ආණ්ඩුවට පුළුවන් පැරණි ක්රමයට පළාත් සභා මැතිවරණය පත්වන්න කියලා යෝජනාවක් පාර්ලිමේන්තුවට ගේන්න – දයාසිරි ජයසේකර
මේ ආණ්ඩුව නැවත ජනමතය උරගා බලන්න බයයි. පසුගිය පළාත් පාලන මැතිවරණයෙන් ඡන්ද ලක්ෂ 23ක් අඩු වුණා. අපි අමතක නොකළ යුතුයි අනුර දිසානායක ජනාධිපතිවරණයේ දී 50%ක ඡන්ද ප්රතිශයක් ලබා ගත්තේ නැහැ. ඔහු පළමු වටයේදී ලබා ගත්තේ 42.31%ක් පමණයි. ඒක තමයි ලංකාවේ ජනාධිපතිවරයෙක් ලබා ගත්ත අඩුම ඡන්ද සංඛ්යාව. දෙවැනි මනාපය ගණන් කළත් ඔහුට 50%ක සීමාව ඉක්මවා යාමට නොහැකි වුණා. ඔහු ජනාධිපති වීම …
Continue Reading
பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரிப்பு; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
-
Editor
-
June 12, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் ‘சிறுவர் உழைப்பிற்கு எதிரான சர்வதேச தினத்தை’ முன்னிட்டு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் விடுத்துள்ள விசேட செய்தியிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இம்முறை இத்தினமானது ‘சிறுவர் உழைப்பற்ற நாடு, பிள்ளைகளுக்கு சிறந்த நாளை’ என்ற கருப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தேசிய சிறுவர் பாதுகாப்பு …
Continue Reading
பயங்கரவாத தடுப்பு சட்டத்தைவிரைவில் இரத்து செய்ய வேண்டும்; சமூக நீதிக்கான தேசிய இயக்கம்
பயங்கரவாத தடைச்சட்டத்தினை அமுல்படுத்துவதன் ஊடாக நாகரீக உலகத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாரில்லை என்ற செய்தியை இலங்கை பறைசாற்றிக்கொண்டிருக்கின்ற நிலையில் அதனை இரத்துச் செய்ய வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மென்மேலும் அமுல்படுத்துவதின் ஊடாக, இலங்கை நாகரீக உலகத்துடன் இணைந்து செயல்படுவதற்கு தயார் இல்லை எனும் செய்தியை சர்வதேசத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ள …
Continue Reading
இலங்கையின் குளிர்பதனச் சங்கிலி திறனை மேம்படுத்த ஜப்பான் உதவி
-
Editor
-
June 12, 2026
-
சமகாலம்
-
சமகாலம்
-
0 Comments
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா அவர்கள், மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோர் முன்னிலையில், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் முகமது நவ்ராஸ் நசாரிடம் ஆறு குளிரூட்டப்பட்ட டிரக் வண்டிகளை ஒப்படைத்தார். இந்த ஒப்படைப்பு, ஜப்பான் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் 200 மில்லியன் ஜப்பானிய யென் (ஏறத்தாழ 1.25 மில்லியன் அமெரிக்க டாலர்) மொத்த மதிப்புள்ள மானிய உதவித் திட்டமான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு …
Continue Reading
இலங்கை – ஜப்பான் நீடித்த நட்புறவின் அடையாளம் புதிய சசகாவா கலாசார நிலையம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய
புதிய சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையமானது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நிலவி வரும் நீடித்த நட்புறவின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு 07, வார்ட் பிளேஸ், இலக்கம் 85 என்ற முகவரியில் சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலைய அறக்கட்டளையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழா 11-06-2026 அன்று நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றம், …
Continue Reading
இந்தியஉயர்ஸ்தானிகர்சந்தோஷ்ஜாவைசந்தித்தபெண்பாராளுமன்றஉறுப்பினர்கள்சங்கம்
இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். கடந்த மே மாதத்தில் இக்குழுவினர் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பெற்றுக் கொண்ட அனுபவங்கள் மற்றும் கற்றறிந்த விடயங்களை உயர்ஸ்தானிகருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பின் போது பாலின வரவுசெலவுத் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மேம்பாடு, பெண்களின் தலைமையிலான வளர்ச்சித் திட்டங்கள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சமூக ஈடுபாடு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த …
Continue Reading
அமெரிக்க பிரதிநிதிகள் குழு பாராளுமன்றில் சந்திப்பு
பாராளுமன்ற மேற்பார்வை மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்ட கொள்கை வகுத்தலை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஓரங்கமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றக்குழுக்களுக்கு ஒப்பீட்டளவிலான பகுப்பாய்வு ஆதரவை வழங்குவதற்காக ஒரு பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது குறித்து இலங்கைப் பாராளுமன்றம் ஆராய்ந்துவருவதாகவும், இதுகுறித்து அமெரிக்கப் பாராளுமன்றத்திலிருந்து பெறப்பட்ட அனுபவங்களை அந்நாட்டு பாராளுமன்ற வரவு, செலவுத்திட்ட அலுவலகத்தின் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனநாயகப் பங்காண்மை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் 8 – 12 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ளனர். …
Continue Reading
பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக தொடர்ச்சியாக துஷ்பிரயோகம்; ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தமிழரசுக்கட்சி கடிதம்
-
Editor
-
June 12, 2026
-
அரசியல்
-
அரசியல்
-
0 Comments
பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளபோதும் அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகங்கள் தொடர்வதாக சுட்டிக்காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சாள்லஸ் வைட்லிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் ஊடாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனினால் ‘பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம்’ எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த சில வருடங்களாக பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் எனப் …
Continue Reading
ஐ.நா. அமைதிப்படைமற்றும் இராணுவத்தின்தளவாடப்பொருட்கள்கொழும்பைவந்தடைந்தன
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக, இந்திய இராணுவத்திடமிருந்து பெறப்பட்ட விசேட இராணுவத் தளவாடப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சார்தா கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள இப்பொருட்கள், எதிர்வரும் 16ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ நிகழ்வின் போது இலங்கை இராணுவத்திடம் முறைப்படி கையளிக்கப்படவுள்ளன. இந்தியக் கடற்படையின் சுகன்யா ரகத்தைச் சேர்ந்த, கரையோர ரோந்துப் பணிகளுக்கான சார்தா போர்க்கப்பல், இந்த உத்தியோகபூர்வ தளவாட இடமாற்றப் பணிக்காகவும், வழமையான செயல்பாட்டுப் …
Continue Reading
பயங்கரவாதத் தடைச்சட்டம், தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் சாணக்கியன் எம்.பி.பேச்சு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரச் சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சாள்ஸ் வைட்லியை பிரஸ்ஸஸில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை மற்றும் அதன் கீழ் தமிழ் சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் சாணக்கியன் தனது கடுமையான கவலையை வெளியிட்டதுடன், குறித்த கைதானது இலங்கையின் …
Continue Reading