெப். 06) பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.  அதற்கமைய, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஹொரண மஹவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசுக்கான  இலங்கை உயர் ஸ்தானிகராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட வர்ணகுலசூரிய பீட்டர் ரொஹான் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக பெயர்குறித்து நியமிக்கப்பட்ட அனுர விதானகே …

Continue Reading

ஊழல்உணர்வுகுறியீட்டுஅறிக்கையில் 14 இடங்கள்இலங்கைமுன்னேற்றம்

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஊழல் உணர்வு குறியீட்டு அறிக்கையில், இலங்கை 14 இடங்கள் முன்னோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டில் 121 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, 2025 ஆம் ஆண்டில் 107 ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கை பெற்றுள்ள புள்ளிகளில் 3 புள்ளிகள் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. உலகின் 181 நாடுகள் மற்றும் ஆட்சி பிரதேசங்கள் அடங்கிய இந்த தர வரிசையில், 0 முதல் 100 வரை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. …

Continue Reading

அரசவைத்தியஅதிகாரிகள்சங்கத்தின் பிரச்சினைக்குதீர்வுகாணமுடியாது;பிரதிஅமைச்சர்ஹன்சகவிஜயமுனி

அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. ஏனெனில் அது அரசியல் பிரச்சினையாகும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார். சுகாதார அமைச்சில்  12-02-2026 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், அரச வைத்தியர்களின் பிரச்சினையை எங்களுக்கு தீர்க்க முடியும் ஆனால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினையை எங்களால் தீர்க்க முடியாது. ஏனெனில் அது அரசியல் பிரச்சினையாகும். அரச வைத்திய   அதிகாரிகள் சங்கம் அரசில் அமைப்பொன்றை போன்றே செயற்பட்டு வருகிறது. …

Continue Reading

இலங்கைகோரினால் ஆதரவுவழங்கதயார்; அவுஸ்திரேலியஉயர்ஸ்தானிகர்மத்தேவ்டக்வெர்த்

இலங்கையின் நல்லிணக்கப் பயணத்துக்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை வழங்கும்.   இது குறித்து அரசாங்கம் அளித்துள்ள சில அறிக்கைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன. இலங்கை அரசாங்கத்துக்கு பயனுள்ள வகையில் எந்த வகையிலும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால்  இது இலங்கையர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு செயல்பாடாக அமைய வேண்டும். வெளிநாடு இதனை ஆரம்பித்து வைக்க முடியாது. ஆனால் கோரிக்கை விடுத்தால் எம்மால் ஆதரவு வழங்க முடியும் என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தேவ் டக்வெர்த் தெரிவித்தார்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை …

Continue Reading

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்கு மீண்டும் விண்ணப்பிப்போம்;ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் உறுதி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுவருவதை நினைவுகூர்ந்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் நன்றியை வெளிப்படுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அச்சலுகை வழங்கல் காலம் நிறைவடையவுள்ள நிலையில், அதனை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.   இன்றைய தினம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி தலைமையிலான …

Continue Reading

தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளிடம் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி எழுப்பிய முக்கிய கேள்வி  

கடந்த காலங்களில் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அச்சட்டம் பதிலீடு செய்யப்படல் என்பவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த தேசிய மக்கள் சக்தியினர், இப்போது ஏன் அதற்கு நேரெதிராக மாறிவிட்டார்களென ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியிடனால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, முன்னர் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் இப்போது ஆளுந்தரப்பில் இருப்பது ஒன்றே வித்தியாசமென தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் பதிலளித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கும் அதன் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான …

Continue Reading

ஐரோப்பியஒன்றியத்தின்பிரதிநிதிகளிடம்நீதிஅமைச்சர்அளித்துள்ளஉறுதி

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமாக முன்வைக்கப்படும் ஆலோசனைகளை சாதகமாக ஆராய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக  நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று 11-02-2026 அன்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த சட்டமூலத்துக்காக  பொது …

Continue Reading

ஹர்ஷன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கடிதம்

ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே, குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குரிய  தகவல்களை சபாநாயகருக்கு அறிக்கையிடுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடாகும்.சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் இந்த செயற்பாடு குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சபாநாயகருக்கு எதிரான முறைப்பாட்டு தகவல்களை எக்காரணிகளுக்காகவும் வெளியாட்களுக்கோ அல்லது பிறிதொரு தரப்பினருக்கோ வழங்க வேண்டாம் என்று அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவுறுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா …

Continue Reading

பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்திற்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம்

பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்திற்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக அவர்களின் தலைமையில் அண்மையில்(11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது. பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது. உத்தேச சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், சட்டமூலத்தின் 3 …

Continue Reading