தடையின்றி உர விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரத்தினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அரசாங்கத்தின் தலையீட்டுடன் புதிய ஒதுக்கீட்டு முறை (கியூ.ஆர்) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சந்தையில் நிலவும் உர விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்குத் தேவையான உரத்தினை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை சிறுபோக நெற்செய்கைக்கு மொத்தம் 80,000 தொன் யூரியா உரம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை மேலதிக யூரியா உர இருப்புகளை இறக்குமதி செய்வதற்கு …

Continue Reading

மத்திய கிழக்கு போர் நீடித்தால் இலங்கைக்கு கடும் பாதிப்பு; பேராசிரியர் டியூடர் வீரசிங்க

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்தால், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்புடைய நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு தேவையையோ அல்லது விருப்பத்தையோ வெளிப்படுத்தவில்லை என்றும், இதன் காரணமாக ஆசிய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினால் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டு தற்போது 36 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போதைய மற்றும் எதிர்கால நிலைமைகள் குறித்துக் …

Continue Reading

மிக வலுவான நிலையில் இலங்கையின் செயற்பாடுகள்; சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் பாராட்டு

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் கீழ் இலங்கையின் செயற்பாடுகள் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், நிலையான மறுசீரமைப்புக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான ஐந்தாம் மற்றும் ஆறாம் கட்ட மீளாய்வுகளை மேற்கொள்வதற்காக நாட்டுக்கு வருகைதந்திருக்கும் எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் 02-04-2026 அன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோருடன் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். இச்சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி சார்ந்த …

Continue Reading

அழுத்தங்களைஎதிர்கொள்வதில் மிகப் பலவீனமான நிலையில் இலங்கை; பொருளியலாளர் தலால் ரஃபி

மத்திய கிழக்கு மோதல்களின் விளைவாக தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியிலிருந்து இலங்கை குறைந்த கையிருப்புடன் மீண்டாலும், எதிர்வருங்காலங்களில் ஏற்படக்கூடிய உள்ளக மற்றும் வெளியக அழுத்தங்களை எதிர்கொள்வதில் நாடு மிகப் பலவீனமாகவே இருக்கும் என பிரபல பொருளியலாளர் தலால் ரஃபி கரிசனை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்துவரும் மோதல்களின் விளைவாக இலங்கையும் பல்வேறு வழிகளில் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்திருக்கும் பின்னணியில், இம்மோதல்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார நிலைவரம் மற்றும் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் தலால் ரஃபி, …

Continue Reading

போர் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள்  குறித்துநாணயநிதியப்பிரதிநிதிகளிடம்ஜனாதிபதிஎடுத்துரைப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால்  ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களுக்கு மத்தியில்இ எரிபொருள் விலை மற்றும் வலுசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியப்பிரதிநிதிகள் குழுவினரிடம் எடுத்துரைத்தார்.  இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் 02-04-2026 அன்று   ஜனாதிபதி அலுவலகத்தில் …

Continue Reading

எரிபொருள் கொடுப்பனவு கணக்கீட்டில் புதிய நடைமுடை; நிதி அமைச்சு அறிவிப்பு

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகள், இனிவரும் காலங்களில் மார்ச் 1 ஆம் திகதியன்று நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பலத்த வலுசக்தி நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், அரசாங்கத்தின் செலவீனங்களை முகாமை செய்வதற்காக எடுக்கப்பட்ட பரந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே அமைச்சரவையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் அளவுகளுடன் தொடர்புடைய ஏனைய கொடுப்பனவுகளுக்கும் இந்த உத்தரவு …

Continue Reading

தித்வாவின் தாக்கங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு; ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்

‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை பின்னர் இன்னமும் சீரமைக்கப்படாத சேதமடைந்த வீதிகள், குடிநீர் மற்றும் மின்விநியோகத்தடை போன்ற இடையூறுகள் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்து பாதித்து வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா கவலை வெளியிட்டுள்ளார். பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் ‘தித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா, கேகாலை …

Continue Reading

மத்திய கிழக்கு நாடுகளில் தேயிலையின் கேள்வி அதிகரிப்பு; இலங்கை தேயிலை சபை

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கைத் தேயிலைக்கு பாரிய கேள்வி நிலவுவதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக இலங்கைத் தேயிலை சபையின் தலைவர் ராஜ் ஒபேசேகர கருத்து தெரிவிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் மக்கள் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க முற்படுவதே இந்த அதிகரிப்புக்கு காரணம் ஆகும். மோதல்கள் ஆரம்பமான முதல் வாரத்தில் தேயிலை ஏலத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்ட போதிலும், தற்போது விலையும் தேயிலைக்கான தேவையும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. …

Continue Reading

எதிர்வரும் காலப்பகுதிகளில் எரிபொருள் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்; அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம்

மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துள்ள மோதல் நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் காலப்பகுதிகளில் எரிபொருள் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துவது அரச மற்றும் தனியார் துறைகளின் பொறுப்பாகும். அதற்கமைய, அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டல்களை விரைவாக செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி வலியுறுத்தியுள்ளார். விசேட வழிகாட்டல்கள் குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அமைச்சின் செயலாளர்கள்,மாகாண பிரதான செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் …

Continue Reading

இலங்கையின்அடுத்தகட்டவளர்ச்சிதனியார்முதலீடுகளில்தங்கியுள்ளது; ஆசியஅபிவிருத்திவங்கியின்தலைவர்

தற்போது இலங்கை அதன் கவனத்தை உற்பத்தித்திறன், ஏற்றுமதி மற்றும் தனியார் முதலீடு என்பவற்றின் ஊடாக ஊக்குவிக்கப்படும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்த்தி வருகிறது. இந்த அடுத்தகட்ட வளர்ச்சி பெருமளவுக்கு தனியார் முதலீடுகளிலேயே தங்கியுள்ளது. இதுவே இலங்கையின் எதிர்காலத்துக்கான திறவுகோலாகும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் ‘தித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா 3 …

Continue Reading