உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் அமைச்சர் நளிந்த சந்திப்பு
- Editor
- May 25, 2025
- அரசியல், தமிழ் Header
- அரசியல்
- 0 Comments
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 78ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை சந்தித்தார்.
மேற்படி சந்திப்பில் நாட்டின் சுகாதாரத் துறையின் தற்போதைய செயல்திறன் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாட்டில் ஆயிரம் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை நிறுவுதல், சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்கு உறுதியளித்த சர்வதேச அமைப்புகளுடன் நன்கொடையாளர்களையும் ஒன்றிணைத்தல் சுகாதார சேவையை மேம்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து பணியாற்றுதல் சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலையீட்டுடன் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல் ஆகியன தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும்இ சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை 2025 அக்டோபரில் கொழும்பில் நடைபெற உள்ள தெற்காசிய பிராந்திய மாநாட்டில் பங்கேற்கமாறும் இச்சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.
இதேவேளை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி ஹிமாலி அருணதிலக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நிஷாந்தினி விக்டர் மற்றும் அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

