மின் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி இருப்புக்கள் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கேள்வியெழுப்பியது

மின் உற்பத்திக்காக இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கேள்வியெழுப்பப்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்குழுக் கூட்டத்திற்கு வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் நடைமுறை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய …

Continue Reading

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான இந்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் அவர்களினால் 2025 டிசம்பர் 03 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், அரசியலமைப்புப் பேரவையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூன்று உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 19 ஆம் …

Continue Reading

அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன

பாராளுமன்றம் பெப்ரவரி 3, 5  மற்றும்  6ஆம் திகதிகளில் கூடும் பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (23) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதற்கமைய, பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளது. இதற்கமைய பாராளுமன்றம் கூடும் மூன்று தினங்களும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை …

Continue Reading

பயங்கரவாதத்திலிருந்துஅரசைப்பாதுகாக்கும்சட்டவரைவு;மனிதஉரிமைகள்கண்காணிப்பகம்எச்சரிக்கை

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் இருப்பதையொத்த மிகமோசமாக கூறுகள் உள்ளடக்கியிருப்பதுடன், அது ஒடுக்குமுறைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய தன்மையையும் கொண்டிருக்கிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் …

Continue Reading

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில்மனுக்கள்தாக்கல்

அரசாங்கத்தால்  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான சட்டபூர்வத்தன்மையை சவால் செய்து உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர்களான எம்.எம். பிரேமசிரி, நவரத்ன பண்டா, பி.எம். தீபால் குணசேகர மற்றும் சமன்சிறி ஹேரத் ஆகியோரால் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் 2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாகக் கடமையாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளனர். மற்றைய மனுவை 1988 முதல் 2004 வரை பாராளுமன்ற  உறுப்பினர்களாகப் பணியாற்றிய பியசோம உபாலி மற்றும் உபாலி அமரசிறி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களில், கடந்த 7 ஆம் திகதி நீதி அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 1977 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க தேசிய அரசப் பேரவைச் சட்டத்தின் 108(2) பிரிவின்படி, ஐந்து வருட காலத்தைப் பூர்த்தி செய்யும் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர். அத்தோடு 1979, 1982 மற்றும் 1985 ஆம் ஆண்டு சட்டங்களின் மூலமும் ஓய்வூதியம் மற்றும் அவர்கள் இறந்ததன் பின்னர் மனைவிகளுக்கான கொடுப்பனவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.  சுமார் 35 வருடங்களாகத் தமது வாழ்க்கையை மக்கள் சேவைக்காக அர்ப்பணித்துள்ளதாகத் தெரிவிக்கும் மனுதாரர்கள், தற்போது தமக்கு ஓய்வூதியமாக 60 ஆயிரம்  முதல் 80 ஆயிரம் ரூபா வரையே கிடைப்பதாகவும், தற்போதைய சூழலில் தமது நாளாந்த செலவுகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு அந்தத் தொகை போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். அரசியல் ஊடாக மக்கள் சேவையில் ஈடுபடுவது பெரும் ஆபத்து நிறைந்தது எனக் கூறும் மனுதாரர்கள், அந்தச் சேவையின் காரணமாகவே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ரணசிங்க பிரேமதாச, லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க, சி.வி. குணரத்ன மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற தலைவர்கள் தமது உயிரைத் தியாகம் செய்ய நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  ஓய்வூதியத்தை இரத்து செய்வது குறித்து ஆராய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்திரசிறி தலைமையிலான குழுவும், ஏற்கனவே ஓய்வூதியம் பெறுபவர்களின் உரிமையை பின்னோக்கிப் பாதிக்கும் வகையில் இரத்து செய்ய முடியாது என ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தமக்குத் தெரியவந்துள்ளதாகவும் மனுதாரர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அவ்வாறான பின்னணியிலும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நோக்குடன் அரசாங்கம் இந்தச் சட்டமூலத்தைச் சமர்ப்பித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர்கள், இது அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை மற்றும்  மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பு மூலம் அது அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

Continue Reading

தேசிய பெண்கள் ஆணைக்குழு செயலிழப்பு;ஜனாதிபதிக்கு கடிதம்

பெண்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து புகார்களைப் பெற்றுக்கொள்வதற்கும், விசாரணைகளை மேற்கொள்வதற்கும், ஆய்வு செய்வதற்குமென நியமிக்கப்பட்ட தேசிய பெண்கள் ஆணைக்குழுவுக்கு அவசியமான நிதி, அலுவலகம், பணியாளர்கள், ஏனைய வளங்கள் என்பன வழங்கப்படாமல், அது செயலிழந்துள்ளது. இதனூடாக அந்த ஆணைக்குழுவை நியமிக்கும் பொறுப்புடைய நிர்வாகத் தலைவர் என்ற ரீதியில், நீங்கள் அரசியலமைப்பு சார்ந்த உங்களது கடமையை மீறுகிறீர்கள் என சிவில் சமூக அமைப்புக்கள் 10 உம், சிவில் மற்றும் பெண்கள் செயற்பாட்டாளர்கள் 138 பேரும் ஜனாதிபதியிடம் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதியினால் கடந்த ஆண்டின் பின்னரைப் பகுதியில் நியமிக்கப்பட்ட …

