மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து மத்திய வங்கி ஆளுநருடன் ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் ஆராய்வு
-
Editor
-
March 25, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலைவரம், பரந்துபட்ட மறுசீரமைப்புத் திட்டங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார். பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் ‘தித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா 3 நாட்கள் உத்தியோகபூர்வ …
Continue Reading
இலங்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவசியமான கூறுகளைப் புரிந்துகொள்ள இவ்விஜயம் உதவும்; ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்
-
Editor
-
March 25, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் ‘தித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 23-03-2026அன்று நாட்டை வந்தடைந்தார். அரசாங்கம், தனியார் துறையினர் மற்றும் உள்ளுர் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவசியமான முக்கிய கூறுகளை நன்கு புரிந்துகொள்வதற்கும் இந்தப் பயணம் சிறந்த வாய்ப்பாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி நேற்றைய தினம் கொழும்பு …
Continue Reading
பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் அதிகரிப்பு
-
Editor
-
March 25, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக 23-03-2026 முதல் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள்சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய பாண் ஒன்றின் புதிய விலை 130 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், ஏனைய சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால் உயர்வடையும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய சூழல் காரணமாக பேக்கரி கைத்தொழில் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு உற்பத்தியாளர்களும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக கடந்த காலங்களில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரித்திருந்தோம். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் இரண்டு கட்டங்களாக லீட்டருக்கு 100 ரூபாவுக்கும் அதிகமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. சகல பேக்கரிகளிலும் டீசலில் இயங்கும் மின அடுப்புகளே பயன்படுத்துகின்றன. இந்நிலையில் டீசலைப் பெற்றுக்கொள்வதும் பெரும் சிரமமாக உள்ளது. அதேபோன்று, உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் வாகனங்களுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன. எரிபொருள் விலை உயர்வால் இறக்குமதி செய்யப்படும் ஏனைய மூலப்பொருட்களின் விலையும் சடுதியாக உயர்ந்துள்ளன. முட்டையின் விலை 39 ரூபா வரை அதிகரித்துள்ளது. பேக்கரி உற்பத்திக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுபவையே.. அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. கோதுமை விலை அதிகரிக்காத போதிலும், ஏனைய அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதால் இந்தத் தொழிலைக் கொண்டு நடத்த விலை அதிகரிப்பு அவசியம் என்றார்.
Continue Reading
இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகள் அதிகரிக்கப்படாது; வர்த்தக அமைச்சு
-
Editor
-
March 25, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகள் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் 23-03-2026 அன்று அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. தற்போதைய போர்ச் சூழல் காரணமாக விநியோக வலையமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தொடர்ச்சியான விநியோகத்தைப் பேணுதல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. எரிபொருள் …
Continue Reading
கைத்தொழில் துறையினருக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு;பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க
நாட்டின் பாரிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் துறையினருக்கு தேவையான எரிபொருளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் விசேட எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வழங்கப்பட்டு வரும் எரிபொருள் அளவு உற்பத்தி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு போதுமானதாக இல்லை என கைத்தொழில் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 2,300 கைத்தொழில் …
Continue Reading
ஆசியஅபிவிருத்திவங்கியின்தலைவர்ஜனாதிபதிசந்திப்பு
-
Editor
-
March 24, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பில் 24-03-2026அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டுக்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் டொலர் நிதியை, 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு உடனடியாக வழங்குவதற்கும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இது இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகக் கருதுகிறேன். அதேபோல், …
Continue Reading
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டு இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட 380 மில்லியன் டொலர் நிதி, 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பு
-
Editor
-
March 24, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் …
Continue Reading
பேருந்து கட்டணம் 12.9 சதவீதத்தால் அதிகரிப்பு
-
Editor
-
March 24, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பேரூந்து கட்டணம் 12.9 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய ஆரம்ப கட்டணம் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.புதிய கட்டண திருத்தம் 23-03-2026 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 27 ரூபாவாக காணப்பட்ட ஆரம்ப கட்டணம் இனி 30 ரூபாவாக அறவிடப்படும். தனியார் பேருந்துகள் இன்று வழமைபோல் சேவையில் ஈடுபடும் என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைய பேருந்து கட்டணத்தை 15 அதிகரிக்குமாறு வலியுறுத்தி தனியார் பேருந்து சாரதிகள் சேவையில் இருந்து விலகியதால் பொதுபயணிகள் கடும் …
Continue Reading
திருகோணமலை எண்ணெய் குதங்களின் அபிவிருத்திப்பணிகளை விரைவுபடுத்த எதிர்பார்ப்பு; வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்
-
Editor
-
March 24, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
திருகோணமலை எண்ணெய் குதங்களின் அபிவிருத்திப்பணிகளை விரைவுபடுத்துவதன் மூலம் இலங்கையின் தற்போதைய வலுசக்தி நெருக்கடிக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வு காண்பதற்கு எதிர்பார்ப்பதாகவும், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவுடன் இப்பணிகள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருப்பதாக ‘த இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் பாரிய எரிபொருள் களஞ்சியப்படுத்தல் வசதியை கட்டமைப்பதற்கு ஏதுவான இத்திட்டம் எரிபொருள் விநியோக சவால்களைக் கையாள்வதற்கான ஒரு நிரந்தர தீர்வாக நோக்கப்படுவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். ‘தற்காலிக தீர்வுகள் …
Continue Reading
உருவாகிவரும் உலகளாவிய நெருக்கடியால் இலங்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதற்கு முகங்கொடுக்கும் வகையில் எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் அவதானம்
-
Editor
-
March 20, 2026
-
பொருளாதாரம்
-
பொருளாதாரம்
-
0 Comments
உருவாகிவரும் உலகளாவிய நெருக்கடி நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மற்றும் அதற்கு முகங்கொடுக்கும் விதத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ. த சில்வா அவர்களின் தலைமையில் 17.03.2026ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன …
Continue Reading