நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை
-
Editor
-
March 20, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்தை சபாநாயகர் இன்று (மார்ச் 20) சான்றுரைப்படுத்தினார். நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் மூலம் இலங்கைக்குள் பணக் கடன் வழங்கும் தொழிலையும், நுண்நிதித் தொழிலையும் ஒழுங்குபடுத்துவது மற்றும் மேற்பார்வை செய்வது வலுவான சட்ட ஏற்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு புதியதொரு ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பணக்கடன் வழங்கும் தொழிலினதும், நுண்நிதித் தொழிலினதும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும், 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்குமான ஏற்பாடுகள் இதன்மூலம் செய்யப்பட்டுள்ளன. நுண்நிதி …
Continue Reading
உலகளாவிய காப்பீட்டுத்துறை தரப்படுத்தலில் பாரிய தாக்கம்; ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரிக்கை
-
Editor
-
March 20, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
அமெரிக்க, இஸ்ரேல் – ஈரான் மோதல் குறுகிய காலத்துக்குள் முடிவடைந்து, எண்ணெய் உற்பத்தி மற்றும் கப்பல் போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்படக்கூடிய பாரிய சேதம் தவிர்க்கப்பட்டால் உலகளாவிய காப்பீட்டுத்துறையின் தரப்படுத்தல் சார்ந்த தாக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கும் என சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான ‘ஃபிட்ச் ரேட்டிங்ஸ்’ சுட்டிக்காட்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடாத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள பின்னணியிலேயே ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. போர் சார்ந்த அபாயங்கள் பொதுவாகக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து …
Continue Reading
ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சம் தலையிடும்
-
Editor
-
March 19, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
– ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி வலியுறுத்தல் ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இத்துறையின் பிரதான ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இங்கு குறிப்பாக …
Continue Reading
ரேணுகா வீரக்கோன் இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகமாக நியமனம்
-
Editor
-
March 16, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
இலங்கையின் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு கட்டமைப்பான முதலீட்டுச் சபையின் (BOI) பணிப்பாளர் நாயகமாக ரேணுகா வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு முன்னதாக, ரேணுகா வீரக்கோன் சுமார் நான்கு ஆண்டுகளாக பதில் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் அவரது இந்த நிரந்தர நியமனமானது முதலீட்டுத் துறையில் அவருக்குள்ள பரந்த அனுபவம் மற்றும் நிறுவன ரீதியான அறிவை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. ரேணுகா வீரக்கோன் இலங்கை முதலீட்டுச் சபையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவராவார். அவர் பதில் பணிப்பாளர் நாயகமாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு …
Continue Reading
மாதத்திற்கு 50 மில்லியன்டொலர்இழக்கும்அபாயம்; தேயிலைஏற்றுமதியாளர்கள்சங்கம்
-
Editor
-
March 16, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த மோதல்கள் காரணமாக அந்தப் பகுதிக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாதத்திற்கு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இச்சங்கம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி குறைந்ததன் விளைவாக வாரத்திற்கு 10 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வருவாய் இழப்பு ஏற்கனவே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களின்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு …
Continue Reading
எரிபொருள், எரிவாயு விநியோகம் முற்றாகத் தடைப்படும் அபாயம் ; பேராசிரியர் வசந்த அத்துகோரள
உலகளாவிய போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால், எதிர்காலத்தில் இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் முற்றாகத் தடைப்படும் அபாயம் காணப்படுவதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள எச்சரிக்கை விடுத்துள்ளார். பெப்ரவரி மாத நடுப்பகுதியில் 60 டொலராகக் காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை, ஒரு மாத காலத்திற்குள் 100 டொலரை எட்டியுள்ளதாகவும், இது 58 சதவீத விலை உயர்வு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
Continue Reading
“பொருளாதார கண்காணிப்புக் குழு” ஜனாதிபதி தலைமையில் கூடியது
-
Editor
-
March 13, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் நியமிக்கப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு, நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்நாட்டு …
Continue Reading
உலகளாவிய பொருளாதார அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய நிலையில் நாடு; இலங்கை மத்திய வங்கி ஆளுநர்
-
Editor
-
March 10, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் பூகோள அரசியல் நெருக்கடிகள் மற்றும் அதிகரித்துவரும் எரிபொருள் விலைகள் உள்ளிட்ட உலகளாவிய பொருளாதார அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய, ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான நிலையில் நாடு இருப்பாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உத்தரவாதமளித்துள்ளார். ‘ப்ளும்பேர்க்’ சர்வதேச ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலின்போது மேற்கண்டவாறு உத்தரவாதமளித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க, 7 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நாணயக்கையிருப்பு உள்ளடங்கலாக போதிய நிதிக்கையிருப்பு இலங்கையிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். இது, தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துவரும் மோதல்களின் விளைவாக எரிபொருள் விநியோகச்சங்கிலியில் …
Continue Reading
எரிபொருள் விலை சூத்திரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும்; பொருளியலாளர் தலால் ரஃபி
-
Editor
-
March 10, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
மத்திய கிழக்கில் உருவாகியிருக்கும் போர்ச்சூழல் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் என பிரபல பொருளியலாளர் தலால் ரஃபி சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைய பூகோளப் பதற்றநிலைகளால் இலங்கையும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் நிலவும் பின்னணியில், குறிப்பாக எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் உருவாகியிருக்கும் போர்ச்சூழல் மற்றும் ஹோர்மூஸ் …
Continue Reading
மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை
இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டும் பிரதான துறையான தேயிலை கைத்தொழில் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் கடல் வழிப் போக்குவரத்துத் தடைகள் என்பன இத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளாதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் …
Continue Reading