அநுர – மோடி தொலைநோக்கு பார்வைகள் எமக்கு வழிகாட்டுகின்றன; சந்தோஷ் ஜா 

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன. அந்த வழிகாட்டல்களுக்கு அமைய, எமது அனைத்துக் கொள்கைகளும் மக்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைகின்றன என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் பாவனைக்கு தேவையான 134 கெப் ரக வாகனங்களை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன்25-05-2026அன்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், ஜனாதிபதியுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, ஜனவரி 2025 இல் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்ததையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக, இரு தரப்பினரும் மிக நெருக்கமாகவும், கூட்டுப் பொறுப்புடனும் செயற்பட்டதன் விளைவாக, ஆரம்பத்தில் 80 வாகனங்களை வழங்குவதற்குத் தீர்மானித்திருந்த போதிலும், தற்போது அதனை 134 வாகனங்களாக அதிகரித்து வழங்க முடிந்துள்ளமை எமது சிறந்த ஒத்துழைப்பிற்குச் சான்றாகும். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் வெறும் அரசியல் ரீதியானவை மட்டுமல்ல, அவை வரலாற்று ரீதியான மக்கள் பிணைப்பைக் கொண்டவை. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன. அந்த வழிகாட்டல்களுக்கு அமைய, எமது அனைத்துக் கொள்கைகளும் மக்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைகின்றன. அரசாங்கங்கள் என்ற ரீதியில் மக்கள் நலன்சார் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் முன்னெடுக்கும் தூய்மையான நிர்வாகம் மற்றும் நாட்டுக்கான வேலைத்திட்டங்களுக்கு அமைவாக, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குத் தேவையான இந்த உதவிகளை வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்த கெப் ரக வாகனங்கள் உள்ளூர் மட்டத்திலும், சமூக மட்டத்திலும் காவல் சேவையை வலுப்படுத்த உதவும். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால நட்புறவும், மக்களின் பிணைப்பும் எதிர்காலத்தில் மேலும் பலமடையும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கை உண்டு என்றார்.

Continue Reading

ரணிலின் தர்க்கத்தை முன்வைக்கும் ரில்வின்; தயாசிறி

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட தர்க்கத்தையே மாகாணசபைத் தேர்தல் விவகாரத்தில் ரில்வின் சில்வா குறிப்பிடுகிறார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக ரில்வின் சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாணசபைத் தேர்தலை இந்தாண்டு நடத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதொரு …

Continue Reading

மக்கள் பிரிதிநிதியாக இல்லாதவர்கள் தீர்மானங்களை எடுப்பது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்; ஐக்கிய மக்கள் சக்தி

அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களை அமைச்சரவையோ, ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எடுப்பதில்லை. மக்கள் பிரதிநிதியாக இல்லாத ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா போன்றவர்களே நாட்டை வழிநடத்துகின்றனர். மக்கள் பிரதிநிதியாக இல்லாத ஒருவர் நாட்டின் கொள்கைகளை வகுக்கும் அளவுக்கு சக்திவாய்ந்தவராக மாறியிருப்பது நாட்டின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 25-05-2026அன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் முடிவுகளை அமைச்சரவையோ, ஜனாதிபதியோ அல்லது …

Continue Reading

அரசாங்கம் டொலரின்மதிப்பைவெற்றிகரமாகக்கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்துள்ளது;அமைச்சர்வசந்தசமரசிங்க

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரத்தை பாதுகாத்து மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் உள்நாட்டுச் சந்தையில் டொலரின் மதிப்பை அரசாங்கம் வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று வர்த்தக வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் …

Continue Reading

வாகனங்களுக்கான லீசிங் வசதி திடீரெனக் குறைப்பு;இறக்குமதியாளர்கள் சங்கம்

மத்திய வங்கியினால் வாகனங்களுக்கான லீசிங் வசதி திடீரென 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பது, முறையாக வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்துள்ள வர்த்தகர்களைப் பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார். அரசாங்கத்திற்குப் பாரிய வருமானத்தை ஈட்டித் தரும் இத்துறையை நம்பி சுமார் 30 முதல் 40 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் திடீர் சுற்றறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் அவசர …

