பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் கலந்துரையாடல்
-
Editor
-
February 12, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் கலந்துரையாடல் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தலைமையில் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி செயலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தற்போதைய பௌதிக ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், இதன்போது …
Continue Reading
தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக 5 பில்லியன் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது; பாதுகாப்பு அமைச்சு
-
Editor
-
February 12, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு வகையிலும் வழங்கப்படும் கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கமைய நிவாரணங்கள் வழங்குவதற்காக 25 மாவட்டங்களுக்கும் 4.5 பில்லியன் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவம்) கே.டி. தர்மதிலக தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 12-02-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தித்வா புயலால் 22 மாவட்டங்களில் 703 922 குடும்பங்களைச் சேர்ந்த 24 இலட்சத்து 87 114 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 676 உயிரிழப்புக்கள் …
Continue Reading
தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் வெற்றிடத்துக்கு பெயர் குறித்த நியமனங்கள் கோரப்படுகின்றன
-
Editor
-
February 10, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 12(1)(இ) ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் ஒருவரின் வெற்றிடத்திற்கு நியமனம் செய்வதற்கு கௌரவ ஜனாதிபதிக்கு விதப்புரையை மேற்கொள்வதற்கு சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து பெயர் குறித்த நியமனங்களை அரசியலமைப்புப் பேரவை கோருகின்றது. தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 12(1)(அ)(i) கீழ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சட்டம், ஆளுகை, பொது நிர்வாகம், சமூக சேவைகள், ஊடகத் துறை, அறிவியல் மற்றும் தொழினுட்பவியல் அல்லது முகாமைத்துவம் ஆகிய துறைகளில் அறிவு, அனுபவம் மற்றும் திறமையைப் …
Continue Reading
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது
-
Editor
-
February 10, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
கல்விப் புலமைப்பரிசில்களை விரிவுபடுத்தவும், சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கவும் நடவடிக்கை. ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இந்த நிர்வாக சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 07 உறுப்பினர்களை உள்ளடக்கியது. இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: • மருத்துவ உதவித் தொகை அதிகரிப்பு: சபையின் பரிந்துரைகளுக்கு …
Continue Reading
நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை
-
Editor
-
February 10, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் ஜனாதிபதி பணிக்குழுவின் திட்டங்களுக்கு அமைவாக, நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார். அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான விசேட கலந்துரையாடல் 06-02-2026 அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இதில் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் …
Continue Reading
தித்வாபுயலால் 103 சிறுவர்கள்பெற்றோரைஇழந்துள்ளனர்; அமைச்சர் சாவித்திரிபோல்ராஜ்
-
Editor
-
February 10, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
நாட்டை தாக்கிய தித்வா புயல் காரணமாக தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 06-02-2026 அன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இந்த தகவல்களைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிப்பதற்கும் அவர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும். பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பொறுப்பேற்கப் பலர் முன்வந்துள்ளதுடன், …
Continue Reading
அடுத்த மூன்றாண்டுகளுக்குள் தரம் 9வரை கல்விச் சீர்திருத்தம்; அமைச்சர் நளிந்த
-
Editor
-
February 9, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் நேற்றையதினம் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் …
Continue Reading
கணக்காய்வாளர் நாயக்கத்தின் நியமனம் பொது இணக்கப்பாட்டுடன் இடம்பெறுவது சிறப்பு
-
Editor
-
February 9, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்கான நியமனம் தொடர்பில் நீண்ட காலமாக நிலவிய கருத்து வேறுபாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து சட்டவாக்க சபை ஒருமனதாக முன்னெடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் சிவில் சமூக அமைப்பாக எமது மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம். கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம் 8 மாதங்களாக வெற்றிடமாக காணப்பட்டது உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக நாட்டுக்கு தீங்காக அமைந்தது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டவாக்க சபைக்கு இப்பணி சவாலுடன் கூடிய விடயம் என்பது தெளிவாகிறது. அந்த சவாலில் வெற்றி பெற்று நாட்டின் நலனுக்கு வழிவகுக்கும் வகையில் …
Continue Reading
இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஆரம்ப வட்டமேசை கலந்துரையாடல்
-
Editor
-
February 8, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கம், கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் ”Factum’ அறிவுசார் பங்காளர் அமைப்புடன் இணைந்து, கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. இந்தக் கலந்துரையாடல் ‘எதிர்காலத்திற்குத் தயாரான இந்திய – இலங்கை கூட்டாண்மை : பகிரப்பட்ட நாளைக்கான ஒரு கலந்துரையாடல்’ எனும் கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. இந்த நிகழ்வு, இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவரும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இந்திய துணை தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் …
Continue Reading
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் சட்டத்தின் ஆட்சியைபிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகும்; பிரதமர்
-
Editor
-
February 8, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் மற்றும் தீர்மானங்கள், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மிகத்தெளிவாகப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகும். பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க சூழலானது, நீதித்துறையின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீன அரசாங்கத்தின் நிதியுதவியின்கீழ் நவீனமயமாக்கப்பட்ட உச்சநீதிமன்ற வளாகத்தை நீதித்துறை நடவடிக்கைகளுக்காகத் திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இந்த மறுசீரமைப்புத் திட்டமானது சீன அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சு, இலங்கையின் நீதி அமைச்சு மற்றும் சீன …
Continue Reading