ஏற்றுமதி, வேலைவாய்ப்புமற்றும்வளர்ச்சி: இலங்கையின்வர்த்தகக்கொள்கைதொழிலாளர்நல்வாழ்வைஉறுதிசெய்ததா?
-
Editor
-
August 11, 2026
-
தமிழ் Header, விவரணங்கள்
-
0 Comments
திசுரி ரோஜி ஏகநாயக்க 1970களின் பிற்பகுதியில் இலங்கை தனது பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கியபோது, கொள்கை வகுப்பாளர்கள் ஒரு புதிய பொற்காலத்தை வாக்குறுதி அளித்தனர். தொழிற்சாலைகளின் பெருக்கமும், ஏற்றுமதி வர்த்தகத்தின் விரிவாக்கமும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வறுமையை ஒழிக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால், நான்கு தசாப்தங்கள் கடந்தும் அந்த வாக்குறுதி எவ்வளவு தூரம் நிறைவேறியுள்ளது என்பது இன்றும் ஒரு விவாதப் பொருளாகவே உள்ளது. நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியத்தின் கீழ் ஆய்வாளர் திசுரி ரோஜி ஏகநாயக்க மேற்கொண்ட ஆய்வு, இந்த வரலாற்றை மீள்பார்வை செய்கிறது. …
Continue Reading
இந்தியா-இலங்கை அறிவு பகிர்வு கூட்டாண்மையின் தேவை ஏன்?
ஜீவன் தியாகராஜா இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5சதவீதம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு கையிருப்புகள் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் இலக்குகளையே மீறி முதன்மையான மிகை நிலை அடையப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 2022இன் வீழ்ச்சி கடந்த காலமாகிவிட்டது போல் தெரிகிறது. ஆனால் தேயிலைத் தோட்டப் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தையோ, முல்லைத்தீவில் வசிக்கும் ஒரு தாயையோ, இந்த மீட்சி அவர்களை எட்டிவிட்டதா என்று கேட்டால், பதில் வேறுபட்டதாகவே இருக்கும். தேசியளவில் …
Continue Reading
வர்த்தகக்கொள்கையால் சிறந்தவேலைவாய்ப்புகளைஉருவாக்கமுடியுமா?
-
Editor
-
June 26, 2026
-
விவரணங்கள்
-
விவரணங்கள்
-
0 Comments
நிலுபுலீ ரத்நாயக்க 1977ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச சந்தைக்காக தனது கதவுகளைத் திறந்தபோது, வர்த்தகத் தாராளமயமாக்கல் செழிப்பையும், புதிய தொழில்துறைகளையும், பாதுகாப்பான வேலைவாய்ப்புகளையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகியும், அதன் யதார்த்தம் இன்னும் மிகவும் சிக்கலானதாகவே உள்ளது. வர்த்தகம், பொருளாதாரத்தின் சில பகுதிகளை மாற்றியமைத்திருந்தாலும், ஒரு கசப்பான உண்மை இன்றும் தொடர்கிறது: இலங்கையின் உழைக்கும் சக்தியில் கிட்டத்தட்ட 70 சதவீதமானோர் இன்றும் முறைசாரா தொழில்களில் (Informal Jobs) சிக்கியுள்ளனர். அதாவது சட்டப்பூர்வ ஒப்பந்தங்கள், சமூகப் பாதுகாப்பு அல்லது நம்பகமான …
Continue Reading
வடமாகாணத்தின் எழுச்சிக்கான விவசாய கொள்கை வழிவரைபடம்
ஜீவன் தியாகராஜா இலங்கையின் வட மாகாணம் என்பது வெறும் போர் வடுக்களைச் சுமந்த பூமி மட்டுமல்ல. அது நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்தக்கூடிய பாரிய வளங்களைக் கொண்ட ஒரு பிராந்தியமாகும். 100,000 ஹெக்டெயருக்கும் அதிகமான வயல் நிலங்கள், செழுமையான வெங்காயச் செய்கைக்கான மண் மற்றும் தெற்காசியாவிலேயே மிக வளமான மீன்பிடித் தளங்களைக் கொண்ட கடற்கரைகள் என்று இயற்கை அன்னை வடக்கிற்கு வாரி வழங்கியுள்ளாள். எனினும், தசாப்தங்களாக நிலவும் கொள்கை முரண்பாடுகள் மற்றும் காலநிலை மாற்ற சவால்கள் இந்த வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுத்து வருகின்றன. அந்த …
