இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலில் தற்காலிக தொழில்களில் அமர்த்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் நாட்டில் திட்டவட்டமான உழைப்புச் சந்தையில் தற்காலிக தொழில்களில் அமர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் மற்றும் இஸ்ரேல் அரசாங்கத்துக்கும் இடையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வீட்டுப் பணி, விவசாயம், கட்டுமானம், ஹோட்டல், வீட்டுப் பராமரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் சேவைகள், உற்பத்தி மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் போன்ற துறைகளில் காணப்படுகின்ற தொழில்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்குரிய நடைமுறைத் திட்டங்களில் அவ்வப்போது கையொப்பமிடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தங்களின் கீழ் இஸ்ரேலின் வணிக …

Continue Reading

2025ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 26 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்த விபரங்கள் வருமாறு,   சட்டத்தின் பெயர் நிறைவேற்றப்பட்ட திகதி சான்றுரைக்கப்பட்ட திகதி சட்டத்தின் இலக்கம் 1 உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் 17.02.2025 17.02.2025 01/2025 2 உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம் 20.03.2025 20.03.2025 02/2025 3 ஒதுக்கீட்டுச் சட்டம் 21.03.2025 21.03.2025 …

Continue Reading

பேரனர்த்தத்தினால்ஏற்பட்டபௌதிகரீதியானநேரடிப்பாதிப்புக்கள் 4.1 பில்லியன்டொலராகப்பதிவு; உலகவங்கி

தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான உலக வங்கியின் பூர்வாங்க மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம், இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புக்களின் பெறுமதி 4.1 பில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டிருப்பதுடன், கண்டி, புத்தளம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை இப்பேரனர்த்தத்தின் விளைவாக விவசாயத்துறை வெகுவாகப் பாதிப்படைந்தமையினால் வறுமை மற்றும் உணவுப்பாதுகாப்பின்மை என்பன மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ள உலக வங்கி, மறைமுகப் பாதிப்புக்களின் பெறுமதி மற்றும் மீளக்கட்டியெழுப்பல் செலவினங்கள் என்பன கணிப்பிடப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட …

Continue Reading

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்து புதிய அரசியல் அமைப்பை நோக்கி அரசாங்கம் பயணிக்க உள்ளதாக பிரதமர் பாராளுமன்றத்திற்கு வழங்கிய உத்தரவாதத்தை பாராட்டுகிறோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்து, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்துக்கு வழங்கிய உத்தரவாதம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மகிழ்ச்சி அடைகிறது. அதேபோன்று அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், அமைப்பு ரீதியாக எமது முழு ஒத்துழைப்பையும் தெரிவிக்கிறோம். மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதி செய்யும் நாட்டின் இறைமை மற்றும் நிலைபெயர் தன்மையை உறுதி செய்து கொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை …

Continue Reading

தமிழகத்தில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்த பிரதி அமைச்சர் பிரதீப்

இந்தியா மற்றும் இலங்கைக்குமான உறவினை வலுப்படுத்தவும் அதனை மேலும் உறுதி செய்யும் முகமாகவும் தமிழ் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அங்கு பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில் சென்னையில் உள்ள இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகராலயத்தில் தென்னிந்திய திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும், சூழலியல் செயல்பாட்டலருமான,  தங்கர்பச்சானை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இலங்கையில் தற்போது இடதுசாரி கொள்கையுடன் கூடிய ஆட்சி இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் தானும் ஓர் இடதுசாரிக் கொள்கை …

Continue Reading

அரசியலமைப்புசபைக்கும்தவிர்க்கமுடியாதபொறுப்புஉள்ளது; அமைச்சரவைபேச்சாளர்

ஜனாதிபதி, அமைச்சரவைக்கும் நாடு தொடர்பில் பாரிய பொறுப்பு காணப்படுவதைப் போன்று, அரச பொறிமுறையைக் கொண்டு செல்வதில் அரசியலமைப்பு சபைக்கும் தவிர்க்க முடியாத பொறுப்பு காணப்படுகிறது. எனவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளுக்கு தடையாக செயற்படாமல், அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசியலமைப்பு சபையை கோருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாட்டுக்கு நிரந்தமான கணக்காய்வாளர் ஒருவர் அவசியமாகும். எனவே தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் பொறுத்தமான தகுதிகளுடையவர்களது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இது தொடர்பில் அரசியலமைப்பு சபையே இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். …

Continue Reading

ஜெய்சங்கரின் வருகை இந்தியாவின் வலுவான நட்பின் பிரதிபலிப்பு ; அமைச்சர் விஜித்த ஹேரத்

‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்த நிலைமையைத் தொடர்ந்து, இவ்வேளையில் இலங்கையுடனான இந்தியாவின் வலுவான ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காண்பிக்கும் வகையில் அமைந்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கரின் வருகை பாராட்டுக்குரியது. இவ்விஜயம் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பு மற்றும் நீடித்த கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் இந்திய வெளிவிவகார அசை;சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் 23-12-2025அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் …

Continue Reading

நாட்டைமீளக்கட்டியெழுப்புவதற்காக 450 மில்லியன்டொலர்நிதியளிப்பைஅறிவித்ததுஇந்தியா

இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்காக 450 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாகவும், இந்நிதியளிப்பில் 350 மில்லியன் டொலர் இலகு கடனும், 100 மில்லியன் டொலர் நிதியுதவியும் உள்ளடங்குவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான செய்தியுடன் நாட்டுக்கு வருகைதந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், முன்னர் எப்போதையும் விட, இப்போது இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நிற்கும் என உறுதியளித்துள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி …

Continue Reading

எதிர்க்கட்சித்தலைவர் சஜித்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

தித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரிடலிருந்து மீள்வதற்காக இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மக்களைச் சென்றடைய வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் வலியுறுத்தியுள்ளார். அதற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் வழங்கக்கூடிய அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சி சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்புக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் 23-12-2025அன்று  இந்திய இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் …

Continue Reading

கிளிநொச்சியில்நிறுவப்பட்டுள்ளபெய்லிபாலம்மெய்நிகர்முறையில்அங்குரார்ப்பணம்

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ‘பெய்லி’ பாலத்தொகுதிகளைப் பயன்படுத்தி, இந்திய இராணுவப் பொறியியலாளர்களினால் கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள 120 அடி நீளமான பெய்லி பாலம் நேற்றைய தினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரால் மெய்நிகர் முறையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் 23-12-2025 அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பரந்துபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து …

Continue Reading