රගලයෙන් පස්සේ ජනතාවගේ ආකල්ප වෙනස් වෙලා තිබෙනවා – සමන්මලී ගුණසිංහ

සමන්මලී ගුණසිංහ, පාර්ලිමේන්තු මන්ත්‍රී, ජාතික ජන බලවේගයය මැදපෙරදිග කලාපයේ ඇති වෙලා තිබෙන අර්බුදයට මුහුණ දීමට ආණ්ඩුවට තිබෙන සූදානම සහ සැලසුම් ගැන පැහැදිලි කිරීමක් කරන්න පුළුවන් ද ? මැදපෙරදිග කලාපයේ ඇති වෙලා තිබෙන යුධ තත්ත්වය හේතුවෙන් අපට සිදුවිය හැකි බලපෑම සහ එහිදී උද්ගත විය හැකි අභියෝගවලට මුහුණ දෙන ආකාරය සම්බන්ධයෙන් ජනාධිපතිතුමා පසුගිය 03 වැනිදා පාර්ලිමේන්තුවට විශේෂ ප්‍රකාශයක් කළා. ඒ වගේම යුදමය …

Continue Reading

பாராளுமன்றம் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை கூடும்

பாராளுமன்றம் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இந்தக் காலப்பகுதிக்கான பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய தீர்மானம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 2026.03.06 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய 2026 மார்ச் 17ம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற …

Continue Reading

පාර්ලිමේන්තුව මාර්තු 17 සිට 20 දක්වා රැස්වෙයි

පාර්ලිමේන්තුව මාර්තු 17 සිට 20 දක්වා රැස්වීම‍ට නියමිත බව පාර්ලිමේන්තුවේ මහ ලේකම් කුෂානි රෝහණදීර මහත්මිය පැවසුවාය. මීට අදාළ  පාර්ලිමේන්තු කටයුතු 2026.03.06 වැනිදා කථානායක වෛද්‍ය ජගත් වික්‍රමරත්න මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවති පාර්ලිමේන්තු කටයුතු පිළිබඳ කාරක සභා රැස්වීමේ දී තීරණය වී තිබේ. ඒ අනුව2026 මාර්තු 17 වැනි අඟහරුවාදා පෙ. ව 9.30 – පෙ.ව. 10.00 කාලය ස්ථාවර නියෝග 22හි 1 සිට 6 දක්වා සඳහන් …

Continue Reading

“ආර්ථික ආවේක්ෂණ කමිටුව” රැස් වෙයි

බාහිර බලපෑම් හමුවේ ශ්‍රී ලංකාවේ ආර්ථික ස්ථාවරත්වය සුරක්ෂිත කිරීමට සහ පුරවැසියන්ගේ සුභසාධනය ආරක්ෂා කිරීමට ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ යෝජනාවකට අනුව පිහිටුවන ලද ආර්ථික ආවේක්ෂණ කමිටුව ඊයේ (10) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී රැස් විය. මුදල් සහ ක්‍රමසම්පාදන නියෝජ්‍ය අමාත්‍ය සහ කම්කරු අමාත්‍ය ආචාර්ය අනිල් ජයන්ත ප්‍රනාන්දු මහතාගේ සභාපතිත්වයෙන් යුත් මෙම කමිටුවේ ලේකම් සහ කැඳවුම්කරු ලෙස ජනාධිපති ජ්‍යෙෂ්ඨ අතිරේක ලේකම් (මූල්‍ය හා …

Continue Reading

விதைப்புரை அறிக்கைக்கு அமைய மாகாண சபைத் தேர்தல்; அமைச்சர்சந்தனஅபேரத்ன

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டு, பாராளுமன்ற விசேட குழு விதப்புரை அறிக்கை சமர்ப்பித்தவுடன்,  அந்த அறிக்கைக்கு அமைய மாகாணசபைத் தேர்தல் விரைவாக நடத்தப்படும்  என்று பொதுநிர்வாகம் , மாகாணசபைகள் மற்றும்  உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். கண்டியில் 09-03-2026அன்று  நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது,கடந்த அரசாங்கங்கள் தேர்தல் முறைமையில் ஏற்படுத்திய சிக்கலால் மாகாணசபைத் தேர்தலை …