Continue Reading

தங்கப் பிணையுறுதி மற்றும் மோட்டார் வாகன கடன் வசதிகளுக்கான உச்ச வரம்பு இறுக்கம்; இலங்கை மத்திய வங்கி

உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் தங்கத்தால் பிணையுறுதி அளிக்கப்பட்ட கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்சம் 70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பு 10 சதவீதத்தினால் இறுக்கமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இம்மாதம் 25-05-2026அன்று  முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தங்கத்தால் பிணையுறுதி அளிக்கப்பட்ட கொடுகடன் வசதிகளின் பெறுமதிக்கான கடன் உச்ச வரம்பை அறிமுகப்படுத்துவதற்கும், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கொடுகடன் …

Continue Reading

40 நாடுகளுக்கு இலவச விசா; இலங்கை அறிவிப்பு

இலங்கையின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் 25-05-2026அன்று முதல்  அமுல்படுத்தப்பட்டுள்ளது.   குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அந்த சுற்றறிக்கைக்கு அமைய  கடந்த 2026 மார்ச் 30ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதி மற்றும் அதனைத் தொடர்ந்து  பாராளுமன்றத்தில்  அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா , பஹ்ரைன், பெலாரஸ் ,பெல்ஜியம் ,கனடா ,சீனா, செக் குடியரசு, டென்மார்க் ,பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ,இந்தியா …

Continue Reading

‘More than a decade’: CPA raises concerns over continued delay in PC elections

The Centre for Policy Alternatives (CPA) has called on the Government to urgently hold long-delayed Provincial Council elections, warning that the continued failure to do so is a “serious breach” of constitutional obligations and democratic rights. CPA also urged immediate legal reforms and a clear roadmap to restore elected provincial governance. Elections are not a matter of political convenience; they …

Continue Reading

පළාත් සභා මැතිවරණය ගැන ටිල්වින් සිල්වා කළ ප්‍රකාශය විකල්ප ප්‍රතිපත්ති කේන්ද්‍රය හෙළා දකී

දිගු කලක් ප්‍රමාද වූ පළාත් සභා මැතිවරණ කඩිනමින් පවත්වන ලෙස විකල්ප ප්‍රතිපත්ති කේන්ද්‍රය (CPA) රජයෙන් ඉල්ලා සිටින අතර, එසේ නොකිරීම අඛණ්ඩව ව්‍යවස්ථාපිත බැඳීම් සහ ප්‍රජාතන්ත්‍රවාදී අයිතිවාසිකම් “බරපතල ලෙස උල්ලංඝනය කිරීමක්” බවට අනතුරු අඟවයි. තේරී පත් වූ පළාත් පාලනය යථා තත්ත්වයට පත් කිරීම සඳහා ක්ෂණික නීති ප්‍රතිසංස්කරණ සහ පැහැදිලි මාර්ග සිතියමක් ද විකල්ප ප්‍රතිපත්ති කේන්ද්‍රය ඉල්ලා සිටියේය. මැතිවරණ යනු දේශපාලන පහසුව …

Continue Reading

අල්ලස් කොමිෂමේ අධ්‍යක්ෂ ජනරාල් ගැන පොහොට්ටු මහ ලේකම් කළ විශේෂ ඉල්ලීම

ශ්‍රී ලංකන් ගුවන් සේවයේ හිටපු සභාපති කපිල චන්ද්‍රසේන සම්බන්ධ නීතිමය ක්‍රියාමාර්ග වලදී බලය අනිසි ලෙස භාවිතා කිරීම සහ නීති විරෝධී ලෙස හැසිරීම යන චෝදනා මත අල්ලස් කොමිෂමේ අධ්‍යක්ෂ ජනරාල්වරයා සේවයෙන් ඉවත් කරන ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණේ මහ ලේකම් සාගර කාරියවසම් රජයෙන් ඉල්ලීක් කරයි. නීති විරෝධී ඇපකරුවන් ඉදිරිපත් කර ඇති බවට කරන ලද ප්‍රකාශ මත කපිල චන්ද්‍රසේනගේ ඇප අවලංගු කරන ලෙස …

Continue Reading