பிரதமருக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டிணைவு கடும் கண்டனம்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு எதிராக பாலின அடிப்படையிலும், தனிப்பட்ட ரீதியிலும் நிகழ்த்தப்பட்டுவரும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்திருக்கும் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டிணைவு, இவ்வாறான தாக்குதல்களால் அரசியல் வன்முறைகளுக்கு வழிவகுக்குமே தவிர, அவை சட்டபூர்வ கருத்து வெளிப்பாடாக ஒருபோதும் அமையாது எனச் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மைய சில வாரங்களாக பிரதமருக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், ஊடக சந்திப்புக்களிலும், பொதுமேடைகளிலும் நிகழ்த்தப்பட்டுவரும் தாக்குதல்களைக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டிணைவு, ‘ஆறாம் தரத்துக்கான ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பிழையே இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக உருப்பெற்றிருப்பதாக …

Continue Reading

மாகாணசபைதேர்தல்குறித்துசகலகட்சிகளுடனும்பேச்சு; அமைச்சர்சந்தனஅபேரத்ன

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கான குழு வெகுவிரைவில்  நியமிக்கப்படும். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடனும் மாகாண சபைத் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோமென பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் அடிப்படை சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு …

Continue Reading

அனைத்துமாணவர்களுக்கும்சமமான,வாய்ப்பு;பிரதமர்கலாநிதிஹரிணிஅமரசூரிய

எந்தவொரு சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருந்தபோதிலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தங்கு தடையற்ற கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பு குறித்துப் புத்தளம் மாவட்ட மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், ‘தித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கும் மேற்கொண்ட விஜயத்தின் இடையே, 18-01-2026 அன்று புத்தளம் விஞ்ஞானக் கல்லூரிக்கு விஜயம் செய்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் தற்போதைய நிலவரத்தின்படி, கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், …

Continue Reading

நாடு முழுவதும் 31,218 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2026 தேசிய வீட்டுத்திட்டம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் ஆரம்பம்

10 இலட்சம் ரூபாவாக இருந்த வீட்டு உதவித்தொகையை 20 இலட்சம் ரூபாவாக அதிகரித்து, சிறந்த வீட்டை நிர்மாணிக்க முடியுமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது – யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் இன்றும் கூட, சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் …

Continue Reading

ஜனாதிபதி தலைமையில் மன்னார், Hayleys Fentons Limited 50 மெகாவோட் காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

நாட்டை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியால் பலப்படுத்துவதுடன், பிரதேச மக்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் நன்மைகளை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகும். – வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, மன்னாரில் Hayleys Fentons Limited நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் 50 மெகாவோட் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தி, 10 காற்றாலை விசையாழிகளைக் …

Continue Reading

இனவாதம் அற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம் – வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பல கலை கலாசார நிகழ்வுகளினால் இவ்விழா வர்ணமயமாக அமைந்தது. தைப்பொங்கல் கொண்டாட்டமானது …

Continue Reading

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆஸி.உயர்ஸ்தானிகர் அளித்த உறுதி

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் நிலவும் கரிசனைகள் குறித்து ஜனாதிபதியுடன் நிச்சயமாகக் கலந்துரையாடுவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்திடம் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த்துக்கும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு 14-01-2026அன்று  யாழில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான …

Continue Reading

இலங்கை தமிழ் சமூகத்துக்கு நீதிவேண்டி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் …

Continue Reading

புலம் பெயர் தமிழர்களின் காணி விவகாரங்களை  தடையின்றி முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன; பதிவாளர் திணைக்களம்

புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள், உள்நாட்டிலுள்ள அவர்களது காணிகளை விற்பதற்கோ அல்லது வேறொருவரது பெயருக்கு மாற்றுவதற்கோ எவ்வித தடையும் இல்லை. வழக்கறிஞர் பத்திரத்தின் ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என பதிவாளர் திணைக்களம் தெரிவித்தது. பதிவாளர் திணைக்கள ஆணையாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தலைமையில் திணைக்களத்தின் பல்வேறு விடயம் சார் அதிகாரிகள் வீரகேசரியுடன் விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது : புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள், …

Continue Reading

மும்மையில் வெற்றிகரமாக நடைபெற்ற இலங்கை சுற்றுலா விழிப்புணர்வூட்டல் நிகழ்வு

இந்தியாவை இலக்குவைத்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஓரங்கமாக மும்பையில் உள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்துடன் இணைந்து கடந்த வாரம் மும்பையில் சுற்றுலா தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்வு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.இந்நிகழ்வில் இலங்கையின் வலுவான சுற்றுலாத்துறை செயலாற்றம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன் சுற்றுலாப்பயணிகளை வரவேற்பதற்கு இலங்கை தயாராக இருக்கிறது என்ற விடயம் இந்திய வர்த்தக, ஊடக மற்றும் சுற்றுலா முகவர்களுக்குத் தெளிவூட்டப்பட்டது. அங்கு உரையாற்றிய மும்பையில் உள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் பிரியங்க விக்ரமசிங்க, ‘வெளிநாட்டுப்பயணிகளை வரவேற்றல் என்பது …

Continue Reading