Continue Reading

ஐக்கிய அரபு அமீரக வாழ் இலங்கையர்களின் விபரங்களைச் சேகரிக்கும் விசேட திட்டம் இடைநிறுத்தம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இலங்கை பிரஜைகளுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதற்கும் அவர்களுக்குத் தேவையான நலன்புரிச் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் அவசியமான தகவல்களைச் சேகரிக்கும் விசேட செயற்திட்டமொன்றை அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக 03-09-2026  அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் நிமித்தமும் ஏனைய தேவைகளுக்காகவும் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பான துல்லியமான தரவுகளைத் திரட்டுவதற்கு தூதரகம் தற்போது முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதன் மூலம் அமீரகத்தில் வாழும் இலங்கையர்களுடன் மிகவும் நெருக்கமான மற்றும் பாதுகாப்பான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றோம் இந்த விபரங்களைச் சேகரிப்பதற்கென இணையதளம் ஊடாக வழங்கப்பட்டிருந்த விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பு தற்போது ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து இலங்கை பிரஜைகள் எவரும் குழப்பமடையத் தேவையில்லை. தொழில்நுட்பக் கோளாறுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டவுடன் தரவுகளைப் பதிவு செய்வதற்கான புதிய இணைய இணைப்பு மிக விரைவில் தூதரகத்தின் உத்தியோகபூர்வ ஊடகப் பக்கங்களில் மீண்டும் வெளியிடப்படும். ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிகத் தாமதங்களுக்காக வருந்துவதாகவும் இக்காலப்பகுதியில் பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. அமீரகத்தில் உள்ள இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவசர காலங்களில் அவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை தடையின்றி வழங்கவும் இவ்வாறான தரவு சேகரிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இலங்கை மின்சார சபை கலைப்பு; 25 மின்சாரசபை தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவியரீதியில்பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டு, அதன் பணிகள் ஆறு தனித்தனி அரசுடைமை நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில்,  ஊழியர்களின் எதிர்காலத் தொழில் பாதுகாப்பு குறித்து எவ்விதத் தெளிவும் வழங்கப்படவில்லை என தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை ஊழியர்கள் 09-03-2026அன்று  முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். 1969ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு, 56 ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்த இலங்கை மின்சார சபை, மார்ச் 8ஆம் திகதி நள்ளிரவுடன் உத்தியோகபூர்வமாகச் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது. 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புதிய மின்சாரச் சட்டத்தின்படி, மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் கட்டமைப்புச் செயல்பாடுகள் எனப் பிரிக்கப்பட்டு, ஆறு புதிய நிறுவனங்கள் பொறுப்புகளை ஏற்றுள்ளன. இந்தத் திடிர் மாற்றத்தினால் ஊழியர்களின் எதிர்காலத் தொழில் பாதுகாப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தங்கள் குறித்து எவ்விதத் தெளிவும் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள மின்சார சபை சுயாதீன தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 25 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.  இந்த மறுசீரமைப்பு மூலம் மின்சாரக் கட்டணம் மேலும் உயரும் அபாயம் உள்ளதாகவும், ஊழியர்களின் தன்னார்வ ஓய்வுத் திட்டம் காரணமாகப் போதிய பணியாளர்கள் இன்றி எதிர்காலத்தில் மின் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இது குறித்து 09-03-2026அன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மின்சார சபை சுயாதீன தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பிரபாத் பிரியந்த குறிப்பிடுகையில், மின்சார சபையின் ‘மரணச் சடங்கு’ நடைபெற்ற இந்நாளில், ஊழியர்களுக்கு எவ்வித ஆக்கபூர்வமான பதிலையோ அல்லது முறையான கூட்டு ஒப்பந்தத்தையோ அரசாங்கம் வழங்கவில்லை. மார்ச் 10ஆம் திகதி புதிய நிறுவனங்களில் இணைவதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவை ஆங்கில மொழியில் மாத்திரமே உள்ளதாகவும், ஊழியர்களின் சம்பளம், பணிபுரியும் இடம் மற்றும் வேலைப்பளு குறித்து அதில் எவ்விதத் தெளிவும் இல்லை. நேற்றைய தினம் (9) பிற்பகல் 3 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பணிப்பகிஷ்கரிப்பின் போது, மின் விநியோகக் கட்டமைப்புப் பராமரிப்புப் பணிகள் மற்றும் திருத்த வேலைகளில் இருந்து ஊழியர்கள் முற்றாக விலகியுள்ளனர். எனினும், மனிதாபிமான அடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைகள் மற்றும் இராணுவத் தலைமையகம் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். எமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான எழுத்துப்பூர்வமான பதிலை வழங்கத் தவறினால், 24 மணித்தியாலங்களுக்குப் பின்னர் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகளில் இருந்தும் ஊழியர்கள் விலக நேரிடும். இந்த மறுசீரமைப்பிற்கு எதிராக மின்சார பொறியியலாளர் சங்கம், தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட மின்சார சபையின் 25 பிரதான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரே நிலைப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. மின்சார சபையை ஆறு துண்டுகளாகப் பிரிப்பதன் மூலம் நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும்  இதன் இறுதிப் பாதிப்பு மின்சாரக் கட்டண உயர்வாக நுகர்வோர் மீதே சுமத்தப்படும். தன்னார்வ ஓய்வுத் திட்டத்தின்  கீழ் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் விலகியுள்ள நிலையில், எஞ்சியுள்ள ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தும் ‘கூட்டு ஒப்பந்தம்’  தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருகிறது.  இது அரசாங்கத்தை முடக்குவதற்கான  முயற்சி அல்ல, மாறாக ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும். 

