சர்வதேசநாணயநிதியத்தின்முகாமைத்துவபணிப்பாளர் அரசாங்கத்திற்கு பாராட்டு
மக்கள் நம்பிக்கை கொள்ளும் அரசாங்கம் ஒன்று இலங்கையில் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. இலங்கைக்கு பல்வேறு இடங்களுக்கு சென்றிருந்த போது மக்கள், நாட்டுக்கு உதவி செய்யுங்கள் என்று தான் என்னிடம் கேட்டார்கள். அது அவர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியது என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்தார். தாய்லாந்து நாட்டில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதற்காக மக்கள் அரசாங்கத்தின் …
Continue Reading
அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளர்களுக்கு நலன்புரி நன்மைகள் சபையிடமிருந்து விசேட அறிவித்தல்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளர்களின் தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான விசேட கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தற்போது நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 23ஆம் பிரிவின்படி, நலன்புரி நன்மைகளைப் பெறுபவர்களின் பெயர்ப் பட்டியலை ஆண்டுதோறும் புதுப்பிப்பது கட்டாயமாகும் என்பதற்கமைய, 2022/2023 ஆம் ஆண்டுகளில் முதலாம் கட்டத்தின் கீழ் விண்ணப்பித்த, தற்போது நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் மற்றும் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் என அனைவரினதும் தகவல்கள் இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளன. இந்தச் …
Continue Reading
ஆசியஅபிவிருத்திவங்கிஅதிகாரிகளுடன் பிரதமர்ஹரிணிமுக்கியகலந்துரையாடல்
இலங்கையில் உயர்தரக் கல்வியின் தரம் மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு, கல்வித்துறையில் பணியாற்றுபவர்களின் தரம் மற்றும் வினைத்திறனை வலுப்படுத்துதல் மற்றும் கல்வித்துறையின் மேலாண்மைத் திட்டத்தை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகளுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது, கல்விக்கான மனிதவள மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர். கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் …
Continue Reading
செஸ் வரியை படிப்படியாக நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
இறக்குமதிப் பொருட்கள் மீதான ‘செஸ்’ வரியை படிப்படியாக நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய தொழில்துறைகளைப் பாதுகாத்தல் மற்றும் வருமானத்தை ஈட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக, செஸ் வரி உள்ளிட்ட சுங்க வரி அல்லாத பிற இறக்குமதி வரிகள் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, இடைநிலை மற்றும் உள்ளீட்டுப் பொருட்களுக்கான அதிக இறக்குமதி செலவு காரணமாக, ஏற்றுமதி சார்ந்த தொழில்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இது சர்வதேச சந்தையில் இலங்கைப் பொருட்களின் போட்டித்தன்மையைக் குறைப்பதோடு, ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்தியுள்ளது. எனவே, …
Continue Reading
நெல்கொள்வனவுக்காக 10,000 மில்லியன்ரூபாஒதுக்கீடு; பிரதமர்
அரசாங்கம் இம்முறை நெல் கொள்வனவுக்காக 10,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன் நெல்லுக்கான கொள்வனவு விலைகளையும் அதிகரித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 04-03-2026 அன்று பிரதமரிடமான கேள்வி வேளையின் போது சுசந்தகுமார நவரத்ன எம்பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு நெல் 120 ரூபா, சம்பா நெல் 130 ரூபா, கீரி சம்பா நெல் 140 ரூபா என்ற அடிப்படையிலேயே அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படுகிறது. நெல் கொள்வனவுகளை மேற்கொள்வதற்காக …
Continue Reading
மத்தியகிழக்கு போர்ச்சூழலால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து ஆராய்வு
மத்திய கிழக்கு பிராந்திய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்துத் துறைகளிலும் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து சவால்களை ஒன்றிணைந்து வெற்றிகொள்வோம் என்று அழைப்பு விடுத்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 04-03-2026 …
Continue Reading
இலங்கை ஜப்பான்பொருளாதாரஒத்துழைப்புஒப்பந்தம்கைச்சாத்து
-
Editor
-
February 18, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளை ஒரு புதிய திசைக்கு இட்டுச் செல்லும் வகையில், “இலங்கை – ஜப்பான் அரசுகளுக்கிடையிலான பொருளாதாரக் கொள்கை உரையாடல்” 17-02-2026 அன்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு முக்கிய மைல்கல்லாக, இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு இடையே பொருளாதாரக் கொள்கை உரையாடல் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலெந்திரராஜா மற்றும் வெளிவிவகார அமைச்சின் பதில் …
Continue Reading
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதியைச் சந்தித்தார்
-
Editor
-
February 17, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புகளுக்கான அர்ப்பணிப்பு மூலம் விரைவான அபிவிருத்தி மற்றும் நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான தனித்துவமான வாய்ப்பை இலங்கைக்கு வழங்குகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) தெரிவித்தார். மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். இலங்கையின் …
Continue Reading
நிலையான வளர்ச்சிக்கு சீர்திருத்தத்தை தொடருங்கள்; நாணயநிதியத்தின்முகாமைத்துவப்பணிப்பாளர்
-
Editor
-
February 17, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், சீர்திருத்தங்களைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடத்தில் வலியுறுத்தியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருடன் 17-02-2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டேன். இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் சர்வதேச நாணய நிதியம் அளித்த பங்களிப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், அந்த …
Continue Reading
ஜனாதிபதிக்கும் ஜப்பானிய உயர்மட்டக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பில் மீண்டும் திட்டங்களை ஆரம்பிக்க இணக்கம்
-
Editor
-
February 17, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
இலங்கை-ஜப்பான் பொருளாதார உறவுகளை புதிய பாதைக்கு எடுத்துச் செல்லும், முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை நிறுவுவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, ஜப்பான் உயர்மட்டக் குழுவினர் 17-02-2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். ஜப்பானிய பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் மட்சுவோ தகேஹிகோ, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமாட்டா , ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் ஃபுமிஹிகோ கோபயாஷி, ஜப்பான் அரசாங்கத்தினதும் அந்நாட்டின் தொழில்துறையையும் சேர்ந்த சிரேஷ்ட பிரதிநிதிகள் …
Continue Reading