40 நாடுகளுக்கு இலவச விசா; இலங்கை அறிவிப்பு
இலங்கையின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் 25-05-2026அன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கைக்கு அமைய கடந்த 2026 மார்ச் 30ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதி மற்றும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா , பஹ்ரைன், பெலாரஸ் ,பெல்ஜியம் ,கனடா ,சீனா, செக் குடியரசு, டென்மார்க் ,பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ,இந்தியா …
Continue Reading
இறக்குமதிசெய்யப்படும்வாகனங்களுக்குமூன்றுமாதங்களுக்கு 50 சதவீதமேலதிககட்டணம்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை மோட்டார் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் (Customs Import Duty) மீது தற்காலிகமாக 50 சதவீதம் மேலதிகக் கட்டணத்தை (Surcharge) விதிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள 2026.05.15 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, இப்புதிய வரி விதிப்பு முறை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், …
Continue Reading
வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது; அரசாங்கம்
சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகளால் டொலரின் பெறுமதிக்கு ஏற்படும் கூடுதல் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குத் தேவையான டொலர் இருப்புகளைப் பாதுகாப்பதற்காகவுமே தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதிக்கான தீர்வைக் கட்டணம் தற்காலிகமாக மூன்று மாத காலத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாழ்வாதாரத் தொழில் வாகனங்களுக்கு இந்த வரி அதிகரிப்பு எவ்வகையிலும் பொருந்தாது என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் …
Continue Reading
டிஜிட்டல்பொருளாதாரஇலக்குகளைஅடைவதற்குஆதரவு; நாதியாசயீத்
இலங்கையின் பரந்த டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில் எங்களது வங்கிப் பங்காளர்களுடன் இணைந்து இப்பயணத்தை தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம் என PayPal நிறுவனத்தின் சர்வதேச எல்லைகடந்த வர்த்தகத்திற்கான சிரேஷ்ட துணைத் தலைவரும், ஆசிய பசுபிக் பிராந்திய பொது முகாமையாளருமான நாதியா சயீத் தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் paypal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்தும் நிகழ்வு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. அங்கு விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் …
Continue Reading
இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பொறுப்பான பங்கினை வகிக்க மிகுந்த ஆர்வமாகவுள்ளோம்; நாத் பரமேஸ்வரன்
இணைக்கப்பட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். இது கடந்த சில மாதங்களாக அனைத்துப் பங்குதாரர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட ஒரு உண்மையான கூட்டாண்மையின் விளைவாகும். paypal நிறுவனத்தின் தரப்பிலிருந்து பார்க்கும்போது, இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்லவும், இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து, ஒரு பொறுப்பான பங்கினை வகிக்கவும் நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம் paypal நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான நிறுவன விவகார பணிப்பாளர் நாத் பரமேஸ்வரன் தெரிவித்தார். …
Continue Reading
பிரதமர் ஹரினி தலைமையில் ‘PayPal’ சேவை உத்தியோகபூர்வ அறிவிப்பு
டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதுவரை காலமும் இலங்கையர்களின் PayPal கணக்குகள் ‘பணம் அனுப்புவதற்கு மாத்திரம்’ வரையறுக்கப்பட்டிருந்ததுடன், இதன் மூலம் பயனாளிகள் வெளிநாடுகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்ய முடிந்த போதிலும், சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. இந்த வரையறை காரணமாக, இலங்கையின் சுயாதீன தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகங்கள் பெரும் தடைகளை …
Continue Reading
வியட்நாம் இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்
(நமது நிருபர்) வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் ஆகியோர் முன்னிலையில் 08-05-2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வியட்நாம் – இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுற்றுலாத் துறை, பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பு, மதம், சிவில், வர்த்தகம், போக்குவரத்து …
Continue Reading
இலங்கை – வியட்நாம் இடையில் வர்த்தக, முதலீடு சுற்றுலா ஒத்துழைப்பு மன்றம்
இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை – வியட்நாம் வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு மன்றம்’ 08-05-2026 அன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. வியட்நாம் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மன்றம், வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாமின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு …
Continue Reading
வன்முறைமற்றும்துன்புறுத்தல்சமவாயத்தைஏற்றுக்கொண்டதுஇலங்கை
2019 ஆம் ஆண்டு 190 ஆம் இலக்க வன்முறை மற்றும் துன்புறுத்தல் சமவாயத்தை ஏற்றுக்கொள்வதற்கான ஆவணம் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தசநாயக்கவினால் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எஃப்.ஹுங்போவிடம் கடந்த புதன்கிழமை (16) கையளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்கு கருத்துரைத்த நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தசநாயக்க, ‘வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பது தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190 ஆம் இலக்க சமவாயத்தை இலங்கை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ எனத் தெரிவித்தார். ‘பாலின …
Continue Reading
இலங்கையில் இரு அபிவிருத்தித் திட்டங்களுக்கென 2.6 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியது ஜப்பான்
இலங்கையில் நலிவடைந்த மற்றும் இலகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் சமூகங்களின் காலநிலைசார் மீண்டெழும் திறனை ஊக்குவிப்பதற்கும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்குமான இரண்டு புதிய திட்டங்களை அறிவித்திருக்கும் ஜப்பானிய அரசாங்கம், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கென அதன் மேலதிக வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக 2.6 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தப் புதிய திட்டங்கள், இயற்கை அனர்த்தங்களிலிருந்து நிலையான மீட்சி மற்றும் நாடளாவிய ரீதியில் சகலரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி என்பவற்றுக்குக் கணிசமான பங்களிப்பை …
Continue Reading