‘இலங்கையைக்கட்டியெழுப்புவோம்’; 78 ஆவதுதேசியசுதந்திரதினநிகழ்வு

‘இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ எனும் கருப்பொருளின் கீழ், நாட்டின் 78ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 04-02-2026அன்று  கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் விமரிசையாக இடம்பெற்றன. நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், காலை 6 மணியளவில் காலி முகத்திடலில் அமைந்துள்ள தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 5.30 மணி முதல் விகாரை, கோயில், தேவாலயம் மற்றும் பள்ளிவாசல்களில் சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன. அதிதிகள் வருகையைத் தொடர்ந்து, காலை 8 மணியளவில் ஜனாதிபதி அநுரகுமார …

Continue Reading

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் கௌரவ சபாநயாகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன  இன்று (பெப். 03) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இந்த சட்டமூலம் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  இந்த சட்டமூலம் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்றாகும். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2025 நவம்பர் 21 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரினால் 2025 டிசம்பர் 3 ஆம் திகதி …

Continue Reading

இயலாமையுள்ள சமூகத்தை தேசிய அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்வது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் இயலாமையுள்ள பெண்கள் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் கலந்துரையாடல்

இயலாமையுள்ள பெண்கள் உள்ளிட்ட சமூகத்தினரின் உரிமைகள், உள்ளடக்கிய தன்மை மற்றும் தேசிய அபிவிருத்திக்கான அவர்களின் பங்களிப்பு குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் இயலாமையுள்ள பெண்களின் சங்கத்திற்கும் (AKASA) இடையில் கடந்த ஜன. 22 ஆம் திகதி பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் தலைவர் செல்வி என்.ஜி. கமலாவதி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர். இங்கு இயலாமையுள்ள பெண்களின் …

Continue Reading

சட்ட விரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்தல் தொடர்பான மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கு இலங்கை தயார்

“அரசாங்கம் என்ற வகையில், நாம் முதலாவதாக சிறந்த ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம்”- ஜனாதிபதி சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான (AML/CFT) சர்வதேச தரநிலைகள் குறித்து இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. அரசாங்கம் என்ற வகையில், வெளித் தரப்பினருக்கு நமது தூய்மையை எடுத்துக் காட்டுவதற்கு முன், நாம் நமக்குப் பொறுப்பாகவும், சிறந்த ஆட்சியை நிலைநிறுத்த …

Continue Reading

தலைமைகணக்காய்வாளர்நாயகமாகசமுதிகாஜெயரத்ன

தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமான சமுதிகா ஜெயரத்னவை தலைமை கணக்காய்வாளர் நாயகமாக  நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவையின்  தலைவரான  சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற கட்டடத்  தொகுதியில் 03-02-2026 அன்று அரசியலமைப்பு  பேரவை கூடிய நிலையில், ஜனாதிபதியால் அரசியலமைப்பு முன்மொழியப்பட்ட பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு, முரண்பாடற்ற வகையில் ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதற்கமைய நாட்டின் புதிய தலைமை கணக்காய்வாளர் நாயகமாக  எல்.எஸ். ஜெயரத்னவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்து,  தமது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக …

Continue Reading

தித்வா சூறாவளியினால் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு

தித்வா சூறாவளியினால் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.  சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் 2026.01.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் …

Continue Reading

ஒவ்வொருபிள்ளைக்கும்சமமானகல்விஉரிமையைஉறுதிப்படுத்த நடவடிக்கை; பிரதமர்ஹரிணி

எந்தவொரு பிள்ளையினதும் கல்வி, அவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலையைக் கொண்டு தீர்மானிக்கப்படக் கூடாது என்பதும், எந்தவொரு பிள்ளையும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக 29-01-2026அன்று முதலாம் தரத்தில் இணைந்துள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, …

Continue Reading

78ஆவது  சுதந்திரதின கொண்டாட்டத்துக்குஏற்பாடு; 2000 பேருக்குஅழைப்பு

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதான கொண்டாட்ட நிகழ்வுகள் பெப்ரவரி 4ஆம் திகதி ‘இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயாக்க தலைமையில் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. காலை 6.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சிச் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 29-01-2026அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு 70 மில்லியன் ரூபாவுக்குள் இந்த பிரதான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. …

Continue Reading

12வயதுக்குட்பட்டோரின் சமூகவலைத்தள பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் கவனம் ; அமைச்சர்சாவித்திரி

பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் சமூக வலைத்தளப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என்றும் இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். கொழும்பில் 29-01-2026அன்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைத்தொலைப்பேசி பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ள அரசாங்கம், அதற்கு இணையாக சமூக வலைத்தளப் பிரவேசத்தையும் தடை செய்யத் திட்டமிட்டுள்ளது.  சர்வதேச …

Continue Reading

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழிமுயற்சியாளர்களை உருவாக்குவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட அளவுகோல்கள் குறித்து உப குழுவின் கவனத்திற்கு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழிமுயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2026.01.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.  தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வர்த்தகச் சபை மற்றும் உள்நாட்டு வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் …

Continue Reading