முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கும் மேலதிகமாக 25,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது; அரசாங்கம்

தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 6,056 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ஆனால் இவற்றுக்கு மேலதிகமாக மேலும் 25,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. எனினும் விரைவில் அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அத்தோடு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அறிவிக்கப்பட்ட 25,000 ரூபா மற்றும் 50,000 ரூபா கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்பட்ட பின்னர் ஏனைய கொடுப்பனவுகளை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் …

Continue Reading

பாராளுமன்றஓய்வூதியம்நீக்குதல்சட்டமூலம்வர்த்தமானியில்வெளியீடு

தேசிய அரசு பேரவையின் 1977ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் ஆணையின் பிரகாரம் இந்த  வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் ‘பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டம்’ என அறிமுகப்படுத்தப்படும். அதன் பிரகாரம் தேசிய அரசு பேரவையின் 1977ஆம் ஆண்டு  1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டம் இதன் மூலம் நீக்கப்படும். சந்தேகம் களைவதற்காக, இந்த சட்டம் செயற்பட ஆரம்பிக்கும் தினத்துக்கு முன்னதாக, தேசிய அரசு பேரவையின் 1977ஆம் …

Continue Reading

வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்கள்விவகாரம்; வருடத்தின் முற்பகுதியில் விசாரணை

எதிர்வரும் மாதத்தில்  மக்கள் அரசாங்கப்பணிகளை மேற்கொள்வதற்கு அடிப்படையாக தேவைப்படும் அனைத்து படிவங்களையும் மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்வதற்கு வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும் வருடத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என நீதி அமைச்சர் ஹரிஷன நாணயக்கார தெரிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் புதிய வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 01-01-2026 அன்று   இடம்பெற்றது. இதன்போது அங்கு அமைச்சு ஊழியர்களுடன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர்  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவிதார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 2026 …

Continue Reading

ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி 

புத்தாண்டு வருகை கடந்த ஆண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு அளிப்பதோடு,புத்தாண்டு தொடர்பில் சாதகமான மனப்பாங்குகளுடன்  மீள திட்டமிடுவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க அனைவரையும் நான் அழைப்பு விடுகிறேன். மலர்ந்த  2026 புத்தாண்டு  உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான புத்தாண்டாக அமைய  வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள  புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் …

Continue Reading

பிரதமர் ஹரிணியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி 

நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு,புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு உங்களை அழைக்கின்றேன்.உங்கள் அனைவருக்கும் அமைதியும்,மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த வெற்றிகரமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒரு மக்கள் நல அரசாங்கமாக,பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்த ஓர் ஆண்டாக 2025ஆம் ஆண்டினை எண்ணி ஒருபுறம் நாம் மகிழ்ச்சியடைய முடியும். புதிய அரசியல் கலாசாரமொன்றின் அடிப்படையில், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை …

Continue Reading

சபாநாயகர்ஜகத்விக்கிரமரத்னவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

2026 ஆம் ஆண்டு அனைத்து தடைகளையும் சவால்களையும் கடந்து, இந்நாட்டை வலிமையாகக் கட்டியெழுப்ப அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயற்படஅழைக்கிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வெற்றிகரமான புத்தாண்டு வாழ்த்துக்களென சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.சபாநாயகர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாம் புதிய நம்பிக்கைகளுடன் கூடிய நாடாக மீண்டும் எழுச்சி பெறும் வேளையில்,புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் உறுதியுடனும் 2026 ஆம் ஆண்டை வரவேற்கிறோம்.நாட்டின் எதிர்கால நலனுக்காக பல புதிய பாதைகளை நோக்கி நாம் அடியெடுத்து வைக்க முடிந்ததால், கடந்த ஆண்டு நமது நாட்டிற்கு ஒரு முக்கியமான …

Continue Reading

எதிர்க்கட்சிதலைவரின் புத்தாண்டுவாழ்த்துசெய்தி

2026 புத்தாண்டு நமது தாய்நாட்டிற்கு சவாலான ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை நன்கு அடையாளம் கண்டு, உணர்ச்சிகளுக்கு அல்லாமல், அறிவுக்கு இடமளித்து செயல்படுவதற்கு நாம் அனைவரும் இன்றே உறுதிபூணுதல் வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : எதிர்பாராத நெருக்கடி நிலைமையின் பின்னணியில் நாம் எதிர்கொண்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்கள் புதிய பரிமாணத்திற்கு விரிவடைந்துள்ளன. இந்த சவால்களை வெல்வதற்கு வெறும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் அல்லது …

Continue Reading

450 மில்லியன் உதவிப் பொதி; கூட்டுக்குழு கையாளது

தித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து இலங்கையின் துரித மீட்சிக்காக இந்தியா இந்தியா 450 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப்பொதியொன்றை முன்மொழிந்துள்ளது. இந்த நிதியை இலங்கை – இந்திய கூட்டுக்குழுவால் கையாளுதல் தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவ்வாறான கோரிக்கையொன்றை இந்தியா முன்வைக்கவுமில்லை. இதனை முற்று முழுதாக எமது அரசாங்கமே கையாளும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு 30-12-2025 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போது ‘450 மில்லியன் …

Continue Reading

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் நிதிச் சலுகை அதிகரிப்பு

நாட்டில் வியாபாரத் துறையை துரிதமாக மீள்நிலைக்குக் கொண்டு வருவதற்காக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் நிதிச் சலுகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீள்நிலைக்குக் கொண்டு வருவதற்காக ‘RE—MSME – அனர்த்த சலுகை’ கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு ஆறுமாத கால சலுகைக் காலத்துடன் கூடிய மூன்று ஆண்டுகள் மீள்செலுத்தும் தவணைக் காலத்துக்கு …

Continue Reading

முழுமையாகசேதமடைந்தவீடுகளுக்குஇருமுறைமைகளின்கீழ்தலா 50 இலட்சம்ரூபா

தித்வா புயலால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் தலா 50 இலட்சம் ரூபா வழங்கப்படும். அத்தோடு பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு சேத மதிப்பீடு இன்றி 5 இலட்சம் ரூபா வழங்கப்படுவதோடு, சேத மதிப்பீடுகளுக்கமைய அந்த தொகை 25 இலட்சம் வரை அதிகரிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் தயாராக இல்லை. குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக மீள் குடியேற்றப்படுவர் என்றும் அவர் …

Continue Reading