Continue Reading
நடைமுறையில் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பு அத்தியாவசியங்கள்
-
Editor
-
April 28, 2026
-
விவரணங்கள்
-
விவரணங்கள்
-
0 Comments
ஜீவன் தியாகராஜா கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக, மாகாணங்களின் செழிப்பைத் ஏற்படுத்துவதற்கான அரசியலமைப்பு ரீதியான திறவுகோல் இலங்கையிடம் உள்ளது. ஆனால், அந்தச் திறவுகோலைத் திருப்புவதற்கு நாம் மறுத்துவிட்டோம். 1987இல் இயற்றப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம், எமது சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் மிக முக்கியமான கட்டமைப்புச் சீர்திருத்தமாகத் திகழ்கிறது. இருப்பினும், இன்று அதுவொரு ஆட்சிமுறை இயந்திரமாகச் செயற்படுவதற்குப் பதிலாக, அரசியல் மந்தநிலையின் நினைவுச்சின்னமாகவே காட்சியளிக்கிறது. துரதிர்ஷ்டம் என்னவென்றால், இங்கு சட்டக் கட்டமைப்பு இல்லாதது பிரச்சினையல்ல, மாறாக அதைப்பயன்படுத்துவதற்கான மனவுறுதி இல்லாததே பிரச்சினையாகும். அதிகாரப்பகிர்வு குறித்து நாடு முடிவற்ற …
Continue Reading
அதிகாரப்பகிர்வை சிதைத்தல், மாகாண சபைகளை முடக்குதல்: சீர்திருத்தப் பொதிக்கானவொரு மறுதலிப்பு – கலாநிதி. தயான் ஜயதிலக்க
-
Editor
-
April 9, 2026
-
விவரணங்கள்
-
விவரணங்கள்
-
0 Comments
மிதவாத இன தேசியவாதியும், முன்னணி தாராளவாத ஜனநாயகவாதியும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், ஜப்னா மொனிட்டர் இதழுக்கு அளித்த நேர்காணலில் அதிச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த தகவல் விசித்திரமான முறையில் பலரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி ஒரு ஒருகட்சி ஆட்சியை நிறுவுவதற்கான மிகவும் ஆபத்தான சாத்தியக்கூறுகள் குறித்தே அந்த நேர்காணலில் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். சுமந்திரனின் இந்த எச்சரிக்கை உள்ளுர் அல்லது புலம்பெயர் மக்கள் கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசப்பட்டதல்ல. மாறாக, தமிழீழ விடுதலைப்புலிகள், பிரபாகரன் உட்பட இலங்கையின் மோதல் குறித்து பல தசாப்தங்களாக ஆய்வு …
Continue Reading
வடமாகாணத்தில் மீண்டெழும் பெண் தலைமைத்துவங்களுக்கான வழிவரைபடம்
-
Editor
-
April 7, 2026
-
விவரணங்கள்
-
விவரணங்கள்
-
0 Comments
– ஜீவன் தியாகராஜா இலங்கையின் வட மாகாணம் தற்போது முக்கியமானதொரு கட்டத்தில் நிற்கிறது. இது மகத்தான ஆற்றல் கொண்ட நிலமாக இருக்கின்றதோடு வரலாற்றால் வடுக்களைக் கொண்டிருக்கின்றது. எனினும் அங்குள்ள மக்களின் மீண்டெழும் மீள்திறன் தற்போது அடையாளப்படுத்தப்படுகின்றது. எவ்வாறாயினும், புள்ளிவிபரங்கள் சவால்களின் கடுமையான நிலைமைகளையே காட்டுகின்றன. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 175,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் அதிர்ச்சியளிக்கும் வகையில் 73,681 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுடன், அம்மாகாணம் சமூக-பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இதற்கு வெறும் உதவிகளும், நிவாரணங்களும் மட்டும் போதாது, ஒரு தீவிரமான கட்டமைப்பு …