Continue Reading

மின்சாரசபைதனியார்மயப்படுத்தப்படவில்லை; அமைச்சர்குமாரஜயகொடி

மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.மின்சாரத்துறையை வினைத்திறனாக்குவதற்காக கட்டமைப்பில் மாத்திரமே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். இலங்கை மின்சாரசபை மறுசீரமைக்கப்பட்டமை தொடர்பில் 09-03-2026அன்று  விசேட அறிவிப்பை விடுத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் நேற்றுடன் வெற்றிகரமாக முடிவடைந்தது.நூற்றுக்கு நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமான பங்குகளைக் கொண்டுள்ள நான்கு அரச நிறுவனங்களிடமும், இரண்டு …

Continue Reading

இராணுவ ஆதரிப்பை நிரூபித்தால் பதவியை துறந்து ஒதுங்கத் தயார் : சிவஞானம் சிறிதரன் விசேட செவ்வி

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் பதவி என்னிடமிருந்து பறிக்கப்பட்டமையானது, திட்டமிட்டதொரு அரசியல் சதியாகும். அரசியலமைப்பு பேரவையில் நான் இராணுவத்தை எட்டுத்தடவைகள் ஆதரித்ததாக உறுதிப்படுத்தினால் பதவியைத் துறந்து அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி: பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவியிலிருந்து நீங்கள் நீக்கப்பட்ட விதம் மற்றும் அதற்குப் பின்னால் உள்ள அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்? பதில்: பாராளுமன்றக்குழுத் தலைவர் பதவி நீக்கம் என்பது தற்செயலானது அல்ல, …

Continue Reading

உலகளாவிய பொருளாதார அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய  நிலையில் நாடு; இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் பூகோள அரசியல் நெருக்கடிகள் மற்றும் அதிகரித்துவரும் எரிபொருள் விலைகள் உள்ளிட்ட உலகளாவிய பொருளாதார அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய, ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான நிலையில் நாடு இருப்பாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உத்தரவாதமளித்துள்ளார். ‘ப்ளும்பேர்க்’ சர்வதேச ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலின்போது மேற்கண்டவாறு உத்தரவாதமளித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க, 7 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நாணயக்கையிருப்பு உள்ளடங்கலாக போதிய நிதிக்கையிருப்பு இலங்கையிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். இது, தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துவரும் மோதல்களின் விளைவாக எரிபொருள் விநியோகச்சங்கிலியில் …

Continue Reading