யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள  அபிவிருத்தி  திட்டங்களை அடையாளம் காண்பதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள  அபிவிருத்தி  திட்டங்களளை அடையாளம் காண்பதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் அவர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று (06.02.2026) மு. ப 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள்,  அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைய, 2027 மற்றும் 2028 ஆண்டுகளில் காலத்திற்கு பொருத்தமான  திட்டங்களை நடைமுறைப்படுத்த  அடையாளம் காண வேண்டும் …

Continue Reading

முத்துராஜவெலவில்கைவைப்பதற்கு பாராளுமன்றுக்கும்அதிகாரமில்லை; பேராயர்மெல்கம்கர்தினால்ரஞ்சித்ஆண்டகை

முத்துராஜவெல சதுப்பு நிலப் பகுதியைப் பாதுகாப்பதற்காக ‘முத்துராஜவெல அபிவிருத்தி அதிகாரசபை’ நிறுவுமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களின் தன்னிச்சையான தீர்மானங்களால் குறித்த பகுதியில் சட்ட விரோத கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான சட்ட விரோத கட்டுமானங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் கைவைக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கோ நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கோ கிடையாதென பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் முத்துராஜவெல சதுப்பு நிலத்தைப் பாதுகாத்தல் தொடர்பில் 05-02-2026 அன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே …

Continue Reading

நிகழ்நிலைப்பாதுகாப்புச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும்; இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சுக்குப் பரிந்துரை

2024 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நிகழ்நிலைக்காப்புச்சட்டமானது முற்றாக நீக்கப்பட்டு, முறையான சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்யப்படும் வரை, அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதாக அறிவிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சுக்குப் பரிந்துரைத்துள்ளது. அதேபோன்று அவதூறு என்பது குற்றவியல் குற்றம் அல்ல என நினைவுறுத்தியும், ஆகையினால் வெறுமனே அவதூறு பேச்சுடன் மாத்திரம் தொடர்புடைய முறைப்பாடுகளைப் பதிவுசெய்தல் மற்றும் விசாரணை செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பரிந்துரைத்துள்ளது.   கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் நிகழ்நிலைப் …

Continue Reading

சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநயாகரிடம் கோரிக்கை

சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநயாகரிடம் நேற்று (பெப். 05) கோரிக்கை விடுத்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றமாக பத்தாவது பாராளுமன்றம் திகழ்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் கொண்ட ஒரு நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக, அவர்கள் பாராளுமன்ற சபைக்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் …

Continue Reading

‘எதிர்காலத்திற்குத் தயாரான இந்து-லங்கா பங்குடைமை’ பற்றிய கலந்துரையாடல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எதிர்காலத்திற்குத் தயாரான இந்து-லங்கா பங்குடமை: பகிரப்பட்ட நாளைய தினத்திற்கான கலந்துரையாடல்’ எனும் தலைப்பிலான உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (பெப். 05) இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள் மற்றும் இரு நாடுகளையும் சேர்ந்த கொள்கைசார் நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் குறிப்பாக வலுசக்தி பங்குடைமை மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட ஆழமான மற்றும் வளர்ந்து வரும் பங்குடைமை குறித்து கவனம் …

Continue Reading

இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகம் மறுப்பு

இந்திய பிரஜைகளால் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸதானிகரகம் தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை மீனவர்கள் கடலில் தாக்கப்பட்டதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. எமது தரப்பில், இந்திய கடற்படையினராலோ அல்லது இந்திய கரையோரக் காவல் படையினராலோ அவ்வாறான எந்தவிதமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை நாம் மிகவும் உறுதியாகக் கூறுகின்றோம். மீனவர்களின் வாழ்வாதார ரீதியான விடயங்கள் தொடர்பாக மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் …

Continue Reading

41பாலியல்நிலையங்களில்10, 166 பேருக்குசிகிக்சை; அமைச்சர்நளிந்த

பாலியல் மற்றும் எய்ட்ஸ்  நோய்களுக்காக  நாடளாவிய  ரீதியில் அமைக்கப்பட்டுள்ள  41  நிலையங்களில் பல்வேறு வகையான பாலியல் நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள 10166 பேர் சிகிக்சைப் பெறுகிறார்கள். பாலியல் நோய்களுக்கான மருந்து  போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  05-02-2026 அன்று நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய  மக்கள் சக்தியின்   கொழும்பு   மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம். மரிக்கார்  முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, …

Continue Reading

அநுரவின் ஆட்சியிலும் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சமத்துவமின்மைக்குத் தீர்வுகாண்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் …

Continue Reading

புதிய கணக்காய்வாளர் நாயகமாக திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்ன நியமனம்

நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளராகப் பணியாற்றிய திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை இந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு பெப்ரவரி 03 ஆம் திகதி கூடிய அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது. இந்நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண், திருமதி ஜயரத்ன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கணக்காய்வாளர் …

Continue Reading

புதிய கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமுதிகா ஜயரத்ன அவர்கள் சபாநாயகர் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார்

புதிய கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமுதிகா ஜயரத்ன அவர்கள் இன்று (பெப். 05) பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் இகரசியம் கேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார்.  2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9வது பிரிவுக்கு அமைய தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் தலைமை அதிபதி மற்றும் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக அவர் இந்த இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார். இந்நாட்டின் 42வது கணக்காய்வாளர் தலைமை அதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பெண் அதிகாரியாவார்.  …

Continue Reading