Continue Reading
‘வடக்கு நுழைவாயில்’ முன்முயற்சி திட்டம் : ‘பிராந்திய ஒருங்கிணைப்பிற்கான வரைபடம்’
-
Editor
-
March 31, 2026
-
விவரணங்கள்
-
0 Comments
ஜீவன் தியாகராஜா ‘வடக்கு நுழைவாயில’ முன்முயற்சியானது இலங்கையின் வட மாகாணத்தை ஒரு மூலோபாய பொருளாதார மையமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டதாகும். இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ‘பாக் ஜலசந்தி வழித்தட சிறப்புத் திட்டத்தை’ (Palk Strait Corridor Excellence Program) தொடங்க வேண்டும். இந்த முன்முயற்சியானது, இந்தியாவின் நிதி, சந்தை வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்காக தென்னிந்திய மாநிலங்களின் உயர்வளர்ச்சி, தொழில் சார்ந்த மாதிரிகளைப் பிரதிபலிக்கிறது. வட மாகாணத்தை ஒரு முன்னணி செழுமை மிக்க மாகாணமாக மறுசீரமைக்க முடியும். அதன்மூலம் வளர்ச்சி சார்ந்த மேம்பாட்டிற்கான (Growth-Led …
Continue Reading
பராமரிப்பிற்கானவொரு தேசிய கட்டமைப்பு ‘வடக்கின் சிறார்களுக்கான பாதுகாப்பு வலையமைப்பை உறுதியாக உருவாக்குதல்’
-
Editor
-
March 19, 2026
-
விவரணங்கள்
-
விவரணங்கள்
-
0 Comments
ஜீவன் தியாகராஜா நாட்டின் வட மாகாணத்தின் எதிர்காலமானது அங்குள்ள 808 அரசாங்கப்பாடசாலைகளில் தங்கியுள்ளது. இதில் 791 மாகாணப் பாடசாலைகளும் 17 தேசியப் பாடசாலைகளும் உள்ளடங்குகின்றன. இந்தப் பாடசாலைகளில் தான் அங்கு கல்வி பயிலும் 295,156 மாணவர்களின் நம்பிக்கைகள் புதைந்துள்ளன. இருப்பினும், பல தசாப்தங்களாக கல்வி முறையானது ஒரு ‘சராசரி’ மாணவனை இலக்கு வைத்து உருவாக்கப்பட்ட இறுக்கமான இயந்திரமாகவே இயங்கி வருகிறது. இந்த அணுகுமுறையானது மெதுவாகக் கற்கும் மாணவர்களை அமைதியாகப் புறந்தள்ளியுள்ளதுடன், மாற்றுத்திறனாளி மாணவர்களைத் தனிமைப்படுத்தியும், தொழிற்கல்வி கற்கும் மாணவர்களைத் தரக்குறைவாகவும் கருதி வந்துள்ளது. 2026-2030ஆம் …
Continue Reading
எதிர்பார்ப்புக்களை அறுவடை செய்தல்: வட மாகாணத்தில் செயற்கை நுண்ணறிவு, கல்வி மற்றும் நீர் பாதுகாப்பு
-
Editor
-
March 16, 2026
-
தமிழ் Header, விவரணங்கள்
-
0 Comments
ஜீவன் தியாகராஜா வட மாகாணத்தின் இதயத்துடிப்பாக விவசாயமே திகழ்கிறது. இது மாகாணத்தின் உழைக்கும் வர்க்கத்தில் ஐந்திலொரு பங்கினருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், 2023ஆம் ஆண்டில் பிராந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.4சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது. இது தேசிய சராசரியை விட கணிசமான அளவு அதிகமாகும். வவுனியாவின் நெல் வயல்கள் முதல் யாழ்ப்பாணத்தின் வெங்காய அறுவடை வரை, விவசாயம் என்பது வெறும் பொருளாதார உந்துசக்தி மட்டுமல்ல் அது ஒரு வாழ்க்கை முறையாகவும் உள்ளது. இருப்பினும், இந்த வாழ்வாதாரம் அண்மைய காலத்தில் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. நாம் 2026-2027 …
Continue Reading