பிரதமர் ஹரணியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இலங்கையில் புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களை மீளக்கட்டியெழுப்புதல், விவசாயத் துறையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராகவுள்ளது.வலுவான சட்ட, நிர்வாக மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளின் ஆதரவுடன், பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான வினைத்திறன் மிக்க பொறிமுறைகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் பிரதமரிடம்  எடுத்துரைத்தார்.  நாடு மிக மோசமான  இயற்கை அனர்த்தத்தை  எதிர்கொண்ட போது  இந்திய அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காகத் தனது நன்றியையும் பாராட்டையும்  பிரதமர் கலாநிதி ஹரிணி  அமரசூரிய   தெரிவித்தார். இந்தியப் …

Continue Reading

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் மீண்டு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. இலங்கையின் மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துடன் இந்தியா முன்னெப்போதையும் விட அதிக அர்ப்பணிப்புடன் கைகோர்த்துள்ளது என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். கடினமான சமயத்தில் இலங்கையுடன் பலமாக இணைந்திருக்கவும்,இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளை வழங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அறிவுறுத்தியதாகவும், அந்த முயற்சிகளை ஆராய்வதற்காக இந்தியப் பிரதமரின் விசேட …

Continue Reading

ஜனாதிபதி அநுரவுக்கு  இந்தியபிரதமர்நரேந்திரமோடிசிறப்புகடிதம்

இலங்கை தற்போது அடுத்த கட்டம் குறித்து கவனம் செலுத்தியுள்ள வேளையில், நம்பகமான பங்காளியாகவும் நம்பகமான நண்பராகவும் இந்தியா சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இலங்கை மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதிலும் அவர்களின்  தாங்கிக் கொள்ளும் சக்தியை உறுதிப்படுத்துவதில் கடந்த காலத்தைப் போன்றே  நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நிற்போம். இந்த சூழலில்,இந்தியா ஒரு விரிவான  சலுகை பொதியை வழங்குகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.சலுகைப்பொதி  எவ்வாறு சிறப்பாக செயல்படுத்தலாம் என்பது  குறித்து உங்கள் அரசாங்கத்துடன்  கலந்துரையாடுமாறு …

Continue Reading

பா.ஜ.க.தமிழகமாநிலதலைவருடன்தமிழ்த்தேசியபேரவைஉறுப்பினர்கள்சந்திப்பு

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ‘ஏக்கிய இராச்சிய’ அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை டில்லி பிரயோகிக்கவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளனர். தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத் தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர். அங்கு தமிழக அரசியல் தலைவர்களுடன் நடாத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை  பெரியார் திடலிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரவு வேல்முருகனை  அவரது அலுவலகத்திலும் சந்தித்தனர். அதேவேளை 20-12-2025 அன்று  பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள், ‘தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ‘ஏக்கிய இராச்சிய’ அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை இந்தியா பிரயோகிக்கவேண்டும்’ என வலியுறுத்தினர். அத்தோடு இருநாடுகளுக்கும் இடையில் தீர்வின்றித் தொடரும் மீனவர் பிரச்சினை குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

Continue Reading

அனர்த்த நிவாரணப் பணிகளை வலுப்படுத்த தொடர்ந்தும்  ஒத்துழைப்பு வழங்க தயார்; இந்திய சுகாதார மற்றும்  குடும்ப நலத்துறை இராஜாங்க அமைச்சர் 

 ‘தித்வா’ சூறாவளியின் பின்னர் இலங்கை அரசாங்கம் அனர்த்தத்திற்கு பிந்தைய பணிகளை வலுப்படுத்துவதற்காக முன்னெடுத்த திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு வழங்கி வருவதுடன்,  எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக வழங்குவதாக தயார் என இந்திய சுகாதார மற்றும்  குடும்ப நலத்துறை இராஜாங்க அமைச்சர் அனுபிரியா படேல்  உறுதியளித்துள்ளார்.  சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸமற்றும் இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இராஜாங்க அமைச்சர் அனுபிரியா படேல்  ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்றது. உலக சுகாதார  ஸ்தாபனத்தின் பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது சர்வதேசமாநாட்டுக்கு  இணைவாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சுகாதார ஒத்துழைப்புகள் குறித்தும்,       எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நம்பிக்கைக்குரிய பங்காளிகளாக அர்ப்பணிப்புடன் செயற்படுவது குறித்து கலந்துறையாடப்பட்டது. இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற கொள்கையில் இலங்கை ஒரு முக்கிய மையமாக இருப்பதாக இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இராஜாங்க அமைச்சர் அனுபிரியா படேல் இங்கு தெரிவித்தார்.  ‘தித்வா’ சூறாவளியின் பின்னர் இலங்கை அரசாங்கம் அனர்த்தத்திற்கு பிந்தைய பணிகளை வலுப்படுத்துவதற்காக முன்னெடுத்த திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு வழங்கியதாகவும், எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக வழங்குவதாகவும் அவர் வலியுறுத்தினார். இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவு வலுவானது . இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களின் போது சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்புக்காக இலங்கை மக்களின் சார்பில்  நன்றிகளைத் தெரிவிப்பதாக  அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு குறிப்பிட்டிருந்தார்.  இலங்ககை முகங்கொடுத்திருந்த அவசர அனர்த்த நிலைமையின் போது இந்திய அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றிதெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.  பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும், இலங்கையின் சுகாதாரச் சேவை மற்றும் அரசாங்கத்தின் எதிர்காலப் பணிகளை வலுப்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்பத்  திட்டங்களை மேலும் மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும்  அமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார். 

