இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனத்திற்கு
-
Editor
-
January 29, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் மற்றும் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன மற்றும் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோரின் பங்குபற்றலுடன் 2026.01.27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போது இது …
Continue Reading
தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை ஆரம்பிப்பது குறித்து கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடல்
-
Editor
-
January 29, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை ஆரம்பிப்பது குறித்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்னெடுப்பில் அண்மையில் (ஜன. 22) இடம்பெற்றது. கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வெகுசன ஊடக கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன அவர்களும் கலந்துகொண்டார். அத்துடன் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் இலங்கை மன்றக் கல்லூரி …
Continue Reading
உணவுப் பாதுகாப்பு பற்றிய நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும்; பிரதமர் ஹரிணி
-
Editor
-
January 29, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
உணவுப் பாதுகாப்பு பற்றிய நடைமுறைகள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது, அவை பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாகவும் மாற்றப்பட வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.கொழும்பு, காலி முகத்திடல் ஹோட்டலில் 28-01-2026 அன்று நடைபெற்ற, ‘உணவுத் துறையில் சுழற்சி பொருளாதாரத் திட்டம் (2024 – 2027)’ எனும் தலைப்பிலான, உள்நாட்டு சுழற்சி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்துவதற்குமான கல்வி குறித்த தேசிய கருத்தரங்கில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்பில், ஐக்கிய நாடுகளின் உணவு …
Continue Reading
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பான நிறுவன மதிப்பாய்வு குறித்து சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்
-
Editor
-
January 28, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பான நிறுவன மதிப்பாய்வு போன்ற விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் கடந்த 21ஆம் திகதி கூடியபோதே இவ்விடயங்கள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதற்கு அமைய புகையிலை மற்றும் மதுபானம் …
Continue Reading
நுரைச்சோலைநிலக்கரிமின்உற்பத்திநிலையத்துக்குவிஜயம்செய்தஎதிர்க்கட்சிஎம்.பி.க்கள்
-
Editor
-
January 28, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்துக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய நிலக்கரித் தொகுதி குறித்து ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அங்கு கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா உள்ளிட்ட குழுவினர் 27-01-2026அன்று இக்கள விஜயத்தை மேற்கொண்டனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, சர்ச்சைக்குரிய நிலக்கரித் தொகுதி தொடர்பான உண்மைகளைக் கண்டறியும் பணிக்காகத் தமது குழு நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகக் …
Continue Reading
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்
-
Editor
-
January 28, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இரு நாட்களாக வடக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் 27-01-2026அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறி சற்குணராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழி பெயர்ப்புக் கற்கைகள் துறைகளின் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார். இச் சந்திப்புகளின் போது, அரசியல் பொருளாதார நிலைமைகள் உட்பட சமகால விடயங்கள் பற்றியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் …
Continue Reading
சட்டமாஅதிபர்விவகாரத்தில் தேவையேற்படின்குற்றப்பிரேரணை; அரசாங்கம்அதிரடி
-
Editor
-
January 28, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது என்பதற்காக நியாயமான காரணியொன்றை முன்வைக்காமல் சட்டமா அதிபரை பதவி நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. ஆனால் குறிப்பிட்ட வழக்கொன்று தொடர்பில் ஏற்படும் தாமதங்களை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டால் அது குறித்து அரசாங்கமும் அரச நிறுவனங்களும் நிச்சயம் அவதானம் செலுத்தும். அந்த வகையில் தேவையேற்படின் குற்றப்பிரேரணை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 27-01-2026அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் …
Continue Reading
அரசமருத்துவஅதிகாரிகள்சங்கத்தின்போராட்டம்அடிப்படையற்றது; அமைச்சரவைபேச்சாளர்
-
Editor
-
January 28, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்கியிருக்கின்றனர். ஆனால் அரச அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஒரு சிறிய வைத்தியர்கள் குழு தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 27-01-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச மருத்துவ …
Continue Reading
உலகளாவிய மாதிரியாக வளர்ந்துள்ள இந்திய – இலங்கை உறவு; உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா
-
Editor
-
January 28, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
இந்திய வெளியுறவு கொள்கை நோக்கில் இலங்கைக்கு ஒரு விசேட இடம் உள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான உறவுகள் அயலவர்களுக்கிடையிலான கூட்டுறவு பங்குடமைக்கான ஒரு உலகளாவிய மாதிரியாக வளர்ந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா தெரிவித்தார். இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு 26-01-2026அன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இந்திய வெளியுறவு கொள்கை நோக்கில் இலங்கைக்கு ஒரு விசேட இடம் உள்ளது. இந்த பிரிக்க முடியாத பிணைப்பானது எமது நாகரீக …
Continue Reading
மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்யவும் தீர்மானம்
-
Editor
-
January 27, 2026
-
சமகாலம், தமிழ் Header
-
சமகாலம்
-
0 Comments
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை ஒவ்வொரு புதன்கிழமையும் பி.ப 2.00 மணிக்குக் கூட்டி விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில் 2026.01.21ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய இக்குழு 2026.01.28ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 …
Continue Reading