நாட்டின் எரிபொருள் இறக்குமதி செலவு கணிசமாக உயரக்கூடும்; இலங்கை மத்திய வங்கி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற நிலை காரணமாக, எதிர்வரும் காலத்தில் நாட்டின் எரிபொருள் செலவு உயர்ந்த மட்டத்திலேயே காணப்படுமென இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. எரிபொருள் இறக்குமதிச் செலவானது இலங்கையின் மொத்த இறக்குமதிச் செலவில் பெரும் பங்கைக் கொண்டுள்ளதுடன், கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக மொத்த இறக்குமதியில் சுமார் 20சதவீதம் அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2025 ஆம் …

Continue Reading

இலங்கை மின்சார சபைக்கு  38.7 பில்லியன் ரூபா நட்டம்

மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட 2025 வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை மின்சார சபையின் மொத்த நட்டம் 38.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரி மாதத்திலும் மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக 20 சதவீதத்தால்   மேலும் குறைக்கப்பட்டன.  2025 முதல் காலாண்டில் நிலவிய வறட்சியான …

Continue Reading

அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானங்களே எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்கும்; கலாநிதி நிஷான் டி மெல்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்று தசாப்தகாலமாக நிலையற்றதாகக் காணப்படுவதற்கு நிர்வாக சீர்கேடுகளே பிரதான காரணமாகும். எனவே நாடு முன்னேறவேண்டுமாயின், அரசாங்கம் குறுங்கால நெருக்கடி முகாமைத்துவத்திலிருந்து விலகி, நீண்டகாலத் திட்டமிடலில் கவனம் செலுத்தவேண்டும். தற்போதைய தீர்க்கமான கட்டத்தில் மேற்கொள்ளப்படும் சரியான தீர்மானங்களே எதிர்வரும் தசாப்தத்தில் நாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் என ‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.   தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு மீட்சி சார்ந்த கதையாடல்களுக்கு அப்பால், ஒரு முறையான அபிவிருத்தித் திட்டமிடல் அவசியம் …

Continue Reading

இலங்கையில் வரி வருமானம் 17.7 வீதம் அதிகரிப்பு; உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 606,002 மில்லியன் ரூபா (606 பில்லியன்) வரி வருமானத்தை ஈட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 17.7 சதவீத வளர்ச்சியாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம்  குறிப்பிட்டுள்ளது.  உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, 2026 ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையான காலப்பகுதியிலேயே இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. பிரதான வரி வகைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற அதிகப்படியான பங்களிப்பே இந்த வளர்ச்சிக்கு …

Continue Reading

நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான 3 சட்டமூலங்களையும் வாபஸ் பெறுங்கள்; மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

நிதி கொடுக்கல் வாங்கல்கள் சார்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மூன்று சட்டமூலங்களையும் அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன் நிறைவேற்றதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் வகையில் இச்சட்டமூலங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை வாய்ந்த பரந்துபட்ட கலந்தாலோசனைகளை முன்னெடுக்கவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளது. இதுகுறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அரசாங்கத்தினால் கடந்த வியாழக்கிழமை (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்) சட்டமூலம், 2006 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை …

Continue Reading

மட்டக்களப்பில்இரண்டுஇலட்சம்குடும்பங்களுக்குஉதவிதேவை

மட்டக்களப்பு மாவட்டத்தில்  40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். குறைந்தது இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு இந்த உதவி தேவைப்படுகின்றது. ஆனால் வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும வழங்கப்படுகின்றது. ஏனையோரின் நிலை என்ன? அவர்கள் முன்வைத்த மேன்முறையீடுகளுக்கு என்ன நடந்தது? என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்  கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் 10-04-2026 நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை  27 / 2 இன் கீழ்  கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் …

Continue Reading

பெருந்தோட்டத்துறைக்கு கியூ.ஆர் உரவிநியோகம் வெற்றியளித்துள்ளது

இலங்கையின் பெருந்தோட்டத்துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கியூ.ஆர் குறியீட்டு முறைமை ஊடான உர விநியோகம் பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கியூ.ஆர் குறியீட்டு முறையின் கீழ் உரங்களைப் பெறுவதற்காக 226,511 விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 31 வரை சிறு மற்றும் நடுத்தர அளவிலான தேயிலை விவசாயிகள் 187,759 பேருக்கு 21,117.7 மெட்ரிக் டொன் மானிய உரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாங்கம் மூலம் 50 …

Continue Reading

அரசாங்கம்புமுன்கூட்டியேதயாராகவேண்டும்; பொருளாதாரநிபுணர்தனநாத்பெர்னாண்டோ

மத்திய கிழக்கு போரானது தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது மேலும் தீவிரமடைந்து அடுத்த 3 மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு முகம் கொடுக்கும் வகையில், அரசாங்கம் இப்போதிருந்தே புத்திசாலித்தனமாக முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் 06-04-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நிலவும் மத்திய கிழக்கு போர்ச் …

Continue Reading

டிஜிட்டல் சேவைகளுக்கான 18 வீத வற் வரி ஜூலை வரை மீண்டும் ஒத்திவைப்பு

வெளிநாட்டு நிறுவனங்களால் இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத வற் வரியை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. வற் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உத்தியோகபூர்வ திருத்தங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எழுப்பியுள்ள கரிசனைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மின்-வணிகம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், இணையப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் மற்றும் நிதிநுட்பம் போன்ற சேவைகள் இந்த வரி வலைக்குள் …

Continue Reading

‘’தேசியகியூ.ஆர்கொடுப்பனவுஊக்குவிப்புத்திட்டம்” இன்றுஆரம்பம்

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “தேசிய கியூ.ஆர்   கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர  குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத்  தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபா வரையிலான அனைத்து ‘லங்கா கியூ.ஆர்.’ கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணத்தை முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் …

Continue Reading