Continue Reading

அனுபவங்களைஇந்தியஉயர்ஸ்தானிகரிடம்பகிர்ந்துகொண்டஉயர்நீதிமன்றநீதிபதிகள்

அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் போபால் தேசிய நீதித்துறை அகடமி என்பவற்றின் ஏற்பாட்டில் இலங்கை உயர்நீதிமன்றத்தின் 10 மூத்த நீதிபதிகளுக்கான அறிவுப்பரிமாற்றம் மற்றும் பரஸ்பரத் தொடர்பு பட்டறையொன்று இந்தியாவில் நடைபெற்றது.அதில் பங்கேற்ற மூத்த நீதிபதிகள் தமது அனுபவங்கள் மற்றும் கற்றல்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் பகிர்ந்துகொண்டனர். இந்திய உச்ச நீதிமன்றம் (புதுடில்லி) மற்றும் தேசிய நீதித்துறை அகடமி, போபால் என்பன இணைந்து கடந்த 8 – 12 ஆம் திகதி வரை இலங்கை உயர்நீதிமன்றத்தின் 10 மூத்த நீதிபதிகளுக்கான …

Continue Reading

சுவிட்ஸர்லாந்து தேசிய பேரவையின் 2 ஆவது துணைத்தலைவராகஇலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட ஃபரா ரூமி

சுவிட்ஸர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத்தலைவராக இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட ஃபரா ரூமி முகைதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சுவிட்ஸர்லாந்து கூட்டாட்சிப் பாராளுமன்றத்தின் 2025ஃ 2026 ஆம் ஆண்டுக்கான குளிர்கால அமர்வின் தொடக்கத்திலேயே சமூக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஃபரா ருமி சுவிஸ் தேசிய பேரவையின் இரண்டாவது துணைத்தலைவராகத் தேர்வாகியிருக்கின்றார். இந்த சுவிஸ் தேசிய பேரவையின் இரண்டாவது துணைத்தலைவர் என்பது சுவிஸ் கூட்டாட்சி ஜனாதிபதி (நிர்வாகத் தலைவர்களின் ஒருவருக்கு ஒருவருடகாலத்துக்கு வழங்கப்படும் பதவி) மற்றும் தேசிய பேரவையின் முதலாவது துணைத்தலைவர் ஆகியோருக்கான நிர்வாக ஒத்துழைப்புக்களை வழங்கும் பதவியாகும். 1991 …

Continue Reading

சிறுவர்கள் மத்தியில் மந்தபோசணையை தடுப்பதற்கான போசணைப்பதார்த்தம்; யுனிசெப் நன்கொடை

தித்வா’ சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் மந்தபோசணை குறைபாட்டுக்கு முகங்கொடுத்திருக்கும் சிறுவர்களுக்கு உதவும் நோக்கில் 20,000 கிலோகிராம் BP-5 எனும் போசணைப்பதார்த்தம் யுனிசெப் அமைப்பினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றம் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி போதியளவு போசணைப்பதார்த்தங்கள் அடங்கிய உணவுப்பொருட்கள் கிட்டாமையினால் சிறுவர்கள் மத்தியில் மந்தபோசணை நிலை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியில் 6 மாதக் குழந்தைகள் …

Continue Reading

பாதுகாப்பான இடங்களுக்குப் பாடசாலைகளை மாற்ற நடவடிக்கை; பிரதமர்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் யுனிசெப் பிரதிநிதிகளுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் 21-12-2025அன்று  பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.   அனர்த்தங்களினால் சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பிரதமர் இதன்போது விளக்கினார்.   மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது ஆபத்தானது என சுட்டிக்காட்டிய பிரதமர், அறிவியல் ரீதியான மதிப்பீடுகளின் அடிப்படையில் அத்தகைய பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.   பாதிக்கப்பட்ட மாணவர்களின் …

Continue Reading

பிரதமருடன்  ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்  ஆண்ட்ரே பிராஞ்ச்  சந்திப்பு

 பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே பிராஞ்ச் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று 21-12-2025அன்று  பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை அண்மையில் சந்தித்த இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைவாகவும் முறையாகவும் செயற்பட்டதற்கு  மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பாராட்டு தெரிவித்தார்.  உலகின் ஏனைய நாடுகளின் அனுபவங்களுடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற  பேரனர்த்தங்களின் போது இலங்கைக்கு கிடைத்த சர்வதேச ஒத்துழைப்பின் அளவு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். …

Continue Reading