Continue Reading

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற பாலியல் அத்துமீறல்கள்; ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகம்

இலங்கையில் ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வெறுமனே தற்செயலாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக அவை வேண்டுமென்றே, பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும். இவை தகவல்களைத் திரட்டுவதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன என ஐக்கிய நாடுக்ள மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்டோருக்கான நீதியைத் தாம் வழங்காவிடின், வேறு யார் வழங்குவார்கள் என …

Continue Reading

மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூக கூட்டிணைவு ஜனாதிபதிக்கு பரிந்துரை

அண்மைய பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களை மீண்டும் ஆபத்தை நோக்கித் தள்ளும் வகையிலன்றி, அவர்களைத் தேசிய நீரோட்டத்துக்குள் இணைக்கும் வகையில் மீள்கட்டுமானப்பணிகள் அமையவேண்டும் என வலியுறுத்தியிருக்கும் மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு, பேரழிவினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களின் காணி உரிமை, வீட்டுரிமையைப் பாதுகாக்கும் வகையில் கரிசனையுடைய சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பொது நடவடிக்கை செயலணி ஒன்றை உருவாக்கப்படவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து மலையக மக்களின் பிரச்சினைகள் சார்ந்து இயங்கிவரும் சிவில் செயற்பாட்டாளர்களான கௌதமன் பாலச்சந்திரன், நடேசன் சுரேஷ், அன்டனி ஜேசுதாஸன், …

Continue Reading

கௌரவத்தைச்சீர்குலைக்கும்அதிகாரிகளுக்குபொலிஸில்இடமில்லை; பொலிஸ்மாஅதிபர்பிரியந்தவீரசூரிய

பொலிஸின் கௌரவத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகத் எவ்வித தபாரபட்சமின்றி சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பொலிஸினுள் ஒழுக்கத்தை உறுதிப்படுத்தாமல் பொதுமக்களுக்கு முன்சென்று சட்டத்தை நிலைநாட்ட முடியாது எனவும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். இவ்விடயம்தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸ் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு  இருமடங்கு வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இத்தகைய வினைத்திறனான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பொலிஸாருக்குத் தேவையான மேலதிக வசதிகளை வழங்க முன்வந்துள்ளதுடன், அதிகாரிகளின் பணித்திறனை மேலும் உயர்த்துவதற்கும்  திட்டமிட்டுள்ளது. எனினும், குற்றவாளிகளுடனும் பாதாள உலகக் கும்பல்களுடனும் தொடர்புகளைப் பேணி, பொலிஸ் சேவையில் இருந்துகொண்டு பொலிஸின் கௌரவத்தை  சீர்குலைக்கும் ஒரு சில அதிகாரிகள் தொடர்பாகக் கடும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 99 சதவீதமான அதிகாரிகள் மிகச் சிறப்பாகவும் நேர்மையாகவும் கடமையாற்றும் நிலையில், எஞ்சிய சிலரின் தவறான நடத்தையினால் ஒட்டுமொத்தப் பொலிஸ் கட்டமைப்பின் நற்பெயரும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறான அதிகாரிகளைச் பணி நீக்குவதற்கும் சட்டத்தின் முன் நிறுத்த தயங்கப்போவதில்லை. அதிகாரிகளின் நலன்புரி விடயங்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட குறைகளைக் கேட்டறிவதற்காக விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை 90 சதவீதமான அதிகாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக, கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு நிலவும் பற்றாக்குறை மற்றும் இடமாற்றச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவர்களது கடமைக் காலம் இரண்டு ஆண்டுகளிலிருந்து மூன்று மாதங்களாகக் குறைக்கப்பட்டு சுழற்சி முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இறுதியாக, பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் சிரேஷ்ட பிரதிப்  பொலிஸ்மா அதிபர் வரை அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகளின் பணித்திறன் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும்.  பொலிஸார் மனநிறைவுடன் பணியாற்றுவதை உறுதிப்படுத்தினால் மாத்திரமே பொதுமக்களுக்குத் தரமான சேவையை வழங்க முடியும் என்றார்.

Continue Reading

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டாக ஆராயவேண்டுமென காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து

இதுவரை காலமும் பல்வேறு தரப்பினரால் மறுக்கப்பட்டுவந்த பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மீறல்கள் உண்மையிலேயே நிகழ்ந்திருக்கின்றன என்ற உண்மை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை மூலம் நிரூபணமாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி, இவ்வறிக்கையை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆராயவேண்டும் என வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுவந்த இலங்கையில் மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் …

Continue Reading