புதிய கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமுதிகா ஜயரத்ன அவர்கள் சபாநாயகர் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார்
-
Editor
-
February 5, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
புதிய கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமுதிகா ஜயரத்ன அவர்கள் இன்று (பெப். 05) பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் இகரசியம் கேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார். 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9வது பிரிவுக்கு அமைய தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் தலைமை அதிபதி மற்றும் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக அவர் இந்த இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார். இந்நாட்டின் 42வது கணக்காய்வாளர் தலைமை அதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பெண் அதிகாரியாவார். …
Continue Reading
ஜனாதிபதியின்பொதுமன்னிப்பில்கைதிகள்விடுதலை
-
Editor
-
February 5, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் இந்த விசேடபொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். அதற்கமைய, பின்வரும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின் கீழ் கைதிகளுக்கு இந்த விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் சிறையில் கழித்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வார கால பொதுமன்னிப்பு இதன்கீழ் வழங்கப்படுகிறது. 75,000 ரூபாவுக்கு குறைந்த அபராதத்தைச் செலுத்தத் தவறியமையினால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனைக் காலத்தை ரத்துச் செய்தல் இந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் இடம்பெறுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Continue Reading
புத்தபெருமானின்புனிதசின்னங்கள் தரிசித்த ஜனாதிபதி
-
Editor
-
February 5, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் மூலம் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட “புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசன நிகழ்வில் 04-02-2026அன்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் பங்கேற்றேன். நமது 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த பெருமைமிக்க சந்தர்ப்பத்தில், கொழும்பு, கங்காராம விகாரையில் தெவ்னி மோரி புனிதச் சின்னங்களை வழிபடக்கிடைத்தமை நமது இரு நாடுகளுக்கும் இடையிலான தனித்துவமான நட்பின் சிறப்பு நிகழ்வாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் பௌத்த மக்கள் வழிபடுவதற்காக …
Continue Reading
இந்தியாவிலிருந்து புத்தபெருமானின் புனித சின்னங்கள் கொண்டுவரப்பட்டன
-
Editor
-
February 5, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தேவ்னிமோரி என்னும் புனித பூமியிலிருந்து அகழ்வாராய்ச்சியின் போது மீட்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் 04-02-2026அன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் 05-04-2026 காலை 6 முதல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ள புனித சின்னங்களை, எதிர்வரும் 11 ஆம் திகதி 7 மணிவரை 24 மணிநேரமும் தரிசிக்கும் அரிய வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கமைய புத்த பெருமானின் புனித சின்னங்களுக்கு நேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டிருந்ததுடன், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் வழிபட்டிருந்தனர். 2025 ஏப்ரல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சமயத்தில் இடம்பெற்ற கலந்துறையாடலின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கமைய புத்தபெருமானின் புனித சின்னங்கள் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தேவ்னிமோரி என்னும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் 1960 ஆம் ஆண்டு புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வாராய்ச்சியின் போது பச்சை நிற பாறைக் கல்லினாலான பேழையும் அதனுள் இருந்து செப்பினாலான பெட்டி ஒன்றும், புத்த பெருமானின் புனித அஸ்தி அடங்கிய தங்கம் மற்றும் வெள்ளி மென்தகடுகளால் செய்யப்பட்ட மற்றொரு பேழையும் மீட்கப்பட்டுள்ளன. மேற்படி புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படவில்லை எனவும், முதன்முறையாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே தெரிவித்துள்ளார்.
