தித்வா புயலுக்கு பின்னர் முன்னணி போலந்து சுற்றுலா நிறுவனத்துடன்  இலங்கைத் தூதுவர் கலந்துரையாடல்

போலந்துக்கான இலங்கைத் தூதுவர் பிரியங்கிகா தர்மசேன, ஸ்ட்.என்.பி லோகோஸ் டுவர்ஸ், வர்ஸாவ் கிளையின் தலைவரான மோனிகா ஸ்ஷ்நைடர் ஐ கடந்த ஏழாம் திகதி சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார்“ஸ்ட்.என்.பி லோகோஸ் டுவர்ஸ்” என்பது போலந்தில் செயல்படும் முன்னணி வெளிநாட்டு சுற்றுலா நிறுவனம்  ஆகும். இது இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில்  உலகளாவிய சுற்றுலா பயணங்களை நடத்தி வருகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பரில் இலங்கையை கடுமையாக பாதித்த “தித்வா” புயலுக்குப் பின்னர், அந்த நிறுவனம் எதிர்கொண்ட சவால்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வதே இந்த …

Continue Reading

சமஷ்டி தீர்வு குறித்து  நோர்வே உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் தரப்பு வலியுறுத்து

தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அழுத்தங்களை நோர்வே பிரயோகிக்கவேண்டும் எனவும், குறைந்தபட்சம் சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல என்ற நிலைப்பாட்டையேனும் நோர்வே வெளிப்படுத்தவேண்டும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் வலியுறுத்தியுள்ளனர்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இம்மாதத் தொடக்கம் முதல் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு, அங்கு பலதரப்பட்ட சந்திப்புக்களை நடாத்தி வருகின்றனர். அதன்படி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தலைமையில் அதன் செயலாளர் செ.கஜேந்திரன், …

Continue Reading

‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நாளை (13) ஆரம்பம்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனவரி 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாக லோட்டஸ் அரங்கில் நடைபெற உள்ளது. உயிரிழப்புகள் , தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் பாதித்த டித்வா சூறாவளிஅனர்த்தத்திற்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உயர் மட்ட, நன்கு ஒருங்கிணைந்த …

Continue Reading

ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கைக்கு 8 மில்லியன் யூரோ மானியம்

‘நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி‘ எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு 8 மில்லியன் யூரோ மானியத்தை வழங்கும் ஒப்பந்தத்தில் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் கைச்சாத்திட்டுள்ளன. மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்ச, இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் என்பன கூட்டிணைந்து உருவாக்கிய இத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு நடைமுறைகளையும், உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பசுமைப் பொருளாதாரத்தை …

Continue Reading

வெளிநாட்டு  நிவாரண உதவி  ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழு 09-01-2026அன்று பாராளுமன்ற வளாகத்தில் மற்றொரு கூட்டத்தை நடத்தியுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலின் போது, ஏற்கனவே பெறப்பட்ட நிவாரண உதவிகளை விநியோகித்தல், நிர்வாக மற்றும் செயல்பாட்டு சவால்களை நிவர்த்தி செய்தல், உட்பட பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவிகளை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதற்காக சேமிப்பு, விநியோகச் ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா …

Continue Reading

நாமே மக்களை கவனத்து கொள்ளும் ஒரு அரசாங்கம்; ஜனாதிபதி அநுரகுமார

பொருளாதாரத்தையும் மக்களைக் கவனித்துக் கொண்டு நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் மிகவும் திட்டமிட்ட முறையிலும்  முறையாகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். நாட்டில் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு அரசாங்கம் என்றால் அது தற்போதுள்ள அரசாங்கமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.குருநாகல் மாவட்டத்தின் ரிதீகம, மாவதகம, மல்லவபிட்டிய, இப்பாகமுவ மற்றும் கணேவத்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்ட அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு 10-01-2026 அன்று ரிதீகம, தொடம்கஸ்லந்த இளைஞர் படையணி நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே …

Continue Reading

கணக்காய்வாளர் இராணுவ அதிகாரியாக இருக்கக்கூடாதா? அமைச்சர் நளிந்த கேள்வி

கணக்காய்வாளராக பதவி வகித்த ஒருவர் இராணுவத்தில் இணைந்ததன் பின்னர் அவரின் பெயரை ஏன் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு முன்மொழியக் கூடாது. ஜனாதிபதியின் பரிந்துரை சட்டத்தால் குறிப்பிடப்பட்ட தகுதிக்கு  அமைவாக உள்ளதா என்பதையே  அரசியலமைப்பு பேரவை ஆராய வேண்டும். அதை விடுத்து தகுதியானவர்கள் வெளியில் உள்ளார்களா, அல்லது வெளிநாட்டில் உள்ளார்களா என்பதை ஆராய  கூடாது. கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காததால் ஏற்படும் சிக்கலுக்கு  பரிந்துரைகளை  நிராகரித்தவர்களே பொறுப்புக்கூற வேண்டும் என்று  ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான   நளிந்த ஜயதிஸ்ஸ  என்றார் பாராளுமன்றத்தில் 06-01-2026 அன்று நடைபெற்ற …

Continue Reading

சிறு தவறுக்காக கல்வி அமைச்சரை பதவி நீக்க முடியாது; அமைச்சரவை பேச்சாளர்

 முழு கல்வி மறுசீரமைப்பு திட்டத்திலும் பாரிய தவறுகள் இடம்பெற்றிருந்தால் கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்து அவதானம் செலுத்தலாம். ஏற்பட்டுள்ள சிறிய தவறுக்காக கல்வி அமைச்சரை பதவி விலகுமாறு வலியுறுத்த முடியாது. அவர் பதவி விலய வேண்டிய தேவையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்வி மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது …

Continue Reading

மண்சரிவில் புதையுண்டோருக்கான இறுதிச்சடங்குகளை நடாத்தும் உரிமை குடும்பங்களுக்கு உண்டு; இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

அண்மையில் ‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு தமது பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளின் பிரகாரம் இறுதிச்சடங்குகளைச் செய்வதற்கான உரிமை அவர்களது குடும்பத்தாருக்கு இருப்பதாகவும், எனவே அவ்வாறு புதையுண்டோரின் சடலங்களை இயலுமானவரை தோண்டி எடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் ‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அனர்த்தங்களில் சிக்கி பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்ததுடன், மண்ணுக்குள் புதையுண்ட பலரது உடல்கள் தற்போதுவரை கண்டறியப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் உயிரிழந்த தமது …

Continue Reading

வெனிசுவேலா மக்களின் இறையாண்மையை முன்னறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுங்கள்; வெளிவிவகார அமைச்சு

வெனிசுவேலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, உரிமைகள் மற்றும் இறையாண்மையைக் கருத்திற்கொண்டு, தற்போது நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சு அழைப்புவிடுத்துள்ளது.   வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தலையீட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும், தமது ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் வெனிசுவேலா மக்களின் இறையாண்மையை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை இல்லை எனவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வெனிசுவேலா …

Continue Reading