சகல உறுப்பினர்களின் உரிமைகளையும் பாதுகாப்பேன்; புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன
- Editor
- December 18, 2024
- அரசியல், தமிழ் Header
- அரசியல்
- 0 Comments
மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதுகாப்பேன் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டார்.
பாராளுமன்ற அமர்வு 17-12-2024 அன்று பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளை அடுத்து, புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதற்கு முன்னர் அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பி இருந்த கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர சபைக்கு வாசித்தார்.
அதனைத்தொடர்ந்து சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர், வெறிடமாகியுள்ள சபாநாயகர் பதவக்கு சபாநாயகர் ஒருவரை சபையில் இருந்து ஒருவரை தெரிவுசெய்யுமாறு தெரிவித்தார். அதற்கமைய, பிரதமர் ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவின் பெயரை முன்மொழிந்தார். அதனைத்தொடர்ந்து சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்.
அதனைத்தொடர்ந்து வேறு பெயர்கள் சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்படாததால், ஜகத் விக்ரமரத்ன சபாநாயகராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதாக பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
அதனையடுத்து புதிய சபாநாயகரை முன்மொழிந்து, வழிமொழிந்த பிரதமர் மற்றும் சபை முதல்வரினால் சம்பிரதாயபூர்வமாக புதிய சபாநாயகர் தனது ஆசனத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இதன்போது சபைக்கு விசேட அறிவிப்பை விடுத்த சபாநாயகர்,
மேன்மை பொருந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகராக என்னை தெரிவு செய்தமைக்கும், வாழ்த்து தெரிவித்தமைக்கும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு கடந்த காலங்களை காட்டிலும் இந்த பாராளுமன்றத்துக்கு அதீத பொறுப்பு காணப்படுகிறது.
அரசியலமைப்பின் ஏற்பாடுகள், பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் முன்னாள் சபாநாயகர்களின் எடுத்துக்காட்டான செயற்பாடுகளுக்கு அமைய பக்கச்சார்பற்ற வகையில் நடுநிலையாக , செயற்படுவதுடன், சவால்மிக்க பொறுப்புக்கள் சபாநாயகர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவேன்.
சட்டவாக்கத்துறையின் கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கிறேன். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதுகாப்பேன் என்று வாக்குறுதியளிக்கிறேன்.
பத்தாவது பாராளுமன்றம் இனம், மதம் என்ற வரையறைகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் சகவாழ்வு மற்றும் மக்களின் அபிலாசைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும். இதற்கு சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்றார்.