Continue Reading
இலங்கையின் நம்பகரமான பங்காளியாக இந்தியா; உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
-
Editor
-
February 5, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இலங்கையைின் நம்பகரமான பங்காளி மற்றும் என்றும் சார்ந்திருக்கக்கூடிய ஒரு பங்காளியாக இந்தியா 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட உணர்வைப் பகிர்ந்து கொள்கிறது என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை மக்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து 04-02-2026அன்று எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவையும் கலாச்சார பிணைப்பையும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் சுதந்திர …
Continue Reading
நாட்டின் அடித்தளம் இன்னும் பலவீனமாகவே உள்ளது; பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை
-
Editor
-
February 5, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான ஒரு பொருளாதாரக் காலகட்டத்தில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றினாலும், வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் கடன் சுமையால் மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். அரசியல் தலைவர்கள் எத்தனை வாக்குறுதிகளை வழங்கினாலும் நாட்டின் அடித்தளம் இன்னும் பலவீனமாகவே உள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க ஆராதனைகள் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் 04-02-2026அன்று இடம்பெற்றன. இதன் போதே பேராயர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை …
Continue Reading
சொத்துவிபரங்களைஇணையவழியில்சமர்ப்பிக்கும்புதியடிஜிட்டல்முறைமைமார்ச் 31 முதல்ஆரம்பம்
-
Editor
-
February 4, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விபரங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறையினை எதிர்வரும் காலங்களில் டிஜிட்டல் முறையினூடாக சமர்ப்பிக்க முடியும“ என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள மத்திய இலத்திரனியல் கட்மைப்பின் ஊடாக, 2026 ஆம் ஆண்டு முதல் அனைத்து விபரங்களும் இணையவழியில் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் புலனாய்வு ஆணைக்குழுவினால் இந்தத் தரவுகளைச் சேகரிக்கும் மற்றும் சரிபார்க்கும் பொறுப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய புதிய நடைமுறையின்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் குறித்த மத்திய இலத்திரனியல் கட்டமைப்பு பயண்பாட்டுக்காக உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ளது. அன்றைய தினத்திலிருந்து சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கு அச்சிடப்பட்ட படிவங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. விபரங்களைச் சமர்ப்பிக்க விரும்புவோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான ciaboc.gov.lk ஊடாக மாத்திரமே உள்நுழைய வேண்டும். மேலும் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு வேறு எந்தவொரு வெளி இணைப்புகளையும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) மற்றும் 82(1) பிரிவுகளின் கீழ் உள்வாங்கப்படும் அனைத்து தரப்பினரும் தமது முதல் நியமனம், வருடாந்த அறிக்கை, பதவிக்காலம் முடிவடையும் போது அல்லது ஓய்வுபெறும் போதான விபரங்கள், ஓய்வுக்குப் பின்னரான மற்றும் தேர்தல் கால விபரங்கள் என அனைத்தையும் இந்த இணையவழி முறைமையின் ஊடாகவே சமர்ப்பிக்க வேண்டும்.
Continue Reading
புயலால்பாதிக்கப்பட்ட பாடசாலைகள்தொடர்பில்திட்டங்கள்இருக்கின்றன; பிரதமர்ஹரிணி
-
Editor
-
February 4, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
தித்வா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலைகள் தொடர்பில் எமக்கும் திட்டங்கள் இருக்கின்றன. என்றாலும் தற்போதுள்ள நிலையில் தற்காலிக தீர்வுகளையே வழங்க முடியுமாக இருக்கிறதென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 03-02-2026 அன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பியினால் வினவப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் கண்டி தெல்தோட்டை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் இரண்டுமாடி கட்டிடம் நிர்மாணிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. …
Continue Reading
ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர்
-
Editor
-
February 4, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இலங்கை முழுமையான சுதந்திர நாடாக மாற வேண்டுமெனில், ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தையும் நாம் தோற்கடித்து, அரசியல், சிவில் மற்றும் குடியியல் சுதந்திரங்கள் போலவே பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார சுதந்திரங்களையும் அடைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி, பொல்வத்த, ஸ்ரீ தர்மகீர்த்தயாராமயத்தில் 04-02-2026அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பௌத்த மத வழிபாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 78 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் …
Continue Reading
பிரிவினைவாதத்துக்கு ஒருபோதும் இடமில்லை; ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டம்
-
Editor
-
February 4, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இனவாதம் மற்றும் தீவிரவாதம் என்ற இரு சொற்கள் மிகவும் ஆபத்தானவை. இவை நமது நாட்டின் பலத்தை நமக்கே எதிராகத் திருப்பி நம்மை அழித்துவிடக் கூடியவை. மொழி, மதம் மற்றும் கலாசார வேறுபாடுகளை வேறுபாடுகளை ஒருவருக்கொருவர் எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாதென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கையர் என்ற அடையாளத்துடன் அனைத்து இன மக்களின் தனித்துவத்தையும் மதித்து நாம் முன்னேற வேண்டும். எனவே இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரிவினைவாதத்துக்கு இனி இந்த நாட்டில் இடமில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். நாட்டின் 78ஆவது …
Continue Reading